Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
மூளை அமைப்பின் முக்கிய சாஸ்திரம்: 100 வருடங்களுக்கு பின் வெளிக்கொணர்ந்த நரம்பியல் நிபுணர்
20 November, 2014, Thu 23:30 GMT+1  |  views: 7462

 மூளைக்குள் நரம்பு இழை குவியலாக இருப்பதை ஆராய்ச்சியாளரான ஜேசன் யேட்மென் கண்டுபிடித்துள்ளார்.

 
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளரான ஜேசன் யேட்மென், கடந்த சில வருடங்களுக்கு முன் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி பயின்று கொண்டிருக்கும் இதனை கண்டுபிடித்துள்ளார்.
 
மொழிகளை கண்டறிவதிலும், படிப்பதிலும் மூளையின் அமைப்பு எந்த விதத்தில் பங்களிக்கிறது என்பது குறித்து பயின்று வரும் யேட்மென், மூளைக்குள் நரம்பு இழை குவியலாக உள்ளது முக்கியமான ஒன்று என எண்ணினார். ஏனென்றால் அவரும் அவரது சக நண்பர்களும் நரம்பு இழை குவியலாக இருப்பது குறித்து மருத்துவ இலக்கியத்தில் எங்கும் கண்டதில்லை. எனவே அவர்கள் இது புதிய கண்டுபிடிப்பாக இருக்கும் என கருதினர். 
 
மருத்துவ துறையில் இருக்கும் வேறு சிலரிடம் இது குறித்து கூறியபோது, அவர்களுக்கு புதிய தகவல் கிடைத்தது. அவர்கள் கண்டுபிடித்ததாக கூறிய நரம்பு இழை குவியல் பற்றி ஏற்கனவே பழைய மருத்துவ பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதையும் தெரிந்துகொண்டனர்.
 
மூளை பற்றி பழமையான கூற்றுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் பற்றி அறிந்துகொள்ளும் வகையில், 100 ஆண்டு பழமையான அந்த மருத்துவ புத்தகத்தில் ஆழமாக தங்கள் கவனத்தை செலுத்த ஆரம்பித்தனர். அதில் ஜெர்மனியை சேர்ந்த நரம்பியல் நிபுணரான கார்ல் வெர்னிக்கே, நரம்பு இழை குவியல் குறித்து கண்டுபிடித்ததுடன், அதை 1881 ஆம் ஆண்டில் மூளை பற்றிய தனது வரைபடத்தில் வெர்ட்டிகல் ஆக்சிபிடல் பேசிகுலஸ் (Vertical Occipital Fasciculus) என்று பெயரிட்டுள்ளதை யேட்மென் கண்டுபிடித்தார்.
 
தான் கண்டுபிடித்ததை நூறு ஆண்டுகளுக்கு முன்பே மற்றொருவர் கண்டுபிடித்து விட்டார் என்று தெரிந்தவுடன் தனது ஆராய்ச்சியை யேட்மென் நிறுத்தியிருக்கலாம். ஆனால் மூளையின் அமைப்பு பற்றி நூறு ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு முக்கியமான கூற்று, தற்போதைய மருத்துவ இலக்கியங்களில் ஏன் காணாமல் போனது என யேட்மென் யோசித்தார். 
 
பின்னர் இது குறித்து தனது துப்பறியும் பணியை அவர் தொடர்ந்தார். என்ன காரணத்தால் மூளை பற்றிய இந்த சாஸ்திரம் காணாமல் போனது என்று துப்பறிய தொடங்கினார். தொடர்ந்து சில வருடங்கள் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள பழைய மருத்துவ நூல்களை ஆராய்ந்தார். அப்போது மூளை பற்றிய வெர்னிக்கேவின் சாஸ்திரம் காணாமல் போனதற்கான அதிசயமான காரணத்தைக் கண்டுபிடித்தார். 
 
வெர்னிகேவுக்கு வழிகாட்டியாக இருந்த நரம்பியல் நிபுணர் தியோடர் மெய்னர்ட், தனது கூற்றில் மூளையில் முன்பக்கமிருந்து பின்பக்கமாக நரம்பியல் பாதை கிடைமட்டமாக செல்லும் என்று கூறியிருந்தார். ஆனால் வெர்னிக்கே கண்டுபிடித்த நரம்பு இழை கூட்டமானது செங்குத்தாக சென்றது. மெய்னர்ட் கூற்றை அப்போது இருந்த மருத்துவ விஞ்ஞானிகள் பொதுவாக நம்பியதால் அதற்கு முரணாக வெர்னிக்கேவின் கண்டுபிடிப்பு இருந்தது. எனவே அதை ஏற்றுக்கொள்ள அவர்கள் மறுத்துள்ளனர். 
 
ஆனால், வெர்ட்டிகல் ஆக்சிபிடல் பேசிகுலஸ்(Vertical Occipital Fasciculus) என்ற மூளையின் அமைப்பு மிக முக்கியமானது என்று யேட்மேன் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். நண்பரின் முகத்தை கண்டறிவதிலும், வார்த்தைகளை படித்து அதை மூளையின் மற்ற பகுதிகளுடன் இணைப்பதற்கும் இந்த அமைப்பு மிகவும் முக்கியம் என்பதை யேட்மென் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். 
 
இதன் மூலம் அறிவியல் பூர்வமான கண்டுபிடிப்பு நூறு ஆண்டுகளுக்கு பின் உண்மை தான் என்று நிரூபணமாகியுள்ளது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

  எறும்பு

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!
புரட்டாசி மாதம் பிறந்தவர்கள் பெரும் செல்வத்துடன் வாழ பிறந்தவர்கள். இவர்கள் முதல் போடாமலே சம்பாதிக்கும் வலிமை படைத்தவர்கள். இவர்கள
15 February, 2019, Fri 16:58 | views: 468 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆவணி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!
ஆவணியில் பிறந்தவர்கள் சுதந்திரமான தொழிலில் இருக்க விரும்புவார்கள். பெருந்தன்மையான குணம் கொண்ட இவர்கள் புகழோடு வாழ காரியங்களை சாதி
10 February, 2019, Sun 15:12 | views: 635 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!
ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலிகள். இவர்களிடம் மற்றவர்களை அடக்கி ஆளும் சக்தி உண்டு. இதை பயன்படுத்திக்கொண்டு இவர்கள்
3 February, 2019, Sun 6:18 | views: 751 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வைகாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!
வைகாசியில் பிறந்தவர்கள் எதையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். காலம்தான் இவர்களுக்கு மறதியைக் கொடுக்க வேண்டும். இவர்கள்
27 January, 2019, Sun 7:16 | views: 782 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சித்திரை மாதத்தில் பிறந்தவர்களின் குணங்களும் பலன்களும்...!!
சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டின் தொடக்க மாதம். இந்த மாதத்தை எந்த அளவு மகிழ்வுடன் வரவேற்கிறோமோ அதே போல இந்த மாதத்தில் பிறந்தவர்கள
20 January, 2019, Sun 12:30 | views: 1086 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS