Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி நடாத்தப்பட்ட போராட்டம் _ பேராட்டக் களத்தில் 244.000 போராளிகள்!!
France Tamilnews
பரிசை நோக்கிய 47 நெடுஞ்சாலைகள் தேசியச் சாலைகள் முடக்கம் - தொடரும் பெரும் நெருக்கடி - பரிசிற்குள்ளும் போராளிகள்!!
France Tamilnews
பரிசிற்குள் கைதுகளும் காவற்துறையினருடனான மோதல்களும் - வெளிவந்துள்ள காணொளிகள்!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டம் - ஒருவர் பலி - பலர் காயம் - காணொளி
France Tamilnews
இன்று - விமானநிலையங்கள் - தொடருந்து நிலையங்கள் - மேலும் பல இடங்கள் முடக்கப்படும் - களமிறங்கும் காவற்துறை
France Tamilnews
நவநீதம்பிள்ளை இன்னொரு இரும்புச் சீமாட்டி
1 September, 2014, Mon 17:02 GMT+1  |  views: 6222

 கடந்த ஆறு ஆண்டுகளாக இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுக்கும் ஒரு மனிதராக இலங்கை அரசாங்கத்தினால் அதிகளவில் வெறுக்கப்பட்ட ஒரு மனிதராக இருந்து வந்த நவநீதம்பிள்ளை, இன்றுடன் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பதவியில் இருந்து நீங்கப் போகிறார்.

 
லூயிஸ் ஆபர் அம்மையாரை அடுத்து, ஐ.நா. மனித உரிமை ஆணையாளராக 2008 ஆம் ஆண்டு நான்காண்டுப் பதவிக் காலத்துக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந் தார் நவநீதம்பிள்ளை. பின்னர் அவருக்கு இரண்டாண்டு கால சேவை நீடிப்பு அளிக்கப்பட்டது.
 
இன்­றுடன் அவ­ரது ஆறாண்டு பணிக்­காலம் முடி­வ­டை­ய­வுள்­ளது.
 
இந்த ஆறாண்­டு­க­ளிலும் நவ­நீ­தம்­பிள் ளை உல­க­ளவில் முக்­கி­ய­மா­ன­தொரு மனி­த­ராகத் தன்னை நிலைப்­ப­டுத்தும் அள­வுக்கு, மனித உரி­மை­க­ளுக்­காகக் குரல் கொடுத்­தி­ருக்­கிறார்.
 
இவர் மனித உரிமை ஆணை­யா­ள­ரா கப் பதவி வகித்த கால­கட்­டங்­களில், இலங்கை, சிரியா, ஈராக், வட­கொ­ரியா, லிபியா, ஆப்­கா­னிஸ்தான், காஸா, எகிப்து, மத்­திய ஆபி­ரிக்க நாடுகள் போன்­ற­வற்றில் மனித உரிமை மீறல்கள் முக்­கிய சவா­லாக மாறி­யி­ருந்­தது.
 
மனித உரி­மை­களைக் கட்­டுப்­ப­டுத்தும் அதி­காரம் படைத்­த­வ­ராக இவர் இல்­லாத போதிலும், மனித உரிமை மீறல்கள் குறித்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு முக்­கிய கார­ண­மாக அமைந்­தவர் என்­பதில் மாற்றுக் கருத்­துக்கு இட­மில்லை. குறிப்­பாக, இலங்கை விவ­கா­ரத்தில் இவ­ரது ஈடு­பாடும், கடும் போக்கும் தான் அர­சாங்­கத்தைப் பெரிதும் நெருக்­க­டிக்­குள்­ளாக்­கி­யது.
 
விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரில் எந்த மனித உரிமை மீறல்­க­ளுமே நடக்­க­வில்லை என்று சாதித்து வந்த இலங்கை அர­சாங்­கத்தை, போர்­க்குற்றம் குறித்து விசா­ரிக்கும் ஒரு உள்­நாட்டு விசா­ரணைப் பொறி­மு­றையை உரு­வாக்கும் அள­வுக்கு படி­யி­றங்க வைத்­ததில் நவ­நீ­தம்­பிள்­ளையின் பங்கு முக்­கி­ய­மா­னது.
 
அமெ­ரிக்கா தலை­மை­யி­லான மேற்­கு­லகம், ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையில், கொண்­டு­வந்த அடுத்­த­டுத்த மூன்று தீர்­மா­னங்கள் தான், இலங்­கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வ­தேச விசா­ர­ணை­க­ளுக்கு கார­ண­மா­கி­ன. ஆனால், அத்­த­கைய தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­படக் கார­ண­மாக இருந்­தவர் நவ­நீ­தம்­பிள்ளை தான் என்றே இலங்கை அர­சாங்கம் கரு­து­கி­றது.
 
ஆரம்­பத்­தி­லி­ருந்தே, போர்க்­குற்­றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டு­மென்று வலி­யு­றுத்தி வந்­தவர் நவ­நீ­தம்­பிள்ளை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
 
இலங்­கையில் போரின் போது, இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசா­ரிப்­ப­தற்கு, சர்­வ­தேச விசா­ர­ணையே அவ­சி­ய­மென்ற அவ­ரது வலி­யு­றுத்­த­லுக்கு கடந்த மார்ச் மாதமே அதுவும் அவ­ரது பத­வியின் இறு­திக்­கா­லத்­தி­லேயே பலன் கிடைத்­தது.
 
இன்­றுடன் ஓய்வு பெற­வி­ருக்கும் நவ­நீ­தம்­பிள்ளை, கடந்த ஜூலை மாதமே விடுப்பில் சென்று விடு­வா­ரென்று முன்னர் பேசப்­பட்­டது.
 
ஆனால், இலங்­கையில் இடம்­பெற்ற மீறல்கள் குறித்த விசா­ரணைக் குழுவை அமைப்­பது, அதனை விசா­ர­ணை­களை நெறிப்­ப­டுத்தும் பணி­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக மட்­டு­மன்றி சிரியா, காஸா உள்­ளிட்ட இடங்­களில் ஏற்­பட்ட மோதல்­க­ளாலும், அவர் கடைசி நாள் வரை பணி­யாற்ற வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.
 
இலங்கை தொடர்­பான ஐ.நா. விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்­காக அவர் மேற்­கொண்ட முயற்­சி­களும், இலங்­கை யின் மனித உரிமை மீறல்­க­ளுக்கு எதி­ரா கக் குரல் கொடுத்­த­தற்­கா­கவும் நவ­நீ­தம்­பிள்ளை, மிக­மோ­ச­மான விமர்­ச­னங்­களை அர­சாங்­கத்­திடம் இருந்து எதிர்­கொள்ள நேரிட்­டது.
 
இலங்கை அர­சாங்­கத்­தினால் மிக மோச­மாக விமர்­சிக்­கப்­பட்ட வெளி­நாட்டுப் பிர­மு­கர்­களை வரி­சைப்­ப­டுத்­தினால், அதில் நவ­நீ­தம்­பிள்­ளைக்கே முத­லிடம் கிடைக்கும்.
 
யார் யாரெல்லாம், தமக்­கெ­தி­ராகக் குரல் கொடுக்­கி­றார்­களோ, இலங்­கையில் இடம்­பெறும் மீறல்­களை சுட்­டிக்­காட்டி கண்­டிக்­கி­றார்­களோ, அவை குறித்த நம்­ ப­க­மான நடு­நி­லை­யான விசா­ர­ணை­க ளைக் கோரு­கி­றார்­களோ அவர்­க­ளை­யெல்லாம் புலி­யாக உரு­வ­கப்­ப­டுத்­து­வது இலங்­கையின் வழக்கம்.
 
அது ஒபா­மா­வாக இருந்தால் என்ன, பான் கீ மூனாக இருந்­தா­லென்ன, எரிக் சொல்­ஹெய்­மாக இருந்தால் என்ன, நவ­நீ­தம்­பிள்ளை என்­றா­லென்ன, எல்­லோ­ருக்­குமே புலிப்பட்டம் கட்டிப்பார்ப்­பது தான் இலங்­கையின் வழக்கம்.
 
அந்தவகையில், நவ­நீ­தம்­பிள்­ளையும் பெண் புலி­யா­கவே அர­சாங்­கத்­தினால் விமர்­சிக்­கப்­பட்டார்.
 
அவர் ஒரு தென்­னா­பி­ரிக்கத் தமி­ழ­ராக வேறு இருந்து விட்­டதால், அர­சாங்­கத்­துக்கு இன்னும் வச­தி­யாகிப் போனது.
 
ஆனால், தென்­னா­பி­ரிக்க நிற­வெறி ஆட்­சிக்­கா­லத்தில், வெள்­ளை­ய­ரல்­லாத முதல் சட்­டத்­த­ர­ணி­யாக, உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ர­ச­ராக உரு­வெ­டுத்த நவ­நீ­தம்­பிள்­ளையின் பக்­கச்­சார்­பின்மை தான், அவரை ருவாண்­டாவில் இடம்­பெற்ற மீறல்கள் குறித்து விசா­ரிப்­ப­தற்­கான ஐ.நா. விசா­ரணை நீதி­மன்­றத்­துக்­கான நீதி­ப­தி­யாகத் தெரிவு செய்ய வைத்­தது.
 
எட்­டாண்­டுகள் அதில் பணி­யாற்­றிய அவர் பின்னர், ஐந்­தாண்­டுகள் ஹேக்கில் உள்ள சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் நீதி­ப­தி­யாகப் பணி­யாற்­றினார்.
 
இந்த சர்­வ­தேச நீதித்­துறைப் பத­விகள் ஒன்றும், நவ­நீ­தம்­பிள்­ளையின் பக்­கச்­சார்­பி­னாலோ, அல்­லது எந்­த­வொரு நாட்­டி­னதும் சிபாரிசி­னாலோ வழங்­கப்­பட்­ட­வை­யல்ல.
 
திற­மையும், பக்­கச்­சார்­பின்­மையும் தான் அவரை ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ள­ராக முன்­மொ­ழியக் கார­ண­மா­கி­யது.
 
இந்த ஆறாண்­டு­க­ளிலும் நவ­நீ­தம்­பிள் ளை, இலங்கை தொடர்­பா­கவே அதிக சவால்­க­ளையும் விமர்­ச­னங்­க­ளையும் எதிர்­கொண்­டுள்ளார் என்­பதை மறுக்க முடி­யாது. இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்­க­ளுக்கு நம்­ப­க­மான சாட்­சி­யங்கள் இருப்­ப­தாக அவர் நம்­பி­யதால், சர்­வ­தேச விசா­ரணை என்ற விடாப்­பி­டி­யான கொள்­கையில் அவர் இருந்து வந்தார்.
 
அவ­ரது அந்தப் பிடி­வாதம் அர­சாங்­கத்­துக்கு ஏற்­ப­டுத்­திய எரிச்சல், கோபத்­தினால் பல­முறை அவரை மிகக்­கே­வ­ல­ மா­கவே அரசுப் பிர­தி­நி­திகள் விமர்­சித்­துள்­ளனர்.
 
அவர் மீது இலங்கை அரசுப் பிர­தி­நி­திகள் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் முன்­வைத்த மிக மோச­மான விமர்­ச­னங்­களால், ஒரு கட்­டத்தில், பேர வைக் கூட்­டத்­தி­லேயே கண்­ணீரைத் துடைக்க வேண்­டிய நிலைக்கும் முகம் கொடுக்க நேரிட்­டது.
 
நவ­நீ­தம்­பிள்ளை பக்­கச்­சார்­பா­னவர் என்றும், புலி­களின் கையாள் என்றும், அவர்­க­ளிடம் பணம் வாங்­கி­யவர் என்றும் வாய்க்கு வந்­த­படி அர­சாங்கம் விமர்­சனம் செய்த போதிலும், சர்­வ­தேச அளவில் மிகவும் மதிப்­புக்­கு­ரிய ஒரு­வ­ரா­கவே நவநீ­தம்­பிள்ளை இருக்­கிறார்.
 
நவ­நீ­தம்­பிள்ளை இலங்கை விவ­கா­ரத்தில் மட்­டு­மல்ல, எங்கு தவறு நடக்­கி­றதோ அதனை வெளிப்­ப­டை­யா­கவே கண்­டிக்கும் இயல்­பு­டை­யவர்.
 
இவர் இந்த ஆறாண்­டு­களில் சுமார் 60 நாடு­க­ளுக்குப் பயணம் செய்து, மனித உரி­மை­களை நிலை­நாட்­டு­வ­தற்­காக முயற்­சித்­தி­ருக்­கிறார். கடந்த 22ஆம் திகதி, ஐ.நா. பாது­காப்புச் சபைக் கூட்­டத்தில் உரை­யாற்றும் போது, உல­க­ள வில் நடக்கும் மோதல்­களைத் தடுப்­ப­தற்கு ஐ.நா. பாது­காப்புச் சபை உரிய முறையில் செயற்­ப­ட­வில்லை என்று நேர­டி­யா­கவே குற்­றம்­ சாட்­டி­யி­ருந்தார்.
 
ஐ.நாவின் பாது­காப்­புச்­சபை மேல­தி­க­மான பொறுப்­பு­டனும், உட­ன­டி­யா­கவும் செயற்­பட்­டி­ருந்தால், இலட்­சக்­க­ணக்­கான மனித உயிர்­களை பாது­காத்­தி­ருக்க முடியும் என்று தாம் உறு­தி­யாக நம்­பு­வ­தாக தெரி­வித்த நவ­நீ­தம்­பிள்ளை, சகித்துக் கொள்ள முடி­யாத மனித துன்­பு­றுத்தல்கள், சர்­வ­தேச அமை­தி­யையும் பாது­காப்­பையும் பார­தூ­ர­மாக மீறிய சம்­ப­வங்­க­ளையும், அவற்­றுக்கு நீண்­ட­கால ஆபத்­துக்­களை உரு­வாக்­கக்­கூ­டிய நிகழ்­வு­க­ளையும் ஐ.நா. பாது­காப்­புச்­சபை இரண்டாம் பட்­ச­மாகக் கருதிச் செயற்­பட்­ட­தா­கவும் விமர்­சித்­தி­ருக்­கிறார்.
 
அவ­ரை­ய­டுத்து ஐ.நா. பாது­காப்புச் சபையில் உரை­யாற்­றிய ஐ.நா பொதுச்­செ­யலர் பான் கீ மூன், வெளி­யிட்ட கருத்­துகள் நவ­நீ­தம்­பிள்ளை எந்­த­ள­வுக்கு நேர்­மை­யுடன் பணி­யாற்­றினார் என்­பதை வெளிப்­ப­டுத்தப் போது­மா­னது.
 
உல­க­ளவில் நாம் சம­கா­லத்தில் முகம் கொடுத்துக் கொண்­டி­ருக்கும் பார­தூ­ர­மான மனித உரிமை மீறல்கள் தொடர்­பாக, நவ­நீ­தம்­பிள்­ளையின் நேர்­மை­யான கருத்­துக்கள் மற்றும் வெளிப்­ப­டை­யான அறிக்­கை­களில் இருந்து ஐ.நா. பாது­காப்­புச்­சபை உறுப்­பி­னர்கள் பெரு­ம­ளவு பயன்­பெற்­றார்கள்.
 
தாம் கண்­டதை கண்­ட­ப­டியே சொல்­லுவார் நவ­நீ­தம்­பிள்ளை.
 
மனித உரி­மைகள் மீறப்­படும் போதும், மனி­தர்கள் துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குள்­ளாகும் போதும் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் சார்பில் வாதாடும் வழக்­க­றி­ஞ­ராக அவர் இருப்பார் என்று பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்குத் தெரியும். மற்­ற­வர்கள் சில விட­யங்­களை பேசத் தயங்கும் சம­யங்­களில் கூட, நவ­நீ­தம்­பிள்ளை தைரி­ய­மாக வெளிப்­ப­டை­யாக பேசத் தயங்­கா­தவர். பயம் இல்­லாமல் பேசக்­கூ­டி­யவர்.
 
நவ­நீ­தம்­பிள்­ளையின் ஐ.நா. பணி முடி­வுக்கு வந்­தாலும், உலக மனி­தர்­க­ளையும் பாதிக்கும் பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­வ­தற்­கான முக்­கிய குர­லாக நவ­நீ­தம்­பிள்­ளையின் குரல் தொடர்ந்து ஒலிக்கும். 
கடந்த ஆறாண்­டு­க­ளாக அவ­ருடன் இணைந்து பணி செய்ய நேர்ந்தது குறித்து தாம் நன்றியுடன் பெருமையடைவதாகவும் பான் கீ மூன் தெரிவித்திருந்தார்.
 
இவ்வாறான, துணிச்சலும் நேர்மையும் மிக்க ஒருவரான நவநீதம்பிள்ளை, இன்றுடன் ஓய்வு பெறவுள்ளதையிட்டு இலங்கை அரசாங்கம் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது.
 
நவநீதம்பிள்ளை தாம் ஐ.நா. பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும், தொடர்ந்து மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பேன் என்று தெரிவித்திருக்கிறார்.
 
எனவே, அவரை அரசாங்கம் இனிமேலும் புலியாகவே பார்க்கும், விமர்சிக்கும். அதையெல்லாம் அவர் கண்டுகொள்ளப் போவதில்லை.
 
அதேவேளை, புதிய ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இளவரசர் சையிட் அல் ஹுசெய்ன் நாளை பதவியேற்கப் போகிறார்.
 
அவர் பக்கசார்பற்றவராகச் செயற்படுவார் என்று இலங்கை அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
 
ஆனால், அவர் கூட இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டால், நிச்சயம், புலியாக்கப்படுவார். பக்கசார்பானவராக விமர்சிக்கப்படுவார்.
 
அந்தப் பெயரை அவர் எடுப்பதற்கு நீண்டகாலம் செல்லாது என்றே தோன்றுகிறது.
 
என்.கண்ணன்
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் எது? 
  சஹாரா பாலைவனம் (ஆபிரிக்கா)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
குற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்
கொழும்பு – பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கதிரேசன் ஆலய வீதிக்குள் உள்நுழையும் போது வாசனை நிரம்பிய
11 November, 2018, Sun 14:45 | views: 559 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சம்பந்தரின் மண்டேலா மஹிந்தவிடம் அப்பம் சாப்பிடப் போய்விட்டார்
“சந்தர்ப்பவாதிகளை எம்.பி ஆக்கிவிட்டு அவர்கள் நேர்மையாக நடக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். இது எந்த
4 November, 2018, Sun 12:17 | views: 591 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆட்சிக் கவிழ்ப்பும் பின்னணியும்!
ஒரு சிலரைத் தவிர, இலங்கையிலோ, உலகத்திலோ யாருமே எதிர்பாராத அரசியல் மாற்றம் – கடந்த வெள்ளிக்கிழமை
29 October, 2018, Mon 10:15 | views: 775 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாவின் கனவு!
டி.ஏ.ராஜபக்ச நினைவிடம் அமைப்பதில் 80 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டை
22 October, 2018, Mon 14:44 | views: 552 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அரசியற் கைதிகள் விடுவிக்கப்படவில்லை...!!
ஒரு சிவில் செயற்பாட்டாளர் என்னிடம் கேட்டார். அரசியற்கைதிகளின் போராட்;டம் எனப்படுவது பிரதானமாக
14 October, 2018, Sun 15:59 | views: 474 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS