Paristamil Navigation Paristamil advert login

'ஜனநாயகன்' டீசர் விஜய் பிறந்த நாளில் ?

'ஜனநாயகன்' டீசர் விஜய் பிறந்த நாளில் ?

9 ஆனி 2025 திங்கள் 17:06 | பார்வைகள் : 1149


தளபதி விஜய் நடித்த கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், விரைவில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் ஆண்டுதோறும் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி, அவர் நடிக்கும் படத்தின் அப்டேட் வெளியாகும் நிலையில், இந்த ஆண்டு ஜூன் 22ஆம் தேதி ‘ஜனநாயகன்’ படத்தின் டீசர் வெளியாகும் அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷல் விருந்தாக ரசிகர்களுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, இந்த படம் குறித்த வேறு சில திட்டங்களையும் படக்குழு அமைத்துள்ளது. ஆகஸ்ட் மாதம் ஃபர்ஸ்ட் சிங்கிள், அக்டோபர் மாதம் செகண்ட் சிங்கிள் மற்றும் புத்தாண்டு தினத்தில் டிரைலர் வெளியிடப்படும் என திட்டமிட்டுள்ளனர்.

அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ள ‘ஜனநாயகன்’ படம், விஜய்யின் கடைசி படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கும் நிலையில் மமிதா பாஜு, பிரியாமணி, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு, கலை இயக்குனராக செல்வகுமார், படத் தொகுப்பாளராக பிரதீப் ராகவ், உடை வடிவமைப்பாளராக பல்லவி, பப்ளிசிட்டி டிசைனராக கோபி பிரசன்னா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்