Paristamil Navigation Paristamil advert login

அஜித் - ஆதிக் அடுத்த படத்தின் நாயகி இவரா?

அஜித் - ஆதிக் அடுத்த படத்தின் நாயகி  இவரா?

12 ஆனி 2025 வியாழன் 12:27 | பார்வைகள் : 5719


அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த படத்தில் நடிக்கும் நாயகி மற்றும் தயாரிப்பாளர் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான 'குட் பேட் அக்லி' திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றதை அடுத்து, மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இது அஜித்தின் 64-வது படம். இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் நாயகியாக நடிக்க ஸ்ரீநிதி ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அஜித்துக்கும் ஸ்ரீநிதி ஷெட்டிக்கும் உள்ள வயது வித்தியாசம் 22 என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் நவம்பர் மாதம் தான் அஜித் படப்பிடிப்புக்கு தேதி கொடுத்துள்ளதாகவும், அதற்குள் அஜித் இல்லாத காட்சிகளை படமாக்க ஆதிக் ரவிச்சந்திரன் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், இந்த படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026