Paristamil Navigation Paristamil advert login

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஜனாதிபதி மக்ரோன் !!

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஜனாதிபதி மக்ரோன் !!

10 ஆனி 2025 செவ்வாய் 10:24 | பார்வைகள் : 2485


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று ஜூன் 10 செவ்வாய்க்கிழமை France 2  தொலைக்காட்சியில் சிறப்பு விருந்தினராக  கலந்துகொள்கிறார்.

ஆழ்கடல் உச்சிமாநாடு நீஸ் நகரில் நேற்று  ஆரம்பமானது. ஜூன் 19 நேற்று திங்கட்கிழமை முதல் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை  இந்த மாநாடு இடம்பெற உள்ளது. 70 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர். 

மாநாடு தொடர்பான கேள்விகளுக்கு மக்ரோன் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.  இரவு 8 மணிக்கு நேரலையாக இடம்பெறும் இந்த நிகழ்ச்சியில் ஊடகவியலாளர்கள் Léa Salamé ம்ற்றும் Hugo Clément ஆகிய இருவரும் தொகுத்து வழங்குவார்கள்.

பெருங்கடலை பாதுகாப்பது தொடர்பில் பல முக்கிய முடிவுகள் எட்டப்படும் என எதிர்ப்பாக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்