Paristamil Navigation Paristamil advert login

1000 கோடியை நெருக்கும் உலக  சனதொகை!

1000 கோடியை நெருக்கும் உலக  சனதொகை!

13 ஆடி 2024 சனி 11:13 | பார்வைகள் : 5838


எதிர்வரும் 2080ஆம் ஆண்டளவில் உலக மக்கள் தொகை 1030 கோடியை எட்டும் என ஐ.நா சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உலக மக்கள் தொகை 820 கோடியாக பதிவாகியுள்ளது.

இது 2080ஆம் ஆண்டாகும் போது 1030 கோடியை எட்டும் என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2080ஆம் ஆண்டில் உலக சனத் தொகை உச்சத்தை அடைந்து, அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும் என்று குறிப்பிட்டுள்ளது.


தற்போது பிறக்கும் குழந்தைகள் சராசரியாக 73.3 வயது வரை உயிர் வாழ்வார்கள் என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.   
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்