Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
பாதிப்பை ஏற்படுத்தும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்
7 November, 2016, Mon 9:59 GMT+1  |  views: 1184

 ஆலூடிக்கி, சுவீட் கார்ன், பரோட்டா, தால் மக்கானி, ஷாஹி பன்னீர், பாலக் பன்னீர், சன்னா மசாலா என பாக்கெட்டில் ரெடிமேடாக அடைப்பட்டு கிடைக்கும் உணவு பொருட்களின் பட்டியல் வெகு நீளம். அவைகளை கத்தரித்து கொதிக்கும் நீரில் கொட்டினால் போதும், மூன்றே நிமிடங்களில் உணவு வகைகள் தயாராகி விடும். அடிக்கடி உணவகங்களுக்கு செல்ல முடியாதவர்கள் இந்த வகை தயார் நிலையில் உள்ள உணவு வகைகளை வீட்டில் சமைத்து குடும்ப உறுப்பினர்களை சந்தோஷப்படுத்துகிறார்கள். அதிலும் ஏதோ வாய்க்கு ருசியாக சாப்பிட்டால் போதும் என்ற நினைப்பில் இருப்பவர்கள் விரும்பி சுவைக்கிறார்கள்.

 
பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க அதில் அளவுக்கு அதிகமாக சோடியம் கலக்கப்படுகிறது. இது இதய நோய்களுக்கும், சிறுநீரக பாதிப்புக்கும் காரணமாகிறது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய்க்கும் இது துணை புரிகிறது. இதுபோன்ற உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் காய்கறி, பழங்கள் சாப்பிடுவது குறைந்து போகிறது. அதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போய்விடுகிறது.
 
உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவு எப்படி தயாரிக்கப்பட்டது? தூய்மையானதா? இல்லையா? என்ற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கும். மேலும் ஓட்டல்களில் சுவையான உணவை சாப்பிட அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும். அதனால் பெரும்பாலானோர் இந்த வகை ‘ரெடிமேட்’ உணவுகளை வாங்கி சாப்பிட்டு தங்கள் ஆசையை பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.
 
பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் எந்த சூழ்நிலையில் தயாரிக்கப்பட்டது? அதிலிருக்கும் காய்கறிகள், இதர பொருட்கள் சாப்பிட ஏற்றது தானா? தூய்மையாக, சுகாதாரமாக பேக்கிங் செய்யப்பட்டதா? உடலுக்கு தீமை விளைக்கும் விதத்திலான பொருட்கள் எதுவும் சேர்க்கப்பட்டுள்ளதா? போன்ற எதுவும் தெரியாமல் அவசரத்திற்கு அதை வாங்கி சாப்பிட்டு விட்டு உடலை கெடுத்துக்கொள்வதில் அர்த்தமில்லை. காய்கறி சாப்பிடுவதன் பயன் அதில் இருப்பதில்லை. 
 
ஆனாலும் வேறு வழி இல்லாமல் சில நேரங்களில் சாப்பிட வேண்டியிருக்கும். அவசர வேலை, திடீர் விருந்தாளிகள் வருகை, கடையடைப்பு போன்ற சூழ்நிலைகளின்போது சாப்பிட்டு கொள்ளலாம். ஆனால் இதையே வழக்கமாக்கிக் கொள்வது நல்லதல்ல என்கிறார்கள், மருத்துவர்கள். இன்று சிறுவயதிலேயே தோன்றும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு இதுபோன்ற உணவு வகைகளே காரணம் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. இதுபோன்ற உணவுகளை தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சாப்பிடுவதாக இருந்தால் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
 
* தயாரிப்பு தேதி, காலாவதி தேதியை பார்த்து வாங்க வேண்டும்.
 
* காலாவதி தேதிக்கு சில நாட்கள் மட்டுமே இருந்தாலும் வாங்கி விடாதீர்கள். முக்கியமாக பால், தயிர், இறைச்சி வகைகளை காலாவதி தேதிக்கு முன்பே சாப்பிட்டு விடுங்கள். வெளியூர் பயணம், சுற்றுலா செல்லும் நேரங்களில் மட்டும் குறைந்த அளவில் இதனை பயன்படுத்துங்கள்.
 
* அந்த உணவு பொருட்களில் கலக்கப்பட்டிருக்கும் சோடியம் அளவை கவனியுங்கள். ஒரு நாளைக்கு ஒன்றரை கிராம் சோடியம் உட்கொள்ளலாம். அதுவும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். அளவு மீறினால் ஆபத்தாகி விடும்.
 
* நீங்கள் வாங்கும் பதப்படுத்தப்பட்ட உணவில் குறிப்பிடப்பட்டிருக்கும் கலோரி, கொழுப்பு அளவு, ரசாயன கலவை விவரம் முதலியவற்றை கூர்ந்து கவனிக்க வேண்டியது அவசியம்.
 
* அன்றாடம் நிறைய பேர் சாப்பிடும் உணவு வகைகளான ப்ரெட், பட்டர், பிஸ்கெட் போன்றவற்றிலும் சோடியம் கலந்துள்ளது. அவைகளையும் குறைந்த அளவிலே சாப்பிடுங்கள்.
 
பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகி விட்டது. அவசர கதியில் இயங்கும் மக்களுக்கு இது வரப்பிரசாதம்தான். ஆனால் இந்த வகை உணவுகளில் சத்துக்கள் இருப்பதில்லை. நோய் எதிர்ப்பு சக்தியும் இல்லை. அதனால் பல்வேறு உடல்நல குறைபாடுகள் தோன்றும் அபாயம் உருவாகிறது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 போலோமீட்டர் (Bolometer)

வெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கூந்தல் வெடிப்பை தடுக்கும் வீட்டு வைத்தியம்
சிலருக்கு கூந்தலின் முனைகள் பிளவுபட்டு இருக்கும். இப்படி முடியின் முனைகளில் வெடிப்புக்கள் இருந்தால், முடியின் வளர்ச்சி தடுக்கப்பட
17 September, 2018, Mon 15:32 | views: 416 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சருமத்திற்கு பூசணி தரும் அழகு
பூசணிக்காயை சமையலுக்கு மட்டுமின்றி சரும அழகுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதிலிருக்கும் வைட்டமின் ஏ, சி மற்றும் ஆன்டி ஆக்சிடெண்ட
14 September, 2018, Fri 11:11 | views: 362 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள்
கண்ணுக்கு கீழ் ஏற்படும் கண் கருவளையத்தால் பெரும்பாலான பெண்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர். அதிலும் திருமணமாகாத பெண்களுக்கு கண் கரு
8 September, 2018, Sat 14:15 | views: 629 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவு முறைகள்
ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள் வயது முதிர்ச்சியாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வடைவதே. அதனால் மூளை சரியாக எதையும் ஞாப
6 September, 2018, Thu 11:17 | views: 997 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அழகை பாதுகாப்பது எப்படி?
அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக இளம்பெண்கள் பலர் எடைக் குறைப்பில் ஈடுபடுகின்றனர். அதன் காரணமாக காலை உணவை தவிர்க்கின்றனர். சிலர்
4 September, 2018, Tue 11:06 | views: 588 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
வீடு (appartement) வாடகைக்கு LE BOURGET 53m2, - 980 euro வாடகை +120 euros charges
980 €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS