இன்றைய நவீன உலகில் சிறுவர் முதல் பெரியவர் வரை பேஸ்புக் எனும் மாயவலைக்குள் சிக்கித் தவிக்கின்றனர்.
ஒருசிலர் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டாலும், அதிகளவானோர் பேஸ்புக் பயன்பாட்டின் காரணமாக பாதிப்படைகின்றனர்.
பேஸ்புக் மீதான அதீத ஈடுபாடு எவ்வாறான தாக்களை ஏற்படுத்தும் என்பதை வெளிப்படுத்தும் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
Facebook Notifications - ஓர் அறிவிப்பு என பெயரிடப்பட்டுள்ள காணொளி காலத்தின் கட்டாயமான ஒன்றாக அமைந்துள்ளது.
பேஸ்புக்னை தீவிர ஈடுபாட்டுடன் பயன்படுத்துவோருக்கு பேஸ்புக் அழுத்தம் எனும் மனநோய் (Facebook Depression) ஏற்படுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பேஸ்புக் அதிகம் பயன்படுத்துவதனாலும், பேஸ்புக்கிள் உள்ள மற்ற நண்பர்களுடன் தங்களை ஒப்பிட்டு பார்ப்பதனாலும் இந்த நோய் தாக்கப்படுகின்றது.
தமது நண்பர்களினால் அன்றாடம் பதிவு செய்யப்படுகின்ற புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை பார்க்கும் போது தங்களின் வாழ்க்கையில் உள்ள குறைபாடுகள் மாத்திரமே காணப்படும்.
இதன் காரணமாக வாழ்க்கை மீது வெறுப்பு ஏற்படும் இந்த வெறுப்பு நாளுக்கு நாள் அதிகமாகி மன அழுத்தம் ஏற்படும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.