வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
040717
Bail விற்பனை Paris 12
050717
வீடுகள் வாடகைக்கு, விற்பனைக்கு
040717
தேவை
040717
வேலையாள்த் தேவை
040717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
தேவை
270617
Bail விற்பனைக்கு
150617
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
குடியிருப்பு வரி - 2018 இல் 80% நீக்கப்படும் - அரசாங்கத்தின் வாக்குறுதி!!
France Tamilnews
அவதானம்!! உந்துருளிகளின் இலக்கத்தகடுகள் சனிக்கிழமைக்கு முதல்!!
France Tamilnews
கசக்கும் இல்லறம் - இனிக்கும் கள்ள உறவு
14 November, 2016, Mon 11:33 GMT+1  |  views: 1621
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 முறையான திருமணம் நடந்த பின்னரும், குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது மோசமானதும் அருவருப்பானதும் ஆகும். இது வாழ்க்கைத் துணைக்கும், குழந்தைகளுக்கும் துரோகம் இழைக்கும் செயலாகும். இது ஒன்றும் புதிதல்ல. நீண்ட காலகமாகவே சமூகத்தில் இருந்து வருகின்ற கூட உறவு ஆகும். 

 
கள்ளக்காதல் ஆபாசம், அசிங்கம் என்ற நிலைகளையும் தாண்டி வன்முறையில் முடிகின்றது. முந்தைய கணவன்/ மனைவியைக் கொல்லுதல், கள்ளக்காதலனையோ காதலியோ ஆளை வைத்து தீர்த்துக் கட்டுதல், உறவுக்கு தடையாக இருக்கும் பிள்ளைகளை பெற்றோர்களே கொல்லுதல் என்ற அளவிற்கு நிலமை மோசமாகிக் கொண்டே போகிறது.
 
வழக்கம்போல் இதிலும் அதிக பாதிக்கப்படுவது பெண்களே! 
 
அவமானம் தாங்க முடியாமல் இறுதியில் தற்கொலை செய்து கொள்வதால் எதும் அறியாத குழந்தைகள் அனாதைகளாகி நடுத்தெருவில் நிற்கின்றன. 
 
பொருந்தாத திருமணங்கள் ஏமாற்றத்தில் முடிவடைகின்றன. பணப்பொருத்தமும், ஜாதகப் பொருத்தம், குடும்பப்பொருத்தம், ஜாதி, குல, கோத்திரப் பொருத்தம் பார்க்கின்றார்கள். ஆனால் மனப்பொருத்தம் பார்க்க தவறிவிடுகின்றனார். படிப்பு, அறிவு, அழகு, பொழுதுபோக்கு, வேலைக்குச் செல்லுதல், நம்பிக்கை, கொள்கைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துபவர்கள் மணம் முடிக்க இருப்பவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை கவனிக்கத் தவறி விட்டனர்.
 
இதன் விளைவு இவர்கள் வாழ்வில் மோதல்களும், சண்டைகளும்! இறுதியில் தனது விருப்பத்தோடு ஒத்துப் போகின்ற ஒரு துணையைத் தேடிச் செல்கின்றர்கள்.
 
தாம்பத்திய வாழ்வில் திருப்தியுறாத நிலை சிலரை கள்ள உறவுக்கு இட்டுச் செல்கிறது. இதற்கு உடல் மற்றும் மனம் சார்ந்த காரணங்கள் உண்டு. அன்பு ஆதரவு இல்லாத உறவுகள், சண்டை சச்சரவு நிறைந்த சூழலில் வாழ்பவர்கள் அன்பைத்தரும் ஒருவனை ஒருத்தியை நாடிச் செல்கின்றனர்.
 
மேற்கூறப்பட்ட அனைத்துச் காரணங்களினாலும் திருமண பந்தத்தில் விரிசல் ஏற்படுகின்றன இவர்கள் சட்டப்பூர்வமான மணவிலக்குப் பெற விரும்பினாலும் அது மிகவும் சிக்கலாக ஆகிவிட்டது.
 
கால தாமதம் ஆகிறது என்பதாலும் இன்னும் சிலர் குடும்ப கெளரவம், குழந்தைகளின் எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விவாகரத்து பெற முயற்சி செய்வதில்லை. இத்தகைய சூழ்நிலைகளில் உள்ள உறவுகள் வழி தவறுகின்றன. திருமணங்களை நீண்ட காலத்திற்குத் தள்ளிப் போடுவதால் தமது ஆசைகளுக்கு வடிகாலாக ஏற்கனவே திருமணமான ஒருவனோடு/ ஒருத்தியோடு உறவு கொள்கின்றனர்.
 
கணவனும், மனைவியும் நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்தாலும் கள்ள உறவுகள் உருவாகின்றன. நீண்ட நாட்களாகப் பிரிந்திருக்கும் பெரும்பாலான குடும்பங்களில் இது நிகழ்கின்றன என்று சொல்ல முடியாது. மற்ற குடும்பங்களை விட இந்தக் குடும்பங்களில் இதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒழுக்கத்தில் மிகவும் பிடிப்புள்ளவர்கள் ஒழுக்கக்கேட்டிலிருந்து தம்மைக் காத்துக் கொள்கின்றனர். ஆனால் பலவகையான மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
 
ஆண்களும் பெண்களும் எவ்விதத் தடையுமின்றி நெருங்கிப் பழகுவதாலும் ஆபத்துகள் விளைகின்றன. வீட்டிலோ, அலுவலகத்திலோ சந்தித்து சில வார்த்தைகள் பரிமாறிக் கொண்டோம் என்ற நிலையைத் தாண்டும் போது விளைவுகள் மோசமாகின்றன. கூட்டுக் குடும்பங்களில் இந்த ஆபத்துகள் அதிகம் இருக்கின்றன. உறவுகளில் ஒரு இடைவெளி நிர்ணயம் செய்து கொண்டால் இத்தகைய ஆபத்துகளைத் தவிர்க்கலாம். கணவரின் நண்பர்களிடமும் இடைவெளி விட்டே தேவை ஏற்பட்டால் மட்டுமே பேச வேண்டும்.
 
வீட்டிற்கு வெளியே கள்ள உறவுக்கான வாய்ப்புகள் அதிகம். இதில் முதலிடம் வகிப்பது வேலை பார்க்கும் அலுவலகங்களே! எவ்வித தவறான எண்ணமும் இல்லாமல் சாதாரணமாகப் பழக ஆரம்பித்துப் பின்னர் தனது கஷ்டங்களையும், மன உளைச்சல்களையும் பரிமாறுவதுடன் நாளடைவில் குடும்ப ரகசியங்களைப் பேச ஆரம்பித்து விடுகின்றனர். தீய எண்ணம் கொண்டவர்கள் இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வர்.
 
குடும்ப அமைப்பில் கிடைக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கள்ள உறவுகளில் ஒரு போதும் கிட்டாது. தற்காலிகமாகக் கிடைக்கும் இன்பத்திற்காக நிலையான இன்பத்தினை இழந்து விடுபவர்களை மூடர்கள் எனலாம்.
 
paristamil
திரு றொனால்ட் கிளைவ்
மண்ணில்:28-02-1973
விண்ணில்:14-07-2017

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட றொனால்ட் கிளைவ் அவர்கள்

பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது?
  பின்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தாழ்வு மனப்பாண்மை
பொதுவாக தமக்குள்ளே சண்டைபிடிக்கும் பெற்றோர்கள், பிள்ளைகளை குறைத்து மதிப்பிடும், அவர்களை அளவுக்கதிகமாக கட்டுப்படுத்தும் பெற்றோர்கள
21 July, 2017, Fri 11:49 | views: 517 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண்கள் கணவனை ஏமாற்றுவதற்கான காரணங்கள்
பெண்கள் தன் கணவனை சில மன உளைச்சலால் தான் ஏமாற்றுகிறார்களாம். அவர்கள் மனதில் உண்டாகும் வலி, ஏன்தான் இவரை திருமணம் செய்தோமோ என்று ச
14 July, 2017, Fri 11:25 | views: 3143 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கணவன் மனைவிக்குள் சண்டை வர இது தான் காரணம்
திருமண வாழ்க்கையில் மோதல்கள் உண்டாவதை எளிமையான ஒரு விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது. கணவன் மனைவி உறவு என்பது உடலில் உயிர் இருக்கும
11 July, 2017, Tue 12:41 | views: 1977 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விதி மீது பழி போடுபவர்கள் வெற்றியை நெருங்க முடியாது
தோல்விகளே தோழனாக வளர்ச்சிக்கு துணை நின்று கொண்டிருக்கும். இந்த உண்மையை உணர்ந்து கொண்டு செய்யும் தொழிலிலோ, படிப்பிலோ தோல்வியை சந்த
5 July, 2017, Wed 16:58 | views: 1510 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செல்போனில் இருக்கும் அதிக ஆபத்துகள்
இன்றைய உலகம் செல்போன் யுகம் என்று சொல்வது மிகையே அல்ல. மனிதனின் 6-வது விரல் செல்போன் என்றே கூறலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள்
28 June, 2017, Wed 12:10 | views: 2265 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS