பரா ஒலிம்பிக் நிறைவுநாள் நிகழ்ச்சி.. பிரதமர் Michel Barnier பங்கேற்பு..!
8 புரட்டாசி 2024 ஞாயிறு 12:34 | பார்வைகள் : 2999
செப்டம்பர் 8, இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் பரா ஒலிம்பிக் போட்டிகள் அனைத்தும் நிறைவடைகின்றன. நிறைவுநாள் நிகழ்வுகள் Stade de France அரங்கில் மிக பிரம்மாண்டமாக இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதமர் Michel Barnier கலந்துகொள்ள உள்ளார்.
பரா ஒலிம்பிக் போட்டிகள் சிறப்பாக நடைபெறக் காரணமாக இருந்த ஊழியர்கள், மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் அனைவரையும் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவிக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.