11 வயது சிறுமியை காணவில்லை! காவல்துறை மக்களிடம் உதவிக்கோரிக்கை!

12 ஆனி 2025 வியாழன் 23:16 | பார்வைகள் : 3947
Yvelines மாவட்டத்தில் Vésinetஇல் வசிக்கும் 11 வயது ஹஃஸா (Hafsa) என்ற சிறுமி கடந்த புதன்கிழமை மாலை முதல் காணாமல் போயுள்ளார். அவர் கடைசியாக நீல மற்றும் சிவப்பு மலர் வடிவமைப்புகளுடன் கூடிய இளஞ்சிவப்பு மேற்சட்டை மற்றும் கருப்பு சப்பாத்துகளையும் அணிந்திருந்தார்.
அவரது உயரம் சுமார் 1.50மீ - 1.55மீ, பிறவுன் நிற கண்கள் மற்றும் நீளமான சுருட்டிய முடிகளை கொண்டவர். காவல்துறையினர் ஹஃஸாவை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை நாடி தகவல்களுக்காக 01.39.10.91.03 என்ற எண்ணை வழங்கியுள்ளனர்.
பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 43,000 சிறுவர் மாயமாகும் புகார்கள் வருகின்றன, இதில் 96% தற்காலிகமாக வீட்டைவிட்டு ஓடிப்போனவர்கள் (fugue) ஆகும். மீதமுள்ள சந்தேகத்துக்கிடமான மாயங்களில் பெரும்பாலானவை பெண்களைச் சார்ந்தவை. ஹஃஸா சம்பவமும் இது போன்ற மிக கவலையூட்டும் நிலையை உருவாக்கியுள்ளது.