விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

இரண்டாவது குழந்தை பெற்று கொள்ள திட்டமிடும் முன் இதையெல்லாம் யோசியுங்கள்..!

4 November, 2022, Fri 15:34   |  views: 8752

 நீங்கள் ஏற்கனவே ஒரு குழந்தைக்கு பெற்றோராக இருப்பின் இரண்டாவது குழந்தையை பெற்று கொள்ள ஆர்வம் இருக்கலாம். உங்கள் குடும்பத்தில் ஒரு புதிய உறுப்பினரை சேர்க்க நீங்களும், உங்கள் துணையும் தயாராவது சில நேரங்களில் உற்சாகமாக உணரலாம். ஆனால் சில சமயங்களில் அழுத்தம் நிறைந்த ஒன்றாக இந்த விவகாரம் இருக்கலாம். ஏனென்றால் திருமணமாகி நீண்ட ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருப்போர் மட்டுமே சமூகத்தின் கேள்விக்கு ஆளாவதில்லை. மாறாக ஒரு குழந்தையை பெற்றெடுத்தவர்களை கூட அடுத்த குழந்தை எப்போது என்று கேட்டு நச்சரிக்கும் உறுப்பினர்களை கொண்டது நம் சமூகம்.

 
உங்கள் முதல் குழந்தைக்கு உடன்பிறப்பு தேவை என்று நீங்கள் முடிவெடுக்கும் முன் பல குழப்பங்களை எதிர்கொள்ள நேரிடலாம். எப்போது குழந்தையை திட்டமிடுவது, எப்படி வளர்ப்பது என்பதில் துவங்கி இறுதியாக இன்னொரு குழந்தையை நாம் பெற்று கொள்வது சரியா என்ற கடும் குழப்பத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். சரி மற்றொரு குழந்தைக்கு திட்டமிடும் தம்பதியருக்கு ஏற்படும் இயல்பான அழுத்தத்தை சமாளிக்க உதவும் டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்...
 
உங்களது முடிவாக இருக்க வேண்டும்: இரண்டாவது குழந்தையை பெற்று கொள்வது தொடர்பான இறுதி முடிவு உங்களுடையதாகவும், உங்கள் துணையுடையதாகவும் இருக்க வேண்டும். நலம் விரும்பிகள் அல்லது நண்பர்கள், உறவினர்கள் பல ஆலோசனைகளை மற்றும் கருத்துக்களை தெரிவித்தாலும் அவை உங்கள் முடிவை பாதிக்க விடாமல் பார்த்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைக்கு நிச்சயம் உங்களுக்கு பிறகான ஆதரவு உறவு தேவை என்று நீங்கள் விரும்பலாம், நாம் வளர்ந்தது போல சகோதர பாசத்துடன் உங்கள் முதல் குழந்தை வளர வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். எதுவாக இருந்தாலும் இந்த விஷயத்தில் இறுதி முடிவு தம்பதியருடையதாக இருக்க வேண்டும்.
 
உங்களால் வளர்க்க முடியுமா என்று யோசித்து கொள்ளுங்கள்: தற்போதைய காலகட்டத்தில் விலைவாசி நாளுக்கு நாள் விண்ணை முட்டி வரும் நிலையில், ஒன்று மற்றும் நிச்சயம். நீங்கள் வளர்ந்தது போல உங்கள் குழந்தைகளை அவ்வளவு எளிதாக வளர்த்து விட முடியாது. குழந்தை வளர்ப்பு செலவு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. அன்று நீங்கள் ரிமோட் காரை அடம்பிடித்து கேட்டிருப்பீர்கள். இன்றோ குழந்தைகள் ஸ்மார்ட் ஃபோன்களை கேட்கின்றன. ஆடைகள், கல்வி துவங்கி பிற அத்தியாவசியங்கள் வரை ஒரு குழந்தைக்கு செலவு செய்யவே மூச்சு முட்டுகிறது என்பதை நாம் ஒப்பு கொண்டு தான் ஆக வேண்டும். எனவே மற்றொரு குழந்தையை உங்களால் சிரமின்றி வளர்க்க முடியுமா என்று சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
 
நீங்கள் தயாரா.? நீங்கள் பெண்ணாக இருந்தால் மற்றொரு குழந்தையை பெற்று கொள்ள உடல் மற்றும் மனரீதியாக தயாராக இருக்கிறீர்களா என்பதை யோசியுங்கள். பெரும்பாலும் குழந்தை பிறந்தால் அதனுடன் தாய் தான் நேரம் மற்றும் ஆற்றலை அதிகம் செலவிட வேண்டியிருக்கும். எனவே உங்களது முதல் குழந்தையை பெற்று வளர்த்த அனுபவத்தை கருத்தில் கொண்டு அடுத்த குழந்தையை வளர்ப்பதற்கு எவ்வாறு திறம்பட செயலாற்ற முடியும் என்பதை சிந்தித்து கொள்ளுங்கள்.
 
எதிர்காலத்தை திட்டமிடுங்கள்: எத்தனையாவது குழந்தையாக இருந்தாலும் சரி, அதை வளர்ப்பது எப்படி என்று நீங்களும், உங்கள் துணையும் முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது. இருவரும் வேலைக்கு செல்பவராக இருப்பின் உங்களில் யார் பிறக்க போகும் குழந்தையை வளர்க்க போகிறீர்கள் அல்லது இருவரும் சேர்ந்து மாறி, மாறி அதனை பார்த்து கொள்வீர்களா? இல்லை ஊதியத்திற்கு ஆள் வைப்பீர்களா? இல்லை என்றால் உறவினர்கள் பார்த்து கொள்வார்களா என என்னென்ன ஆப்ஷன்கள் இருக்கின்றன என்பதை பார்த்து முடிவெடுங்கள்.
 
வயது இடைவெளி: சந்தேகத்திற்கு இடமின்றி இரண்டாவது குழந்தையை எப்போது பெற்று கொள்வது என்பது உங்கள் தனிப்பட்ட முடிவு. எனினும் ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்குமான இடைவெளி மிக குறைவாகவோ அல்லது மிக அதிகமாகவோ இருக்கும் போது சில நன்மை, தீமைகள் உள்ளன. அவற்றை கருத்தில் கொண்டு திட்டமிடுங்கள்.
 
முக்கிய காரணங்களை மதிப்பிடுங்கள்: உங்களுக்கு ஏன் இன்னொரு குழந்தை வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று உங்களை நீங்களே கேட்டு கொள்ளுங்கள். உங்கள் முதல் குழந்தைக்கு உடன்பிறந்தவர் இருக்க வேண்டுமா.! மற்றொரு குழந்தையைப் பெறுவதற்கு நீங்கள் அழுத்தமாக உணர்கிறீர்களா? உங்களுக்கு வயதாகி கொண்டே போகிறது, அதனால் இதுவே நல்ல தருணம் என்று நினைக்கிறீர்களா.! மற்றொரு குழந்தையை நீங்கள் பெற்று கொள்ள விரும்புவதற்கான முதன்மை காரணத்தை பற்றி சிந்தியுங்கள்.
 
 
முதல் குழந்தைக்கும் முக்கியத்துவம்: இரண்டாவது பெற்று கொள்ள முடிவெடுத்துவிட்டீர்கள் என்றால் உங்களது முதல் குழந்தையை மனதளவில் தயார்படுத்த நினைவில் கொள்ளுங்கள். அவர்களிடம் மாதொரு குழந்தையின் வருகை பற்றி பேசினாலும் கூட, உங்களிடம் அவர்கள் வழக்கம் போல பாதுகாப்பாக, அன்பாக கவனித்து கொள்ளப்படுவார் என்பதை புரிய வையுங்கள்.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18