Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்
26 February, 2016, Fri 8:46 GMT+1  |  views: 1820

 அரவணைப்பு என்பது வாழ்க்கைக்கு ஆதாரமானது. எல்லாவற்றையும் அரவணைத்து ஆலோசனை கூறி, வாழ்வதற்கும், வளர்வதற்கும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் தயங்காமல் செய்யக் கூடியவள் பெண். இப்படிப் பிறருக்கு உதவி செய்து கொண்டு, அந்த உதவி செய்யும் குணத்தையே தான் வாழ்வதற்கும், பயன்படுத்திக் கொள்வதுதான் பெண்ணின் அடிப்படையான சிறப்பு குணம்.

 
 
உலகில் நிலைத்து வாழ்வதற்கு, தனது சொந்தக் காலில் நிற்க வேண்டும் என ஆணுக்கு வலியுறுத்தப்பட்டதை போலவே, பெண்ணுக்கும் பிறருக்கு உதவும் நிலையிலும் இருக்க வேண்டும் என போதிக்கப்பட்டிருக்கிறது. திருமணத்துக்கு முன்பு வரை யாரென்றே தெரியாத ஒருவனுடன் திருமணமாகிப் புகுந்த வீடு செல்லும்போதே, புதிய சூழ்நிலையில், புதிய மனிதர்களோடு தான் இணைந்து போக வேண்டும் என்ற மனப்பக்குவத்தை வளர்த்துக் கொண்டுதான் தற்காலத்துப் பெண்ணும் செல்கிறாள்.
 
 
புதிய கணவனுக்காக எதையும் விட்டுக் கொடுக்கும் நிலையையும், கணவனின் கருத்துகளோடு ஒத்துப்போகும் பண்பையும் வளர்த்துக் கொள்கிறாள். தான் வேறு, தனது கணவன் வேறு என்ற எண்ணம் அகன்று, தன் கணவனின் விருப்பமே தன் விருப்பம், அவன் நோக்கமே தனது நோக்கம், அவனது லட்சியமே தனது லட்சியம் எனக் கருதி, அவனோடு தன்னை இரண்டற இணைத்துக் கொள்கிறாள். தனது கணவன் ஆறுதலாக, சுகமாக, மகிழ்ச்சியாக இருப்பதற்கான ஒரு சூழலை பெண் உருவாக்கி தனது நிலைப்பாட்டை உறுதிசெய்து கொள்கிறாள்.
 
 
இதன்மூலம் கணவன் தன்னை மீண்டும் மீண்டும் நாடி வரும் நிலையை உண்டாக்குகிறாள். தனது மென்மையான எண்ணங்களை வெளிப்படுத்த இயலாதவனாக ஆண் இருந்த போதிலும், குறிப்பால் அவனது எண்ணங்களை அறிந்து கொள்கிறாள். தன்னோடு இருப்பவர்களின் எண்ணங்களையும் குறிப்பால் அறிய கற்றுக் கொள்கிறாள். 
 
ஆண் எதைச் செய்தாலும் அதை அன்புடன், காதலுடன் செய்ய வேண்டும் என்று பெண் எதிர்பார்ப்பாள். வாழ்க்கையில் அரவணைப்புக்கு அடுத்து அவள் விரும்புவது காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் தான்.
 
 
உடல் ரீதியாகத் தொடுவது, பற்றுவது, தழுவுவது, மன ரீதியாக உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது, செயல்படுவது ஆகிய ஒவ்வொன்றையும் தனது தாயின் உணர்வின்மூலம் ஒவ்வொரு பெண்ணும் இயல்பாகப் பெறுகிறாள். ஆண் குழந்தை தனது தாயிடம் இருந்து விலகிச் செல்வதைப் போல், பெண் குழந்தை செல்வதில்லை. ஒவ்வொரு செயலையும் தாயிடம் இருந்து கற்றுக் கொள்கிறது.
 
 
வாழ்நாள் முழுவதும் அவளது இந்த இயல்பு ஆணைக் காட்டிலும் பெண்ணுக்கு அதிக பாதுகாப்பை அளிக்கிறது. ஆணின் இதயத்தில் மூடப்பட்ட மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்தி காதலுக்கும் நெருக்கத்துக்கும் அவள் காலங்காலமாக ஓர் இணைப்பு பாலமாக இருந்து வருகிறாள். இதனால் உணர்வு ரீதியாக அனைவரையும் கவரும் வகையில், ஆணை விட பெண் ஒரு படி மேலே போய்விடுகிறாள். ஆண்களிடம் இல்லாத பெண்களின் சிறப்புக்குணம் இது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 வேவ்மீட்டர் (Wavemeter)

ரேடியோ அலைகளின் அலை நீளத்தை அளவிடும் கருவி.
 

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொள்ளலாமா?
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தங்களைப் புரிந்து கொள்கிற சிறந்த வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள்.
13 November, 2018, Tue 10:36 | views: 412 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உரையாடல்தான் உறவுகளை வலுப்படுத்தும்...
உரையாடல்தான் உறவுகளை வலுப்படுத்தும்' என்கின்றனர் உலகளாவிய மனநல மருத்துவர்கள். பலருக்கும் தங்கள் மனம்விட்டு உரையாடாத காரணத்தால்தான
8 November, 2018, Thu 11:35 | views: 741 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காதல் கல்யாணம் எப்போது கசக்கும்?
அந்த அளவு கண்மூடித்தனமான காதலில் மிதக்கும் காதலர்கள் திருமணத்திற்கு பின் சில ஆண்டுகளில் அன்பு கசந்து விடுகிறது. ஆசை அறுபது நாள் ம
29 September, 2018, Sat 15:26 | views: 1326 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உறவுகளை உதறி தள்ளிவிட்டு எதற்காக இந்த ஓட்டம்?
எதற்காக இந்த ஓட்டம் எல்லோரும் அதிவேகமாக ஓடுகிறார்கள். நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு தடங்கலாக இருந்த சொந்த ஊர்கள
17 September, 2018, Mon 15:42 | views: 1229 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அந்த நேரத்தில் பெண்களை வெறுப்பேற்றும் விஷயங்கள்
முன்விளையாட்டுக்கு பெண்களை அவசரப்படுத்துவது பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. முன்விளையாட்டுகள் பெண்களின் உணர்ச்சியை தூண்டுவதோடு,
4 September, 2018, Tue 11:09 | views: 2604 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS