Paristamil Navigation Paristamil advert login

நுவரெலியாவில் பேருந்து விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அருகில் மீண்டும் விபத்து - பலர் காயம்

நுவரெலியாவில் பேருந்து விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அருகில் மீண்டும் விபத்து - பலர் காயம்

14 வைகாசி 2025 புதன் 15:28 | பார்வைகள் : 3602


அண்மையில்  பேருந்து விபத்து இடம்பெற்ற நுவரெலியா கொத்மலை, கெரண்டியெல்ல பகுதிக்கு அருகில் மற்றுமொரு விபத்து சம்பவம் இன்று இடம்பெற்றுள்ள நிலையில், குறித்த  விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்றைய தினம் மாலை நுவரெலியா - கொழும்பு பிரதான வீதியில் வேன் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் சுவசெரிய அம்பியூலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான வேனில்  முதியவர்கள்  மற்றும்  சிறுவர்கள் உட்பட சுமார் 10 க்கும் மேற்பட்டவர்கள் பயணித்துள்ளனர்.

"பெரிய சத்தம் ஒன்று கேட்டு, வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தேன். மூன்று சிறுவர்கள் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதை பார்த்தேன் என விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த 42 வயதுடைய நபர் தெரிவித்துள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்