Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
ஐ.நா.வுடன் மீண்டும் தொடங்கும் மோதல்
9 November, 2014, Sun 14:57 GMT+1  |  views: 6254

 இலங்கையில் போரின் போதும், போர் முடிவுக்கு வந்த பின்னரும் இடம்பெற்ற மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகம் மேற்கொள்ளும் விசாரணைகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன.

 
இத்தகைய மீறல்கள் குறித்த சாட்சியங்களை எழுத்து மூலம் சமர்ப்பிப்பதற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகம் வழங்கிய கால எல்லை கடந்த மாதம் 30ஆம் திகதியுடன் முடிவுற்றுள்ளது.
 
இந்த எழுத்­து­மூல சாட்­சி­யங்­களை ஆராய்ந்து, அடுத்தகட்ட விசா­ர­ணை­களின் மூலம் அவற்றின் உண்­மைத்­தன்­மையை உறு­திப்­ப­டுத்திக் கொண்டு, மீறல்கள் குறித்த அடிப்­படை ஆதா­ரங்­களை முன்­வைக்கும், இரண்­டா­வது கட்டப் பணிக்குள் ஐ.நா. விசா­ரணைக் குழு நுழைந்­தி­ருக்­கி­றது.
 
ஐ.நா. மனிதஉரிமை ஆணை­யாளர் பணி­ய­கத்தின் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில், இலங்கை அர­சாங்கம் இது­கு­றித்து மீண்டும் சந்­தே­கங்­க­ளையும், கேள்­வி­க­ளையும் எழுப்­பி­யி­ருக்­கி­றது.
 
கடந்­த­ வாரம் வெளி­வி­வ­கார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், கொழும்பில் சில வெளி­நாட்டுப் பிர­தி­நி­தி­களைச் சந்­தித்­தி­ருந்தார்.
 
இலங்கை தொடர்­பாக ஐ.நா. மனிதஉரி­மைகள் பேரவை நடத்தும், விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு வழங்கும் நாடு­களின் தூது­வர்கள், ஐ.நாவின் இலங்­கைக்­கான பிர­திநிதி ஆகி­யோ­ருடன், இலங்­கைக்­கான அவுஸ்­தி­ரே­லியத் தூது­வரும் இந்த சந்­திப்­புக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.
 
இந்த சந்­திப்­பின் ­போது, ஐ.நா. விசா­ர­ணைகள் பக்­கச்­சார்­பாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­கவும், சில­த­ரப்­பி­ன­ருக்கு ஆத­ர­வாக ஐ.நாவின் செயற்­பா­டுகள் அமைந்­துள்­ள­தா­கவும், போலி­யான சாட்­சி­யங்­களைச் சமர்ப்­பிக்கும் முயற்­சிகள் இடம்­பெ­று­வ­தா­கவும் அமைச்சர் பீரிஸ் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.
 
அது­மட்­டு­மன்றி, ஐ.நா. விசா­ர­ணைக்­குழு எவ்­வாறு செயற்­ப­டு­கி­ற­தென்ற கேள்­வி­யையும் அவர் எழுப்பத் தவ­ற­வில்லை.
 
ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட, இலங்­கையில் இடம்­பெற்ற மீறல்கள் குறித்து, ஐ.நா. மனிதஉரிமை ஆண­யாளர் பணி­ய­கத்தை விசா­ரிக்கக் கோரும் தீர்­மா­னத்தை இலங்கை அர­சாங்கம் ஏற்றுக் கொள்­ள­வில்லை.
 
ஜெனீ­வா­விலும், பின்னர் பல்­வேறு அரங்­கு­க­ளிலும் இலங்கை அர­சாங்கம் அதனை மிகவும் வெளிப்­ப­டை­யா­கவே கூறி­விட்­டது.
 
கடந்­த ­வாரம் நடந்த சந்­திப்­பின் ­போது, அமைச்சர் பீரிஸ் அத­னையும் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.
 
ஐ.நா. விசா­ர­ணையை நிரா­க­ரித்து விட்­டாலும், அது எப்­படி, எங்கே நடக்­கி­றது என்று உரி­மை­யோடு கேள்வி எழுப்­பி­யி­ருக்­கிறார் அமைச்சர் பீரிஸ்.
 
இது ஐ.நா. மீது இலங்கை கொண்­டுள்ள உரி­மையின் அடிப்­ப­டை­யி­லா­னது என்று கூறு­வதை விட, ஐ.நா. விசா­ர­ணையை நம்­ப­கத்­தன்­மை­யற்­றது என்று காட்டும் முயற்­சி­யா­கவே கருத வேண்டும்.
 
தாம் நிரா­க­ரித்­து­ விட்ட ஒரு சர்­வ­தேச விசா­ரணை விவ­கா­ரத்­துக்குள் அர­சாங்கம் திரும்பத் திரும்ப மூக்கை நுழைக்க முனை­கி­றது என்­பது அமைச்சர் பீரிஸின் இந்தக் கருத்­து­க­ளி­லி­ருந்து புரிந்­து­கொள்­ளத்­தக்­க­தாக உள்­ளது.
 
இலங்­கையில் இடம்­பெற்ற மீறல்கள் குறித்த ஐ.நா. விசா­ர­ணைகள் தீவிரம் பெற்­றி­ருப்­பதை இலங்கை அர­சாங்­கத்­தினால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத ஒரு விட­ய­மா­கவே இருக்­கி­றது.
 
இந்த விசா­ரணை அறிக்கை இலங்கை மீது நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கோ அல்­லது எவ­ரை­யேனும் சர்­வ­தேச நீதி­மன்­றத்தில் நிறுத்­து­வ­தற்கோ வழி­வ­குக்கும் என்று அஞ்­சு­கின்ற சூழலும், அதற்­கான வாய்ப்­பு­களும் இப்­போது இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.
 
ஆனால், இந்த விசா­ரணை அறிக்கை சர்­வ­தேச அளவில் ஒரு முக்­கிய ஆவ­ண­மாக இருக்கப் போகி­றது.
 
இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்­களை அம்­ப­லப்­ப­டுத்தும், அதற்கு நியாயம் வழங்கக் கோரும் ஒரு அறிக்­கை­யாக அமையப் போகி­றது.  அதில் அர­சாங்­கமும், விடு­தலைப் புலி­களும் குற்­றம்­சாட்­டப்­ப­டலாம். ஏனென்றால், இரு­த­ரப்­பும்தான் போரில் ஈடு­பட்­ட­வர்கள்.
 
அர­சாங்கம் தமது படைகள் எந்தப் போர்க்­குற்­றங்­க­ளிலும் ஈடு­ப­ட­வில்லை என்றே கூறி­வ­ரு­கி­றது.  என்­றாலும், அண்­மைக்­கா­லத்தில் அது­பற்றி விசா­ரிக்கத் தயா­ரென்று உதட்­ட­ளவில் மட்டும் கூறி­யி­ருக்­கி­றது. அதற்­கான முயற்­சிகள் இன்­னமும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.
 
அதே­வேளை, விடு­தலைப் புலிகள் போர்க்­குற்­றங்­களில் ஈடு­பட்­டனர் என்று அர­சாங்கம் கூறு­கி­றது. ஆனால், அதை­யும்­கூட, சர்­வ­தேச குழு விசா­ரிப்­பதை அர­சாங்கம் ஏற்­க­வில்லை.
 
இலங்கை அரசின் எதிர்ப்­பு­க­ளையும் மீறி, இலங்­கைக்கு ஆத­ர­வான நாடு­களின் தடை­க­ளையும் மீறி இப்­போது சர்­வ­தேச விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன.
 
இந்தச் சூழ­லில்தான் அர­சாங்கம், அந்த விசா­ர­ணை­க­ளையும், அதில் சாட்­சி­ய­ம­ளிப்­போ­ரையும், குற்­றம்­சாட்டத் தொடங்­கி­யுள்­ளது.
 
ஐ.நா. விசா­ர­ணை­களை ஏற்­கவும் முடி­யாது, அதற்கு ஒத்­து­ழைக்­கவும் முடி­யாது என்று கூறிய அர­சாங்கம், ஒரு­கட்­டத்தில் இந்த விசா­ர­ணைக்­குழு முன் சாட்­சி­ய­ம­ளிப்போர் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று மிரட்­டவும் தயங்­க­வில்லை.
 
பின்னர், ஐ.நா. விசா­ர­ணைக்­குழு முன் சாட்­சி­ய­ம­ளிப்போர் மீது எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­டா­தென்று அர­சாங்கம் வாக்­கு­றுதி அளித்­தி­ருந்­தது. இருந்­தாலும், பல்­வேறு வழி­மு­றை­களின் ஊடாக, சாட்­சி­ய­ம­ளிக்கும் முயற்­சிகள் குழப்­பப்­பட்­டன.
 
சாட்­சியமளிப்­ப­தற்­கான சில படி­வங்களை வைத்­தி­ருந்­தா­ரென்று கிளி­நொச்­சியில் ஒருவர் கைது செய்­யப்­பட்டார்.  அவர் போலி­யான சாட்­சி­யங்­களைத் திரட்­டு­வ­தற்கு முற்­பட்­டா­ரென்று குற்­றம்­சாட்டி, குற்­றப்­ புல­னாய்­வுத் ­து­றை­யி­னரின் தடுப்­புக்­கா­வலில் இருந்து வரு­கிறார்.
 
இதனை முன்­வைத்தே, போலி­யான சாட்­சி­யங்கள் ஐ.நாவுக்கு சமர்ப்­பிக்­கப்­ப­டு­வ­தாக குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார் அமைச்சர் பீரிஸ்.
 
ஐ.நா. விசா­ரணைக் குழுவை நாட்­டுக்குள் அனு­ம­தித்­தி­ருந்தால், இத்­த­கைய நிலை ஏற்­பட்­டி­ருக்­காது. இப்­போது ஜனா­தி­பதி ஆணைக்­குழு விசா­ர­ணை­களை மேற்­கொள்­வது போல அதுவும், பகி­ரங்­க­மாக சாட்­சி­யங்­களைப் பெற்­றி­ருக்கும். ஆனால் அர­சாங்கம் அதற்கு இட­ம­ளிக்­க­வில்லை.
 
இத்­த­கைய சூழலில், ஐ.நாவுக்கு சாட்­சி­ய­ம­ளிக்கும் படி­வங்­களை வைத்­தி­ருந்தார் என்ற குற்­றச்­சாட்டை முன்­வைத்து, ஒரு­வரைக் கைது செய்­தது சர்­வ­தேச அளவில் விச­னங்­களைத் தோற்­று­வித்­துள்­ளது. உண்­மையில் ஐ.நா. அத்­த­கை­ய­தொரு சாட்­சியப் படி­வத்தை வெளி­யி­ட­வில்லை. அது உள்­ளூரில் தயா­ரிக்­கப்­பட்­டது.
 
போரினால் பாதிக்­கப்­பட்ட பெரு­ம­ள­வான மக்­க­ளுக்கு அது­பற்றிச் சாட்சி சொல்ல விரும்­பி­னாலும், அதற்­கான வழி­மு­றைகள் தெரி­யாது அல்­லது அதற்­கான போதிய கல்­வி­ய­றிவு இல்லை. அவ்­வா­றா­ன­வர்­களின் சாட்­சி­யங்­களைத் திரட்­டவே இது­போன்ற படி­வங்கள் உள்­ளூரில் அச்­சி­டப்­பட்­டி­ருக்­கலாம்.
 
இலங்கை அர­சாங்கம் இதனை ஒரு குற்­றச்­செ­ய­லாகப் பார்க்­கி­றது. ஆனால், ஐ.நாவோ அமெ­ரிக்­காவோ இதனை ஐ.நாவுக்கு ஒத்­து­ழைக்கும் ஒரு செயற்­பா­டா­கவே பார்க்­கி­ன்­றன.
 
ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வைக்­கான அமெ­ரிக்கத் தூதுவர், இது­கு­றித்து டுவிட்­டரில் பதிவு செய்­துள்ள குறிப்பு ஒன்றில், ஐ.நாவுக்கு ஒத்­து­ழைக்க முற்­ப­டு­வோரை மௌன­மாக்க முற்­ப­டு­வது, ஐ.நா. மீதான ஒரு தாக்­குதல் என்­பதை இலங்கை அர­சாங்கம் புரிந்­து­கொள்ள வேண்­டு­மென்று எச்­ச­ரிக்கும் பாணியில் கூறி­யி­ருக்­கிறார்.
 
ஒரு­பக்­கத்தில், ஐ.நா. விசா­ர­ணை­களை நடத்­து­வ­தா­கவும், இர­க­சி­ய­மான முறை யில் சாட்­சி­யங்­களை அளிப்­ப­தற்­கான கால­எல்­லையை நீடித்­துள்­ள­தா­கவும், அர­சாங்கம் குற்­றச்­சாட்­டு­களைக் கூறு­கி­றது.
 
மறு­பக்­கத்தில் ஐ.நாவுடன் ஒத்­து­ழைப்­போரை மௌன­மாக்க அர­சாங்கம் முனை­வ­தாக அமெ­ரிக்கா குற்­றம்­சாட்­டு­கி­றது.
 
அமெ­ரிக்­காவின் இந்தக் குற்­றச்­சாட்டை, நோர்­வேயின் முன்னாள் சமா­தானத் தூதுவர் எரிக் சொல்­ஹெய்மும் ஆத­ரித்­தி­ருக்­கிறார்.
 
இத்­த­கைய கட்­டத்தில், போர்க்­குற்­றங்கள் இடம்­பெற்­றதா என்று விசா­ரிக்க காணா­மற்­போனோர் குறித்து விசா­ரிக்கும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிறப்பித்த உத்தரவு எந்தளவுக்கு நேர்மையானது என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
 
ஏனென்றால், ஐ.நாவுக்கு சாட்சியமளிக்கும் படிவங்களை வைத்திருந்தார் என்பதற்காகவே, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக போர்க்குற்றங்கள் குறித்து எத்தனை பேர் துணிச்சலுடன் சாட்சியமளிக்க முன்வருவார்கள் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
 
சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததோடு அரசாங்கம் நின்று கொண்டது. அதனை நிறைவேற்றி, செயற்படுத்த எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
 
இத்தகைய நிலையில், அரசாங்கம் தனது உள்ளூர் விசாரணைப் பொறிமுறைகளையும் வலுப்படுத்தாமல், சர்வதேச விசாரணைப் பொறிமுறைகளையும் பலவீனப்படுத்த முற்பட்டு வருகிறது.
 
இது, சர்வதேச அளவில் இலங்கைக்கு மேலும் கெட்ட பெயரைத்தான் தேடிக் கொடுக்குமே தவிர, அதனைக் காப்பாற்ற உதவப் போவதில்லை.
 
- சத்ரியன்
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.
* கண் இல்லாத உயிரினம் மண்புழு.
* தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
குற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்
கொழும்பு – பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கதிரேசன் ஆலய வீதிக்குள் உள்நுழையும் போது வாசனை நிரம்பிய
11 November, 2018, Sun 14:45 | views: 514 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சம்பந்தரின் மண்டேலா மஹிந்தவிடம் அப்பம் சாப்பிடப் போய்விட்டார்
“சந்தர்ப்பவாதிகளை எம்.பி ஆக்கிவிட்டு அவர்கள் நேர்மையாக நடக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். இது எந்த
4 November, 2018, Sun 12:17 | views: 576 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆட்சிக் கவிழ்ப்பும் பின்னணியும்!
ஒரு சிலரைத் தவிர, இலங்கையிலோ, உலகத்திலோ யாருமே எதிர்பாராத அரசியல் மாற்றம் – கடந்த வெள்ளிக்கிழமை
29 October, 2018, Mon 10:15 | views: 764 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாவின் கனவு!
டி.ஏ.ராஜபக்ச நினைவிடம் அமைப்பதில் 80 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டை
22 October, 2018, Mon 14:44 | views: 548 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அரசியற் கைதிகள் விடுவிக்கப்படவில்லை...!!
ஒரு சிவில் செயற்பாட்டாளர் என்னிடம் கேட்டார். அரசியற்கைதிகளின் போராட்;டம் எனப்படுவது பிரதானமாக
14 October, 2018, Sun 15:59 | views: 468 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS