வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
170317
தேவை-வீடு
130317
வீடு வாடகைக்கு
110317
Bail விற்பனைக்கு
060317
வீடு விற்பனை
030317
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அரிய சந்தர்ப்பம்!! உணவகங்கள், விடுதிகளில் வேலை வேண்டுமா? தவறவிடாதீர்கள்!!
France Tamilnews
அவதானம்!! ட்ராமில் அதிகரிக்கும் பயணச்சீட்டுச் சோதனை!!
France Tamilnews
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
வேற்றுகிரகவாசிகள் வாழும் புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?
24 July, 2016, Sun 19:24 GMT+1  |  views: 2619
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மை போலவே இருப்பார்களா? அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா? இதுபோன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உண்டு. 
 
பொதுவாக, வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா? என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் 'ஆம்' என்றே பதில் கூறுகிறார்கள்.
 
தற்போது வேற்றுக்கிரக வாசிகளின் வாழ்விடம் 40 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வீடியோவில் பூமியை போலவே அங்கும் சுற்றுச்சூழல் ஆதாரம் காணப்படுகின்றது.
 
ஒரு குட்டையான செந்நிற நட்சத்திரமும் அதனைச் சுற்றும் பூமியைவிட சற்று பெரியதுமான மூன்று கிரகங்களும் அண்டவெளியில் வானியல் வல்லுநர்களால் கடந்த மே மாதம் கண்டுபிடிக்கப்பட்டன.
 
ஒன்றுக்கொன்று வெகுதூரத்தில் காணப்படும் மூன்று கிரகங்களில். நட்சத்திரத்துக்கு மிக அருகாமையில் உள்ள இரண்டு கிரகங்களில் உயிர்கள் வாழ்வதற்கேற்ப நமது பூமியில் உள்ளது போன்ற பாறைகளும் சுற்றுச்சூழலும் அமைந்துள்ளது.
 
விவரிக்க முடியாத அமைப்புடன் பறக்கும் தட்டுகளில் பூமிக்கு வந்து செல்லும் வேற்றுக்கிரக வாசிகள் இங்கு வாழக்கூடும் என ஆய்வாளர்கள் முடிவுசெய்துள்ளனர். இதை ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் பார்த்தும் உறுதி செய்துள்ளனர்.
 
அந்த நட்சத்திரத்திற்கு ட்ராப்பிஸ்ட்-1 என பெயரிட்டுள்ளனர். அதைச் சுற்றும் கிரகங்களும் முன்பே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் ஆய்வுகள் தொடர்ந்த நிலையில், இப்போழுதுதான் ட்ராப்பிஸ்ட்- 1 க்கு மிக அருகில் உள்ள கிரகத்தில், பூமியில் அமைந்திருப்பது போல, உயிர்கள் வாழக்கூடிய பாறை நிலங்களும், சிறிய சுற்றுச்சூழலும் காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இது செவ்வாய் கிரகத்தோடு ஒப்பிடுகையில், சராசரியாக அதன் சுற்றுவட்டப்பாதையை விட, 12.5 ஒளி நிமிடங்கள் தூரத்தில் உள்ளது. மேலும், அந்த கிரகம் நம் பூமியைவிட தோராயமாக மூன்று மடங்கு பெரியதாகவும் உள்ளது. இந்த கண்டுபிடிப்பு விண்வெளி ஆய்வு வரலாற்றிலே மிகச்சிறந்த முன்னேற்றமாக விஞ்ஞானிகளே வியக்கின்றனர்.
 
மாசசூசெட்ஸ் தொழில்கல்வி நிறுவனத்தில் இந்த கிரகங்களை பார்த்து மேலும், ஆய்வு செய்துவரும் சர்வதேச விஞ்ஞானிகள் குழு, சூரியனை பூமி சுற்றுவதுபோல, அந்த நட்சத்திரத்தையும் அந்த கிரகங்கள் சுற்றுகின்றன.
 
ஆனால், அந்த நட்சத்திரம் வெப்பமின்றி குளிர்ந்தும் பிரகாசமான செந்நிற ஒளியுடனும் காணப்படுகிறது. அதற்கு, அந்த நட்சத்திரத்தை சுற்றியுள்ள அகச்சிவப்பு அடுக்கே காரணம்.
 
அந்த கிரகங்களின் அளவும் வெப்பநிலையும் உயிர்கள் வாழ தகுதியானது. மேலும், அடர்சிகப்பு நிறத்தில் ஒளிரும் அந்த நட்சத்திரம் சூரியனில் எட்டில் ஒரு பகுதி நிறையுடையது.
 
மறையாத, உறுதியான சமிஞைகள் அந்த சிவப்பு நட்சத்திரத்தில் இருந்து பெறப்படுவதால், வாழத்தக்க உலகங்களின் பிரதான இலக்குகள் அங்கு நிச்சயம் இருக்க வேண்டும் என வானியல் வல்லுனர் லீஜ்(Liege) வாதிடுகிறார்.
 
மேலும், அந்த நட்சத்திரம் ஒரு ஒழுங்கான கால இடைவெளியில் மறைந்து பின் தோன்றுகிறது. அது நட்சத்திரத்துக்கும் பூமிக்கும் இடையில் பல பொருள்கள் இங்கும் அங்குமாக செல்வதை உணர்த்துவதாக உள்ளது.
 
சுழற்சியின்போது, கிரகங்களுக்குள்ளும் நட்சத்திரத்துடனுமான நேரும் நேர்க்கோட்டு சந்திப்பு வெவ்வேறு காலங்களில் நடக்கிறது.
 
நட்சத்திரத்துக்கு மிக அருகாமையில் உள்ள இரண்டு கிரகங்கள் 1.5 நாள் மற்றும் 2.4 நாளில் சுற்றி முடிக்கின்றன. மூன்றாவது கிரகம் கேள்விக்குறியாக உள்ளது. அதற்கு 4 லிருந்து 73 நாட்கள் வரை ஆகலாம்.
 
ட்ராப்பிஸ்ட்-1 நட்சத்திரத்தை சுற்றிலும் மேலும் 60 குட்டையான நட்சத்திரங்கள் காணப்படுவதாக பெல்ஜியம், லீஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மைக்கேல் கில்லான் கூறுகிறார்.
 
இரண்டு வாரங்களுக்கு முன்பாக, அந்த இரண்டு கிரகங்களில் போக்கு மற்றும் வரத்து என இருமுறையிலும் எடுக்கப்பட்ட ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் பதிவில், அவற்றின் உள் சுற்றுச்சூழலின் தன்மையும் கணிக்கப்பட்டுள்ளது. அதன் ஸ்பெக்ட்ரமும் எதிர்பார்த்தபடி கிடைத்துள்ளது என்கின்றனர்.
 
மேலும், கிரகத்துக்குள் செல்லும் ஒளியின் அலைநீளத்தில் (Wavelength) நிறைய மாறுபாடுகள் ஏற்படுவதால், அங்கு ஒளியும், பெரிய மற்றும் அடர்த்தியான கார்பன் டை ஆக்ஸைடு அதிகமுள்ள வளிமண்டலமும், அடர்த்தியான மேகங்களும் இருக்கக்கூடும்.
 
அது பூமி, செவ்வாய், வியாழன் கிரகத்தைப் போல சுற்றுச்சூழல் கொண்டது என்பதை ஆய்வுகள் உறுதிசெய்கிறது. அங்கு வாழ்பவர்கள் வாழ்க்கைமுறையும் பூமியில் இருப்பதுபோல, பெரிய தொழில்நுட்ப வளர்ச்சி கொண்ட கலாசாரமாக இருக்கும்.
 
அந்த கிரகத்தின் உட்பகுதி சுற்றுச்சூழலை மேலும் ஆராய்வதற்கு, இன்னும் துல்லியமான, பெரிய இடவசதிகள் கொண்ட தொலைநோக்கிகளை உருவாக்குவது சர்வதேச விஞ்ஞானிகள் குழுவின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இருக்கும் என டாக்டர் டி விட் கூறுகிறார்.
 
அங்கு வேற்றுக்கிரக வாசிகள் இருந்தால், மனிதர்களைவிட சக்தி மிக்கவர்களாகவே நிச்சயம் இருப்பார்கள். எப்படி என்கிறீர்களா?
 
பூமியின் துணை கிரகமான நிலவுக்கே சமீப காலத்தில்தான் நாம் சென்றிருக்கிறோம். ஆனால், 40 ஒளி ஆண்டுகள் தூரத்திலிருந்து நம் பூமிக்கு விதவிதமான பறக்கும் தட்டுகளில் வந்து அடிக்கடி பயமுறுத்துகிறார்களே அவர்களுடைய விஞ்ஞான வளர்ச்சி எவ்வளவு சக்திகொண்டதாக இருக்கும்? 
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய தீவு எது? 
  கிரீன்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பாட்டுரிமை யாருக்கு ?
‘மடைதிறந்து பாயும் நதியலை நான், மனம்திறந்து கூவும் சிறுகுயில் நான், இசைக்கலைஞன், என் ஆசைகள் ஆயிரம், நினைத்தது பலித்தது.’
24 March, 2017, Fri 14:02 | views: 1544 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
“கங்கை கொண்ட சோழ புரம்”
ராஜராஜ சோழனை விட ராஜேந்திர சோழன் தான்டா பெரிய ஆள்! இது என் நண்பன். என்னடா இப்படி சொல்ற !
5 March, 2017, Sun 16:01 | views: 2413 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செயற்கை அறிவு: மனிதனை வென்றுவிடுமா?
கணினிக்குச் சொந்த புத்தி கிடையாது. நாம் சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளை அது. சின்ன வயதிலிருந்தே இப்படிதான்
1 March, 2017, Wed 9:31 | views: 751 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாடின்றி ஏழு வருடங்கள் வாழ்ந்த ஹிட்லர்
இருபதாம் நூற்றாண்டின் ஆட்சியாளர்களில் அடொல்ஃப் ஹிட்லர் மிகவும் பிரசித்தம்வாய்ந்தவராவார். 1933 இல்
13 February, 2017, Mon 13:33 | views: 2584 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண்கள் எதற்காக ஆடையை சரி செய்கிறார்கள்?
பெண்களின் ஆடை குறித்து விவால்வ்(WEvolve) என்ற அமைப்பு வீடியோ ஒன்றை தயார் செய்து வெளியிட்டுள்ளது.
4 February, 2017, Sat 12:38 | views: 2820 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS