Aulnay-sous-Bois : பெண் படுகொலை.. கணவர் கைது!!
3 மார்கழி 2024 செவ்வாய் 10:28 | பார்வைகள் : 14955
Aulnay-sous-Bois (Seine-Saint-Denis) நகரில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவரது சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர். அப்பெண்ணின் கணவரைக் கைது செய்துள்ளனர்.
டிசம்பர் 2, நேற்று திங்கட்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்ட 29 வயதுடைய பெண் ஒருவர் காவல்துறையினரை அழைத்துள்ளார். சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்தபோது அங்கு நிலமை கைமீறிச் சென்றிருந்தது. காவல்துறையினரை அழைத்த குறித்த பெண் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். அவரது 5 வயது மகன் மாத்திரம் சம்பவ இடத்தில் உயிருடன் இருந்துள்ளார்.
அப்பெண்ணைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் அவரது கணவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். கணவர் 24 வயதுடையவர் எனவும், மீட்கப்பட்ட மகன் அப்பெண்ணின் முன்னாள் கணவரது பிள்ளை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தலைமறைவாகியிருந்த குறித்த 24 வயதுடைய நபர் சில நிமிடங்களிலேயே கைது செய்யப்பட்டார். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan