அந்தரங்கங்களை அம்பலப்படுத்தும் கழிவறைகள்! வீடியோ இணைப்பு
2 October, 2016, Sun 20:17 GMT+1 | views: 780
சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்க, வெளிப்படையாக தெரியும் கண்ணாடி சுவர்களை கொண்ட கழிவறைகளை சீனா நிர்மாணித்துள்ளது.
சீனாவின் தென் பகுதி மாகாணமான ஹூனான் மாகாணத்தில் ஷியான் என்ற குளத்திற்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் இந்த கழிவறை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்ணாடி கழிவறையில் இருந்தபடி காட்டின் இயற்கையை ரசிக்க முடியும் என்பதுடன் வேறு ஒருவர் கழிவறையை பயன்படுத்துவதையும் காணமுடியும்.
கண்ணாடி பெட்டிகள் போல் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கழிவறைகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன.
அடுத்த கழிவறையில் இருக்கும் நபர் மங்கலாக தெரியும் வகையிலேயே இந்த கண்ணாடி கழிவறை அமைக்கப்படடுள்ளது.
கழிவறை திறந்து வைக்கப்பட்ட நாளில் ஒரு சிலரே அதனை பயன்படுத்தியுள்ளனர். சீனாவில் கண்ணாடிகளை பயன்படுத்தி நிர்மாணிப்புகளை மேற்கொள்வது பிரபலமாக இருந்து வருகிறது.
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.