அமெரிக்காவில் பிரிந்து சென்ற கணவனை நிர்வாணமாக தேடிச் சென்ற பெண்ணொருவர் ஆபத்தில் சிக்கியுள்ளார்.
தன்னிடமிருந்து பிரிந்து சென்ற கணவரின் வீட்டிற்குள் நுழைவதற்காக புகைக்கூண்டு வழியாக நிர்வாணமாக இறங்கியள்ளார்.
எனினும் அந்தப் பெண் புகைக் கூண்டுக்குள் சிக்கிக் கொண்டுள்ளார். பின் தீயணைப்பு படையினரின் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளார்.
35 வயதான இப்பெண் கலிபோர்னியா மாநிலத்தின் வூட்கிரெஸ்ட் நகரிலுள்ள டோனி ஹேர்னாண்டஸ் எனும் தனது முன்னாள் கணவரின் வீட்டுக்குள் அதிகாலை வேளையில் நுழைய முயன்றுள்ளார்.
கதவு பூட்டியிருந்ததால் மாடியில் ஏறி புகைக்கூண்டு வழியாக இறங்குவதற்கு அப்பெண் தீர்மானித்துள்ளார். தனது ஆடைகளுடன் நுழைந்தால். புகைக்கூண்டுக்குள் இறுகிக்கொள்ள நேரிடும் எனக் கருதிய அப்பெண் நிர்வாணமாக புகைக்கூண்டுள் நுழைந்துள்ளார். ஆனால் அப்போதும் சில அடிகளுக்கு மேல் அவரால் இறங்க முடியவில்லை.
இது தொடர்பாக டோனி ஹெர்னாண்டஸ் கூறுகையில், அதிகாலையில் எனது மனைவியின் கூக்குரல் கேட்டது. அவரை தேடிப்பார்த்தபோது காணவில்லை. எங்கே இருக்கிறாய் என கேட்டபோது, தான் புகைக்கூண்டுக்குள் இருப்பதாக கூறினார்.
புகைக்கூண்டின் மேற்பகுதிக் கூடாக அவரை வெளியே தூக்கி எடுப்பதற்கு முயன்றேன். ஆனால் அது முடியவில்லை. அதையடுத்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தேன்" எனத் தெரிவித்துள்ளார். இரு மணித்தியாலங்களின் பின்னர் தீயணைப்பு படையினரால் அப்பெண் மீட்கப்பட்டுள்ளார். இத்தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.
ஆனால், தற்போது அப்பெண் வேறொரு வீட்டில் வசித்து வருகிறார் எனவும் எப்போதாவது இவ்வீட்டுக்கு வருவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் நடந்துகொண்ட விதம் எனக்குப் பிடிக்கவில்லை.
அது எனது பிள்ளைகளுக்கும் நல்லதல்ல. எனவே அவரை வீட்டுக்கு வர வேண்டாம் என நான் கூறியிருந்தேன் எனவும் டோனி ஹெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
|