Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
புதுக்குடியிருப்பு ஆச்சியின் சாதனை வாழ்க்கை
14 June, 2016, Tue 20:11 GMT+1  |  views: 4865

 ”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பார்கள். இன்று நோயில்லாத மனிதர்களைக் காண்பது அரிதாகி விட்டது. சிறுவர் முதல் வயோதிபர் வரை தம் வாழ்நாளில் ஒரு ”பரசிற்றமோல்” மாத்திரையைத் தானும் வலி நிவாரணமாக பயன்படுத்தாதவர்கள் எவருமில்லை எனலாம்.

 
இன்றைய நவீன வாழ்க்கை முறையில் நாளுக்கு நாள் புதுப்புது நோய்களின் தாக்கமும் அதிகரித்துள்ளது சுகர், பிறசர், கொலஸ்ரோல், கேன்சர், எனப் பல்வேறு தொற்றா நோய்களுக்கும் மற்றும் தொற்றும் நோய்களுக்கும் ஆளாகி வருகின்றனர். அன்றைய வாழ்க்கை முறை இயற்கை சார்ந்த வாழ்க்கையாகவும் ஒரு கட்டுக்கோப்பான வாழ்க்கையாகவும் இருந்தது. இன்று எல்லாம் செயற்கை முறையான வாழ்க்கைக்குள் மனிதன் சிக்கிக்கொண்டுள்ளான். கடுகதியாய் வாழ்ந்து கடுகதியாய்ச் சாகின்றான்.
 
இப்போதெல்லாம் 50 வயது வரையாவது உயிரோடு இருப்போமா என்பது கேள்விக்குறியாகிவிட்ட நிலையிலே நாம் வாழ்நாளைக் கழித்துக்கொண்டிருக்கின்றோம். நாற்பது வயதை நெருங்கி விட்டாலே நோயோடும் உடல் நலக்குறையோடும் போராடிக் கொண்டு இன்னும் நாம் எத்தனை காலம் இப் பூமியில் வாழ்வோம் என்பது தெரியாது வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.
 
இந் நிலையில் இந்தக் காலத்திலும் நீண்ட ஆயுளுடன் சுறுசுறுப்பாக தனது வேலைகளைத் தானே செய்துகொண்டிருக்கும் பழங்காலத்து ஆச்சி ஒருவர் உண்மையில் ஆச்சரியமானவர்தான்.
 
மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் கீழ் அமைந்துள்ளது புதுக்குடியிருப்புக் கிராமம். இக்கிராமத்தில் 101 வயதுடன் சுறுசுறுப்பாக வாழ்ந்துகொண்டிருக்கும் செம்பாப்போடி செல்லம்மா (வயது 101) ஆச்சியைச் அவர் தற்போது வசிக்கும் புதுக்குடியிருப்புப் பிரதான வீதியில் உள்ள அவரது பேத்தி சவுந்தரம் என்பவரின் வீட்டில் சந்திக்கும் வாய்ப்பு கடந்த வாரம் எனக்குக் கிட்டியது. புதுக்குடியிருப்புக் கிராமத்தைச் சேர்ந்த நண்பர் ஆசிரியர் நாகநாதன் துணையுடன் பழங்காலத்து ஆச்சி வாழ்ந்து கொண்டிருக்கும் அவ் வீட்டுக்குச் சென்றிருந்தேன். 1915 ஆம் ஆண்டு செல்லம்மா பிறந்திருக்கின்றார். இன்று முதுமையின் அடையாளமாக முதுகு கூனியிருந்தாலும் எம்மத்தியில் வாழும் முதுசொமாக செல்லம்மா ஆச்சி இருப்பது பெருமைக்குரிய விடயமாகும்.
 
அக்காலத்து வாழ்க்கையை இப்போதும் நினைத்துப் பார்த்து மற்றவர்களளோடு பகிர்ந்துகொள்ளும் நினைவாற்றலோடு இவர் இருக்கின்றார். 101 வயது செல்லம்மா ஆச்சி இரு திருமணங்கள் முடித்தவர். இவருக்குப் 12 பிள்ளைகளும் 62 பேரப்பிள்ளைகளும் 147 பூட்டப்பிள்ளைகளும் 27 கொள்ளுப்பிள்ளைகளும் இருக்கின்றனர். நிறையச் சொந்தங்களுடன் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் செல்லம்மா ஆச்சி தனக்கு நடந்த திருமண சம்பவத்தை மலரும் நினைவுகளாக என்னோடு பகிர்ந்து கொண்டார்.
 
”எனக்கு 13 வயசில கலியாணம் நடந்திச்சு. அது ஒரு பெரிய கதடா மகனே! நான் ஆறாம் வகுப்பு வரதான் படிச்சநான். ஒரு நாள் அம்மாவும் அப்பாவும் என்ன அம்மாட தங்கச்சிட வீட்ட விட்டுட்டு போரதீவு காளியம்மன் கோயிலுக்குப் போயித்தாங்க. அந்தநேரம் பாத்து மாமாட மகன் வீட்ட வந்து என்னத் தூக்கித்து போயித்தாரு (சிரிக்கிறார்) பிறகு அப்பா வந்து பிரச்சினப்பட்டு பெரிய புதினமெல்லாம் நடந்தது. பிறகு எல்லாம் சரியாப் போயித்து” அப்ப 14 வயசில பிள்ளப்பெத்தநான். அந்நேரம் சோறுகறியெல்லாம் நல்ல ருசியா இருக்கும் மண் சட்டியிலதான் சோறாக்கிற. மீனெண்டா பெரிய பெரிய மீன் இவர் வாங்கித்து வருவார். இப்ப சோறுகறியெல்லாம் நஞ்சாப் போச்சி. பிள்ள பெத்தா மிளகு தண்ணிச் சாப்பாடுதான் தருவாங்க. பத்தியச் சாப்பாடு சாப்பிடடுத்தான் வளந்தம். எங்கயும் தூரப் போறதெண்டா கரத்தையில (மாட்டு வண்டி) போறது. என்னவும் எண்டா சொந்த பந்தமெல்லாம் ஒரு இடத்தில கூடிடுவம். இப்ப சொந்த பந்தத்த பாக்கிறதே கஸ்டமாயிருக்குது.
 
இஞ்ச இருக்கிற கண்ணாமுனைப் பிள்ளையார இவரும் நானுந்தான் சிறாம்பிகட்டி வச்சுக் கும்பிட்டு வந்தம் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பொங்கிப் பூசயும் செய்வம். எண்ட புள்ளையள், பேரப்புள்ளையள், பூட்டப்புள்ளையள் எல்லாம் என்ன நல்லாப் பாக்குதுகள். இப்ப அரசாங்கத்தால 2250 ரூபா தாராங்க அதில மாப்பெட்டி,தைலம் எல்லாம் வாங்குவன். அந்தக்காலத்தப்போல இந்தக்காலம் இல்ல. உடம்புல வருத்தமெண்டா நாட்டு வைத்தியந்தான் செய்யிறது. வீட்டில சும்மா இருக்க மாட்டம் ஏதாவது ஒரு வேலய செய்து கொண்டுதான் இருப்பம். வீட்டுவேல செய்யாட்டி அம்மா அடிப்பாவு. இப்ப ரெண்டொரு நாளாத்தான் நெஞ்சிக்க நோவுதுடா மனே ” என்றார். செல்லம்மா ஆச்சி.
 
செல்லம்மா ஆச்சி சொல்வதைப் போல அந்தக் காலத்தில் உரலில் நெல் குத்தி, அம்மியில் மஞ்சள் அரைத்து, ஆட்டுக்கல்லில் உழுந்து அரைத்து, கிணற்று வாளியில் நீர் அள்ளி உடலுக்குக் கொடுத்த பயிற்சியும் அவரது உணவுப் பழக்க வழக்கமுமே இத்தனை காலமும் அவர் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு காரணமாக இருக்க முடியும். இன்று பலர் குனிந்து, நிமிர்ந்து வேலை செய்ய முடியாத நிலையிலே இருக்கின்றனர். சொகுசு வாழ்க்கை கூடிவிட்டதால் உடல் ஆரோக்கியமும் கெட்டு, மன ஆரோக்கியம் இன்றி மன உளைச்சலில் மனிதர்கள் உழன்றுகொண்டிருக்கின்றனர்.
 
செல்லம்மா ஆச்சி தமது அன்றாடக் கடமைகளைத் தானே செய்வது, மூன்று நேரம் தவறாது சாமி கும்பிடுவது போன்றவற்றைச் செய்து வருகின்றார். சாப்பிட்டு விட்டு ஓய்வாக இருக்கும் நேரத்தில் மனப்பாடம் பண்ணிய தேவாரங்களைப் படிப்பது, தனது பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகளிடம் பழங்காலத்துக்கதைகளைக் கதைப்பது என சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றார். செம்பாப்போடி செல்லம்மா (வயது 101) ஆச்சி போன்றவர்கள் எம்மத்தியில் இருக்கின்ற முதுசொம்களாவர். இன்னும் இவர் பலகாலம் வாழ்ந்து உலகிலே அதிக காலம் வாழ்ந்த வயது கூடியவர் என்ற கின்னஸ் சாதனையை படைக்க வேண்டும் என இவரது உடல் ஆரோக்கியத்திற்காக இறைவனைப் பிரார்த்திப்போம்.
 
- செ.துஜியந்தன்
 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது?
  பின்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வாரத்திற்கு 40 மணி நேரம் பணி புரிந்தால் ஆயுள் குறையும் – அதிர்ச்சியூட்டும் ஆய்வுகள்
நீங்கள் வாரத்திற்கு 39 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்கிறீர்களா? என்றால், ஆம் என்று தான் பதில் சொல்வோம்.
16 September, 2018, Sun 13:18 | views: 588 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
‘தண்ணிப்பால்’ பால் என்றால் என்ன?
கடந்த சில வாரங்களில் UHT பால், Condensed பால் (கெட்டிப் பால்) ஆகியவை பற்றி தெரிந்துகொண்டோம்.
9 September, 2018, Sun 14:55 | views: 511 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆகாயத்தில் வெள்ளைக் கோட்டின் அர்த்தம் என்ன?
பரந்துகிடக்கும் நீல வானில் சிதறிக்கிடக்கும் பஞ்சுமிட்டாய் போன்ற வெள்ளை மேகங்கள்... உற்றுகவனிக்கும்போது சில
2 September, 2018, Sun 14:25 | views: 510 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குடும்பத்தின் 32 பேரின் பசியை போக்கும் இரும்பு பாட்டி...!!
மோசுல் நகரை விட்டு ஐ.எஸ். அமைப்பு வெளியேற்றப்பட்டு ஓராண்டு ஆகிவிட்டது. ஐ.எஸ் ஆக்கிரமிப்பின் போது
26 August, 2018, Sun 16:07 | views: 723 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கல்யாண வீட்டில் நடனமாடி அசத்திய அதிபர் புட்டின்...!!
ரஷ்ய அதிபர் புட்டின் ஆஸ்டிரிய வெளியுறவு அமைச்சர் திருமணத்தில் நடனமாடி அசத்தியுள்ளார்.
19 August, 2018, Sun 16:53 | views: 651 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
வீடு (appartement) வாடகைக்கு LE BOURGET 53m2, - 980 euro வாடகை +120 euros charges
980 €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS