Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
தமிழீழ விடுதலைப் புலிகளை வென்றது யார்?
6 January, 2015, Tue 10:49 GMT+1  |  views: 1809

 தற்பொழுது சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தல் அலைகளில் வீரம் பேசப்படும் விடயத்தில் ஒன்று, தமிழீழ விடுதலை புலிகள் மீதான போரில் யார் வெற்றி கொண்டது?

 
தமிழீழ விடுதலை புலிகள், மே 2009ம் ஆண்டு வரை, தமிழீழ மக்களின் ஏகபிரதிநிதிகளாக விளங்கியவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. சிறிலங்கா அரசிடம் கூலி பெற்ற சிலர் கடந்த சில வருடங்களாக இவ்வியக்கத்தை சின்னபின்னமாக்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தமிழீழ விடுதலை புலிகளை வெற்றி கொண்டது யார் என்பதை ஆராயும் பொழுது, தேர்தல் பிரச்சார மேடைகளில், மைத்திரிபால சிறிசேனவின் சார்பணியினரான - சந்திரிக்க குமாரதுங்க, தளபதி சரத் பொன்சேகா, ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர போன்றோர் தமது நடவடிக்கைகளினாலே தமிழீழ விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டார்களென வீரம் பேசுகின்றனர்.
 
மறுபுறம், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தானும் தனது சகோதரருமான பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரே வெற்றி கொண்டதாக வீரம் பேசுகின்றனார். இவர்களுக்கு சார்பாக சில பந்தி எழுத்தாளரும் தாளம் போடுகின்றனர்.
 
உண்மையில் நடத்தது என்ன? தமிழீழ விடுதலை புலிகளின் தோல்விக்கான பல காரணிகள் கண் முன்னே தெரிவதுடன், இவற்றை நாம் எழுத பேசக் கூடியதாகவுள்ளது. வேறு சில காரணிகளை இன்றும் வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாது பலர் தமது மனதிற்குள் தாக்கியவண்ணம் கண்ணீர் வடிப்பதை நாம் காணுகிறோம்.
 
மேல் கூறப்பட்ட சிங்கள தலைவர்கள், உண்மையில் தமிழீழ விடுதலை புலிகளை வெற்றி கொண்டிருந்தால் அல்லது கொள்வதற்கு வழி வகுத்திருந்தால், இவர்கள் எதற்காக இரு தசாப்தங்களுக்கு மேலா ஆயிரக்கணக்கான உயிர் அழிவுகளுடன், சமூக பொருளாதார அழிவுகளிற்கு அனுமதித்தனர். இவர்களது கூற்றுக்கள் உண்மையானால், ஏன் இவர்களால் இவ்வளவு மோசமான எந்த அழிவும் இல்லாது, தமிழீழ விடுதலை புலிகளை வெற்றி கொண்டிருக்க முடியாது?
 
ஆகையால் வாக்களரை கவருவதற்காக இவர்களால் கூறப்படும் வீரம் யாவும் கபடங்கள் நிறைந்தது என்பது தெளிவாகிறது.
 
இராணுவத்தை பொறுத்தவரையில், சரத் பொன்சேகா போர் தொடங்குவதற்கு முன்னரே இராணுவத்தில் சேவை செய்தவர். இதே இடத்தில் பாதுகாப்பு செயலாளரான கோத்தபாய ராஜபக்ச, இராணுவத்தில் கடமையாற்றிய வேளையில், தமிழீழ விடுதலை புலிகளின் இராணுவ நுட்பங்கள், தாக்குதல்களை கண்டு அஞ்சிய காரணத்தினால், அமெரிக்காவிற்கு ஓடிச் சென்று அங்கு தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர்.
 
அரசியல் தெரியாது, தமது குடும்பங்களின் வாழ்க்கைக்காக, இராணுவத்தில் இணைந்து தமது உயிர்களை அர்பணித்த இராணுவ வீரர்களின் சேவையை கடமையை யாரும் இங்கு குறைத்து கணிப்பிவில்லை. ஆனால் சிறிலங்கா இராணுவம் தமிழீழ விடுதலை புலிகளை வெற்றி கொண்டார்கள் என்பது யதார்த்திற்கு அப்பாற்பட்டது. நடந்தது என்ன?
 
இவ் யுத்தத்தை சிறிலங்கா தொடர்ந்து ஓர் உள்நாட்டு பிரச்சனையாக கூறிவந்த பொழுதும், இவ் யுத்தத்தை உலகின் பலம் வாய்ந்த சகல நாடுகளும் முன்னின்று ஒருங்கிணைத்து நடத்தினர்கள் என்பதை உலகம் அறியும்.
 
தமிழீழ விடுதலை புலிகளை மீதான யுத்தத்திலேயே, உலகில் முதல் முதலாக சகல பலம் வாய்ந்த நாடுகளும் எந்த வேறுபாடுகளுமின்றி ஒன்றுபட்டு ஒருபக்கமாக சிறிலங்காவை ஆதரித்தனர் என்பதை உலகறியும்.
 
உதரணத்திற்கு, முன்னாள் இந்தியாவின் பிரதமர் ராஜீவ் காந்தியின் விடயத்தில் நீண்டகாலமாக தமிழீழ விடுதலை புலிகளை பழிவாங்க வேண்டுமென கங்கணம் கட்டியிருந்த இந்தியா, தமது பகைமை நாடுகளான, சீனா, பாகிஸ்தானுடன் விரும்பியோ விரும்பமாலோ, நேரடியாகவோ மறைமுகமாகவோ, தமிழீழ விடுதலை புலிகள் மீதான யுத்தத்தில் ஒருங்கிணைந்து நடத்தினார்கள்.
 
இதேபோல் அமெரிக்கா, தமக்கு ஒருபொழுதும் ஒத்துவராத நாடுகளான - ராஸ்யா, சீனா, ஈரான், விசேமாக வட கொரியா ஆகிய நாடுகளுடன் தமிழீழ விடுதலை புலிகள் மீதான யுத்தத்தில் ஒருங்கிணைந்திருந்தனர். 
 
இதேவேளை, தமிழீழ விடுதலை புலிகள் மீதான யுத்தத்தில் சில சர்வதேச அமைப்புக்கள், சில முக்கிய புள்ளிகளதும் பங்களிப்பை, நாம் அலட்சியம் பண்ண முடியாது. தம்மீது ராஜபக்ச, அரசு நன்றாக சாவரி செய்து விட்டார்களென சர்வதேச சமூதயம் இன்று காலம் தாழ்த்தி அதிர்ந்து நிற்கிறார்கள்.
 
உண்மைகளும் யதார்த்தங்களும்
 
தமிழீழ விடுதலை புலிகள் மீதான போரின் வெற்றிக்கு தமது பங்களிப்பே முக்கிய காரணமென கூறும் மேல் கூறப்பட்ட சிங்களத் தலைவர்கள், சகல விடயங்களையும் பக்கச்சார்பாக தமது இனவெறியின் கண்ணோடு பார்க்கிறார்களே அல்லாது, யதார்த்தங்களின் அடிப்படையில் பார்க்கவில்லை.
 
முதலாவதாக, தமிழீழ விடுதலை புலிகளின், அரசியல் ராஜதந்திர வேலை திட்டங்கள், இவர்களது இராணுவ வேலை திட்டங்களை போல் திறமை வாய்ந்தது அல்ல. இதனால்  சிறிலங்கா அரசினால் பல கோடிக்கணக்கான டொலர், யூரோ, பவுண்ஸ்களை செலவு செய்யப்பட்டு வந்த சர்வதேச பரப்புரைக்கு இணையாக இருக்க முடியவில்லை.
 
இதேவேளை, வெளிநாட்டில் தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் செயற்பாட்டாளர்களில் பெரும்பான்மையானோர், சர்வதேச அரசியலையோ, ராஜதந்திரத்தை புரிந்து கொள்ள கூடியவர்களாக இருக்கவில்லை.
 
புலம்பெயர் வாழ் மக்களிடையே தாம் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர்களென பெருமிதம் கொள்வதற்கு இவர்களுக்கு பதவி ஒன்றே தேவைபட்டது. இவையே, இவர்களது கெட்டிதனமும், கடமையாக விளங்கியது.
 
இரண்டவதாக, தமிழீழ விடுதலை புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையில் போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகி சில மாதங்களிற்குள், தமிழீழ விடுதலை புலிளிற்குள்ளிருந்த உட்பூசல்கள், மனக்கசப்புக்கள் யாவும் வெளிப்படையாகியிருந்தது. இதை பல புலனாய்வு நிறுவனங்கள் சந்தர்ப்பமாக பாவித்து பலன் அடைந்தார்கள்.
 
இதேவேளை, தமிழீழ விடுதலை புலிகளின் இரு முக்கிய தளபதிகள், சிறிலங்காவின் இராணுவ புலனாய்வுடனும், சிறிலங்கா அரசுடனும் மிகவும் இரகசியமான வேலை திட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.
 
இதனால் தமிழீழ விடுதலை புலிகளின் பல ஆயுத கப்பல்கள் சர்வதேச கடற்பரப்பில் அழிக்கப்பட்டிருந்தனர்.
 
இவ்வேளையில், தமிழீழ விடுதலை புலிகளிற்கு நிதி உதவியும், சில அரசியல் வேலைகளையும் மேற்கொண்டு வந்த சில புலம்பெயர் வாழ் தமிழர், தம்மை தலைவர் பிரபாகரன் அவர்கள், வன்னிக்கு வரவழைத்து சிவம்பு கம்பள வரவேற்பு செய்ய வேண்டுமென எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.
 
இது நிறைவேறாத கட்டத்தில், இவர்கள் தமிழீழ விடுதலை புலிகளை மிகவும் மோசமான முறையில் இழிவுபடுத்தியதுடன், வன்னிக்கு சென்று தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகளை சந்தித்து வந்தவர்கள் மீது எரிச்சலும் பொறமையும் கொண்டிருந்தனர். இவற்றை வெளிநாட்டு புலனாய்வு நிறுவனங்கள் கவனத்தில் கொண்ட காரணத்தினால், இவையும் தமிழீழ விடுதலை புலிகளிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது.
 
இதேவேளை, தமிழீழ விடுதலை புலிகள் நோர்வேயில் உருவாக்கம் பெற்ற “ஓஸ்லோ பிரகடனத்தை” ஏற்க மறுத்ததை பல இணையத்தள நாடுகள் கவனத்தில் கொண்டிருந்தனர்.
 
இதனால், தமிழீழ விடுதலை புலிகள் தனிநாடு தவிர்ந்த வேறு எந்த அரசியல் தீர்வையும் ஏற்க தயாராகவில்லையென என்று கணித்து கொண்டனர். இது தமிழீழ விடுதலை புலிகளிற்கு காட்டப்பட்ட ஓர் சிவப்பு விளக்காகும்.
 
இவ் சந்தர்ப்பத்தை பாவித்த சிறிலங்கா அரசு, தமிழீழ விடுதலை புலிகளுடன் போரிடுவதற்கு சர்வதேச சமூதாயத்தின் உதவியை நாடியிருந்தனர். அதாவது, தம்மால் தொடர்ந்தும், தமிழீழ விடுதலை புலிகளுடன் தனித்து நின்று யுத்தம் செய்ய முடியாது என்பதை வெளிப்படையாக உலகிற்கு அறிவித்திருந்தனர்.
 
சர்வதேச சமூதயாத்தின் உதவியை பெற்று கொள்வதற்காக, சிறிலங்கா அரசு பல விதப்பட்ட பொய் பிராச்சாரங்களுடன், யுத்த பிரதேசத்தின் நிலைமைகளை மிகைபடுத்தியுமிருந்தனர்.
 
இதற்காக சில சர்வதேச முக்கிய புள்ளிகளுக்கும் அவர்களது குடும்பங்களிற்கும் - சுற்றுலா, இலாவச விமானச் சீட்டு, ஐந்து நட்சத்திர தங்குமிட வசதி பொன்றவற்றுடன், பாரிய பெறுமதி வாய்ந்த வைரக் கற்களையும் பரிசாக வழங்கி, சர்வதேச சமூதாயத்தின் உதவியை நாடியிருந்னார்.
 
இதேவேளை யுத்தம் முடிவிற்கு வந்தவுடன், வடக்கு கிழக்கு தமிழ்வாழ் மக்களிற்கு ஓர் அரசியல் தீர்வை தாம் உடன் முன் வைக்க இருப்பதாக ராஜபக்ச அரசு சர்வதேச சமூதயத்திற்கு வாக்குறுதி கொடுத்திருந்தது. 
 
அதனை தொடர்ந்து பல நாடுகளில் தமிழீழ விடுதலை புலிகள் தடை செய்யப்பட்டனர். இதனால் தமிழீழ விடுதலை புலிகளின் வெளிநாட்டு கிளைகள் யாவும் தீவிர கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட்டதுடன், சில புலம் பெயர் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு, சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தனர்.
 
இவை யாவும் தமது எதிர்காலத்தில் ஓர் தொந்தரவான நிலைமையை உருவாக்குமென்பதை   தமிழீழ விடுதலை புலிகள் ஒருபொழுதும் எண்ணவில்லை. பலம் படைத்த நாடுகள் இவ்வேளையில், உலகின் சகல முக்கிய பலம் படைத்த நாடுகளும் வெளிப்படையான தமது ஆதரவை சிறிலங்காவிற்கு காட்ட ஆரம்பித்தனர்.
 
அத்துடன், சர்வதேச சமூதயத்தின் வேண்டுகோளிற்கு இணங்க, இந்து சமூத்திரத்தில் இந்தியா தனது இரவு பகல் கண்காணிப்பை ஆரம்பித்திருந்த காரணத்தினால், தமிழீழ விடுதலை புலிகளது சர்வதேச போக்குவரத்து, ஆயுத விநியோகம் யாவற்றிற்கு இடையூறு ஏற்பட்டது.
 
அதேவேளை, ராஜபக்சவின் சர்வதேச பரப்புரையாளர்கள், ஈரான், வட கொரியா நாடுகளின் ஆதரவை தேடியிருந்தனர். இவ்விரு நாடுகளும், மேற்கு நாடுகளின் பெரும்பான்மை ஆதரவை கொண்டிருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
 
இதுபோன்ற பல நாடுகளுடனான சமரசங்களை, ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை சபையிலேயே சிறிலங்காவினால் முன்னெடுக்கப்பட்டது. சிறிலங்காவின் சர்வதேச பரப்புரையாளர் ஒருவர் வட கொரிய தூதுவருடன் ஜெனிவாவில் முன்னெடுத்ததை நாம் நன்கு அறிவோம்.
 
இதேவேளை, தமிழ் ஓட்டுக்குழுக்களின் பங்களிப்பிற்குகளை நாம் குறைத்து கணக்கிட முடியாது. இவர்கள் சிறிலங்கா அரசிற்காக வடக்கு கிழக்கில் செய்த படுகொலைகள், நாசகார வேலைகள் என்பவை எண்ணில் அடங்காதவை.
 
இப்படியான பல காரணிகள், யதார்த்தங்கள் மூலம் தான், 2009ம் ஆண்டு மே மாதம், தமிழீழ விடுதலை புலிகளுடனான யுத்தத்தை சர்வதேச சமுதாயம் முடிவிற்கு கொண்டு வந்திருந்தது.
 
ஆகையால் தமிழீழ விடுதலை புலிகளுடனான யுத்தத்தை சர்வதேச சமூதாயமே நடத்தி வெற்றி கொண்டது. இவை தவிர, தெற்கின் வாக்குகளிற்காக, தாம் தான் தமிழீழ விடுதலை புலிகளுடனான யுத்தத்தை வெற்றி கொண்டோமென சிங்களத் தலைவர்களும், இராணுவ தளபதிகளும் தம்பட்டம் அடிப்பது மிகவும் வேடிக்கையானது.
 
யுத்தத்தை தாம் தான் வெற்றி கொண்டோமென கூறும் சிங்களத் தலைவர்கள், தாம் சர்வதேச சமூதாயத்திற்கு கூறிய கற்பனை கதைகளும் பொய்களும் எத்தனை, வடக்கு கிழக்கில், விசேடமாக முள்ளிவாய்காலில் எத்தனை ஆயிரம் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது என்பதை இவர்கள் எண்ணுவதுண்டா?
 
சிறிலங்காவின் பொய்களை நம்பி அன்று தவறுதலாக எடுக்கப்பட்ட முடிவிற்காக இன்றும் சர்வதேச சமூதாயம், ஏங்கி மனம் வருந்துகின்றனர்.
 
புலம்பெயர் தேசம்
 
பல புலம்பெயர் தேசத்து தமிழ் ஊடாகங்கள் உட்பட பல பிரமுகர்களும், எதிர்வரும் ஜனதிபதி தேர்தலில், பொதுவேட்பளரான மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டுவார். வெற்றியீட்டினால், வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு, அதாவது தமிழர் தாயாகத்தில் இவர், ‘தேன் மழை’ பொழிவாரென கனவு காணுகிறார்கள்.
 
இவர்கள் இக்கனவை காணுவதற்கு முன்பு, மைத்திரிபால சிறிசேனவையும், இவருடன் இணைந்து முன்னிற்பவர்களுடைய சரித்திரத்தை ஆராய வேண்டும். இவர்களது பகற் கனவு, நனவாகட்டும்!
 
நிற்க, முன்பு வடக்கு கிழக்கில் பாராளுமன்ற தேர்தலில்களில் படுதோல்வி அடைந்த சிலர், ஜனதிபதி தேர்தலை தொடர்ந்து, பாரளுமன்ற தேர்தல் வரலாமென எதிர்பார்த்து, தமது தேர்தலுக்கான வேலை திட்டங்களை ஆரம்பித்து விட்டனர். சுருக்கமாக கூறுவதனால் பாரளுமன்ற கதிரைகளுக்கு  காத்திருக்கும் இவர்கள், தமிழர் தவிப்பில் ‘குளிர் காய்கின்றனர்’
 
தற்போதைய வடக்கு கிழக்கு வெள்ள நிவாரணத்தை காரணம் காட்டி, புலம் பெயர் தேசத்தில், தமது தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல்களில் நேர்மையற்ற சிலரும், நிதி சேகரிக்க ஆரம்பித்துள்ளனர்.  இவர்களது நிதி சேகரிப்பின் விபரங்களை, இவர்கள் மக்களுக்கு வெளிப்படையாக காண்பிப்பார்களா? சேகரிப்படும் பணம் பாதிப்பாக்கப்பட்ட மக்களுக்கு சென்றடையுமா? 
 
எது என்னவானாலும், புலம் பெயர் தேசத்தில், வெள்ள நிவாரணத்திற்கு உதவி செய்ய விரும்புவோர், புலம் பெயர் தேசத்து பொறுப்பு வாய்ந்த அமைப்புக்கள் தவிர்ந்த வேறு யாரிடமும் வெள்ள நிவாரணத்திற்கு பணம் கொடுப்பதை தவிர்த்து கொள்ள வேண்டும்.
 
ச.வி.கிருபாகரன் 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ரெக்டிஃபையர் (Rectifier)

ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்!
யுத்த காலங்களில் வடக்கு கிழக்கில் முக்கிய பொறுப்புக்களை வகித்தவரும் சமாதானப் பேச்சுக்களின் போது மிக
17 September, 2018, Mon 12:00 | views: 350 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முல்லைத்தீவில் நடந்த ஆர்ப்பாட்டமும் முந்தநாள் நடந்த பேரவைக் கூட்டமும்...!!
மாவலி அதிகாரசபைக்கெதிராக முல்லைத்தீவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தை
2 September, 2018, Sun 12:20 | views: 454 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விக்கியை புறம்தள்ளி அரசுடன் இணைந்தது கூட்டமைப்பு...!
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான செயலணி அடுத்த மாதம் கூடவுள்ள நிலையில் அதில் பங்குகொள்ளும் முடிவை
26 August, 2018, Sun 15:02 | views: 767 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல்...!!
கடந்த திங்கட்கிழமை இரவு நாயாற்றுக் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள், எந்திரங்கள், மீன்பிடி
19 August, 2018, Sun 17:34 | views: 873 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குள்ள மனிதன் கிறீஸ் மனிதனின் தம்பியா?
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி, வட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் அண்மை நாட்களாகப்
12 August, 2018, Sun 14:12 | views: 1346 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS