Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
பரப்பரப்பாக விற்பனையாகும் ஹிட்லரின் சுயசரிதை
13 January, 2016, Wed 19:56 GMT+1  |  views: 2935

 ஹிட்லரின் சுயசரிதையான “மெயின் காம்ப்’ (Mein Kampf – எனது போராட்டம்) இரண்டாம் உலகப் போருக்குப் பின் முதல்முறையாக பிரசுரமாகி, பரபரப்பாக விற்பனையாகி வருகிறது.

 
1923 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு சிறையில் இருந்தபோது, ஹிட்லர் எழுதிய சுயசரிதை “மெயின் காம்ப்’.
 
யூதர்களுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் எதிரான தனது தேசிய இனவாதக் கொள்கையை அந்த நூலில் ஹிட்லர் வெளிப்படுத்தியிருந்தார்.
 
இனவெறி நாசிக்களின் வேதமாகத் திகழ்ந்த அந்த நூல், இரண்டாம் உலகப் போரில் அவர்களது தோல்விக்குப் பின் ஜெர்மனியில் தடை செய்யப்பட்டது.
 
போரின் முடிவில் ஹிட்லர் மரணமடைந்த பிறகு, அந்த சுயசரிதையின் பதிப்புரிமையை பவேரியா மாகாணம் பெற்றது.
 
இந்த நிலையில், நூலாசிரியரான ஹிட்லர் இறந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்ததால், அந்த பதிப்புரிமை காலாவதியானது.
 
எனினும், மெயின் காம்ப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டிக்க பவேரிய அரசு மறுத்துவிட்டது.
 
இதையடுத்து, மியூனிக் தற்கால வரலாற்றுக் கழகம் அந்த நூலை அச்சிட்டு, கடந்த வாரம் வெளியிட்டது.
 
ஹிட்லரின் கருத்துக்களுக்கு இடையிடையே குறிப்புகளும், விமர்சனங்களும் இணைத்து பிரசுரமாகியுள்ள அந்த நூல் பரபரப்பாக விற்பனையாகி வருகிறது.
 
4,000 பிரதிகள் அச்சாகியுள்ள நிலையில், 15,000 பிரதிகளுக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
 
பெர்லின் நகரின் முக்கிய புத்தகக் கடையில், கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த பிரதி உள்பட அனைத்துப் பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன.
 
தான் வாங்கிய “மெயின் காம்ப்’ பிரதியை 10,000 யூரோக்களுக்கு விற்பனை செய்வதாக இணையதளத்தில் ஒருவர் அறிவித்துள்ளார்.
 
இந்த நிலையில், ஹிட்லரின் சுயசரிதைப் புத்தகம் வெளியாகியுள்ளதற்கு யூதர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
 
பிரிட்டனைச் சேர்ந்த ஒரு வரலாற்று நிபுணர், ”ஹிட்லரின் சுயசரிதையை பிரசுரிப்பது, இன வெறியுடன் எழுதியுள்ள கண்மூடித்தனமான கருத்துக்களுக்கு இலக்கிய முலாம் பூசியது போலாகிவிடும்” என்றார்.
 
எனினும், அந்தப் புத்தகத்தைப் பிரசுரித்துள்ள மியூனிக் தற்கால வரலாற்றுக் கழக இயக்குநர் ஆண்ட்ரியாஸ் விர்ஷிங், ”வெளிநாட்டவர் மீதான வெறுப்பு ஐரோப்பாவில் அதிகரித்து வரும் இந்தச் சூழலில், தேசியப் பேரினவாதத்தின் சுயரூபத்தை வெளிப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டுள்ள ஹிட்லர் சுயசரிதையின் ஆய்வுப் பதிப்பு அவசியமான ஒன்றே,” என கூறியுள்ளார்.
 
மக்களில் மனங்களில் வெறுப்பை விதைப்பதற்காக ஹிட்லர் கூறிய பொய்களும், திரித்துக் கூறிய உண்மைகளும் தமது பதிப்பில் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
1,948 பக்கங்களைக் கொண்ட இரு புத்தகங்களாக ஹிட்லரின் சுயசரிதை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஹிட்லரின் கருத்துக்களுக்கு இடையே 3,500 இடங்களில் விமர்சனக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

கிளைமட்ரொலொஜி (Climatology)

சுற்றுப்புறத்தில் நிலவும் பருவநிலை மாறுபாடு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நான்காம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்
நான்காம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கும். நான்கு திசைகள், நான்கு
11 November, 2018, Sun 16:11 | views: 1836 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மூன்றாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்!
மூன்றாம் எண்ணில் பிறந்தவர்களும் அதிர்ஷ்ட சாலிகளே, திருவள்ளுவரே அறத்துப்பால், பொருட்பால், காமத்து பால் என
4 November, 2018, Sun 15:51 | views: 2108 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரண்டாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்!
இரண்டு என்பதும் நம் வாழ்வில் ஓர் முக்கியத்துவம் கொண்ட எண்ணாகும். ஒரு மனிதனுக்கு கண் இரண்டு, காது
28 October, 2018, Sun 12:51 | views: 3040 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முதலாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுமையான வாழ்க்கை ரகசியம்!
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்தும் ஏதோ ஒரு
22 October, 2018, Mon 15:09 | views: 1773 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விமான நிலையத்தின் சோதனைப் பெட்டிகளில் கண்ணாமூச்சி ஆடும் கிருமிகள்!
விமான நிலையங்களில் சோதனைப் பகுதிகளைக் கடக்கும்போது சில உடைமைகளை எடுத்து வைப்பதற்காக தனியே
14 October, 2018, Sun 16:12 | views: 1275 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS