பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவருக்கு - ஒருவருட சிறை!!
10 கார்த்திகை 2024 ஞாயிறு 17:17 | பார்வைகள் : 2696
பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவருக்கு ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Vincent P எனும் 26 வயதுடைய ஒருவருக்கு, நேற்று நவம்பர் 9, சனிக்கிழமை இந்த சிறைத்தண்டனை பரிஸ் குற்றவியல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டது. குறித்த நபர் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து சுகயீன விடுமுறையில் இருக்கும் குறித்த நபர், தனது பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் வேலையை பயன்படுத்தி தைரியமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.
அவரை கடந்த நவம்பர் 7 ஆம் திகதி வியாழக்கிழமை பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் €1,400 யூரோக்கள் பணமும், 50 கிராம் கொக்கைன் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் வசிக்கும் rue des Petites-Écuries வீதியில் உள்ள அவரது வீடு சோதனையிடப்பட்டது. அங்கிருந்து மேலும் சில போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன.
அதை அடுத்து, நேற்று அவருக்கு ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.