விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பெண்கள் ஏன் வயதான ஆண்கள் மீது காதல் கொள்கிறார்கள் தெரியுமா..?

5 September, 2022, Mon 8:23   |  views: 8457

 காதலுக்குக் கண்ணில்லை என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான், ஆனால் காதலுக்கு வயதும் இல்லை. தன்னை விட அதிக அளவு வயது வித்தியாசம் கொண்டவரை பெண்கள் காதலிப்பது பற்றி பல முறை கேள்விப்பட்டிருக்கிறோம். சக வயது ஆண்களுடன் ஒப்பிடும் போது, கொஞ்சம் வயதான ஆண்களிடம் இருக்கும் மன முதிர்ச்சியை பெண்கள் விரும்புகிறார்கள்.

 
வயதாக ஆக, ஸ்டைலும் அழகு கூடிட்டே போகுது’ என்பது தோற்றத்தில் மட்டுமல்லாமல், சென்சிபிலாக நடந்து கொள்வது, ஒரு உறவில் கமிட்மென்ட், வாழ்க்கை பற்றிய புரிதல், வேலை மற்றும் தொழிலில் நோக்கம், என்று பல விதங்களில் வயதாகும் ஆண்களின் பெர்சனாலிட்டி ஈர்க்கும் வகையில் இருக்கும். தன்னை விட அதிக வயதுள்ள ஆண்கள் மீது பெண்களுக்கு ஏன் ஈர்ப்பு வருகிறது என்பதற்கான காரணங்கள் இங்கே.
 
கண்ணாமூச்சி ஆட மாட்டார்கள் : வயதான ஆண்கள், மைன்ட்-கேம்ஸ் என்று கூறப்படும் இருக்கா, இல்லையா, கண்ணாமூச்சி ஆட்டம் விளையாட மாட்டார்கள். உனக்கு என்னைப் பிடித்திருக்கிறதா இல்லையா என்பதை நான் பல வித சோதனைகள் வழியே தெரிந்து கொள்வேன் என்று இளம் வயது ஆண்களைப் போல வயதான ஆண்கள் நடந்து கொள்ள மாட்டார்கள். அது மட்டுமில்லாமல், தனக்கு என்ன வேண்டுமோ, அதை ஏமாற்றியோ அல்லது தந்திரமாகவோ பெற்றுக் கொள்ள முயற்சி செய்ய மாட்டார்கள். தன்னால் நேரடியாக ஒரு பெண்ணை ஈர்க்க முடியும் என்பதை அறிந்தவர்கள், மறைமுக வேளைகளில் ஈடுபட வேண்டும் என்பது கூட நினைக்க மாட்டார்கள்.
 
பழக பழக ஈர்ப்பு அதிகரிக்கும் : அந்த கால காதல், ரொமான்ஸ் என்று லேபில் செய்யப்பட்டிருக்கும் கிளாசிக் ரொமான்சில் கில்லாடி. இளம் பெண்களுக்கு அது மிகப்பெரிய ஈர்ப்பாக இருக்கும். மற்றவர்கள் முன்னிலையில் உங்களை மட்டம் தட்ட மாட்டார்கள், மாறாக உங்களை பெருமையாக அறிமுகம் செய்வர்கள். பழக பழக ஈர்ப்பு அதிகரிக்குமே தவிர குறையாது.
 
முதிர்ச்சியானவர்கள் மட்டுமல்ல புத்திசாலியும் கூட : எனக்கு ஸ்மார்ட்டான பெண்கள் மீது ஈர்ப்பு வரும் என்று பல ஆண்கள் கூறுவார்கள். அதே போல, ஸ்மார்ட்டான மற்றும் புத்திசாலியான ஆண்கள் மீது பெண்கள் எளிதில் ஈர்க்கப்படுவார்கள். பெண்கள் தாங்கள் நேசிக்கும் ஆணுக்கு அம்மாவாக இருக்க விரும்பவில்லை. காதலியாக, தோழியாக, பார்ட்னராக இருக்க விரும்புகிறார். எனவே, முதிர்ச்சியடைந்த ஆண்கள் தங்கள் காதலி / மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நன்றாக அறிந்தவர்கள். ஸ்மார்ட்டாக எந்த சூழலையும் கையாளுவார்கள், தேவையான நேரத்தில் சரியான அறிவுரையை வழங்குவார்கள்.
 
செக்ஸ் பற்றி அனைத்தும் அறிந்தவர்கள் : பாலியல் உறவு என்று வரும் போது, சந்தேகமே இல்லாமல் வயதான் ஆண்கள் தான் சிறந்தவர்கள். தனது பார்ட்னரை எப்படி ஸ்பெஷலாக உணர வைக்க வேண்டும் என்பதைப் பற்றி நன்றாக அறிந்தவர்கள், பாலியல் உறவில் பெண்களை திருப்தி செய்வார்கள். மேலும், ஒரு பெண் தனக்கு பிடிக்காததைப் பற்றி கூறினாலும், அதை எளிதாக எடுத்துக் கொள்வார்கள்.
 
நீங்கள் மாற வேண்டும் என்று வற்புறுத்த மாட்டார்கள் : நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, குறை நிறை என்று எதையும் புகார் சொல்லாமல், அதை முழுவதுமாக ஏற்றுக்கொள்வார்கள். நீங்கள் மாற வேண்டும் என்று எப்போதுமே உங்களை கட்டாயப்படுத்த மாட்டார்கள்.
 
பொருளாதார ரீதியாக, நிதி ரீதியாக செட்டில் ஆனவர்கள் : வயதான ஆண்கள், பெரும்பாலும் நிதி ரீதியாக செட்டில் ஆனவர்களாக இருப்பார்கள். இது பொருளாதார ரீதியான பாதுகாப்பை வழங்குகிறது. பணத்தை எப்போது எப்படி எதற்கு செலவு செய்ய வேண்டும் என்பதை நன்றாக அறிந்துள்ளவர்கள். பெண்களும் அவர்களை சுதந்திரமாக உணர வைப்பார்கள்.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18