பனைமரம் முறிந்து விழுந்து -Cannes திரைப்பட விழாவில் அசம்பாவிதம்..!!

17 வைகாசி 2025 சனி 17:53 | பார்வைகள் : 5375
Cannes திரைப்படவிழாவுக்காக தங்க முலாம் பூசப்பட்ட பனை மரம் ஒன்று சில நாட்களுக்கு முன்னர் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பனைமரம் ஒன்று பேசுபொருளாகியுள்ளது.
இன்று மே 17, சனிக்கிழமை காலை Cannes திரைப்பட விழா முழு மூச்சாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது Croisette அரங்கிற்கு முன்பாக நடந்து சென்ற ஒருவர் மீது திடீரென பனைமரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. இதில் அவர் படுகாயமடைந்துள்ளார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
இன்று காலை வீசிய பலத்த காற்றின் காரணமாக பனைமரம் முறிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக இந்த வாரம் திரைப்பட விழா ஆரம்பமாவதற்கு முன்னர் அங்குள்ள பனைமரம் ஒன்றுக்கு €100,000 யூரோக்கள் செலவில் தங்கமுலாம் பூசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.