Paristamil Navigation Paristamil advert login

யாழில் வீதியோரத்தில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த வயோதிபருக்கு நேர்ந்த கதி

யாழில் வீதியோரத்தில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த வயோதிபருக்கு நேர்ந்த கதி

15 சித்திரை 2025 செவ்வாய் 10:48 | பார்வைகள் : 9024


யாழ்ப்பாணத்தில் வீதியோரமாக நின்று நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

வல்வெட்டித்துறை ஆதி கோவிலடியை சேர்ந்த 65 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார். 

வயோதிபர் கடந்த 11ஆம் திகதி தனது வீட்டுக்கு அருகில் சைக்கிளை நிறுத்தி வைத்து வீதியோரமாக நின்று தனது நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்துள்ளார்.

இதன்போது வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வயோதிபர் மீது மோதியுள்ளது.

விபத்தில் வயோதிபரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வயோதிபர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
 

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026