Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

ஜெய் அனுமான் ஜோதிட நிலையம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வீடு வாடகைக்கு

வேலைக்கு பெண் தேவை

ஊழியர்கள் தேவை

78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché SITIS MARKET et Coccinelle) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).
click to view more   click to call
06 05 59 89 89

வேலை ஆட்கள் தேவை

இயற்கை மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

வேலையாள் தேவை

காணி விற்பனைக்கு

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.
click to call 07 69 21 85 73

ஆங்கில வகுப்புக்கள்

வேலைக்கு ஆள் தேவை

Baill விற்பனைக்கு

Ezanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.
மாத வாடகை : 2000€
விலை :90000 €
click to call 06 69 04 35 45

ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்

திருமண மண்டப சேவை

நிகழ்வு சேவைகள்

Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
21
ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல்
துர்முகி 2047
திதி: ஏகாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

இஸ்லாமும் - இஸ்லாமிய தீவிரவாதிகளும் முழுமையான பார்வை

26 September, 2014, Fri 15:54   |  views: 6059

இன்று உலகம் முழுவதும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றது. இவ்வாறான  தோற்றம் ஏற்படுவதற்கு காரணம் (அல்லாஹு அக்பர் -  இறைவனே மிகப் பெரியவன்) எனும் ஒரு  வாசகம். பொரும் பாலும் வக்கிரமான கொலைகளையும், குண்டு வெடிப்புக்களையும் செய்யு முன்னும்  செய்த பினரும் இவர்கள் அல்லாஹு அக்பர் என இறைவனை அளைப்பதாலேயே இஸ்லாமியர்கள்  பற்றிய இவ்வாறான பார்வை ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது. அது மட்டுமின்றி இஸ்லாம் உலகில் கிறிஸ்தவ மதத்திற்கு அடுத்த படியாக ஆதிகம் மக்களால் பின்பற்றப்படுவதும் இஸ்லாத்தில்  1.சுன்னி 2.ஷியா 3.சூபித்துவம் 4.அகமதியா 5.குரானிசம் என பல உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. இஸ்லாத்தில் உள்ள அனைத்து உட்பிரிவுகளும் அல்லாஹுவையே ஏற்றுக் கொண்டுள்ளது.  இஸ்லாம் மததிற்குள் உள்ள உட் பிரிவுகளிற்கிடையில் இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் பல நூற்றாண்டுகளாக கொண்டுள்ள முறண்பாடுகளால் சண்டை  இட்டுக்கொள்கின்றனர். ஒரு இஸ்லாமியப் பிரிவு மற்ற இஸ்லாமியப் பிரிவை கொண்றாலும்  அல்லாஹு அக்பர் எறே கோசம் எழுப்புகின்றனர். இதைப் பயன் படுத்தி உலக வர்த்தக அரசியல்  இஸ்லாத்தின் மீது தீவிர வாத பிம்பத்தைத் தோற்றுவிக்க இலகுவாக அமைந்துவிட்டது.
இஸ்லாத்தின் மீது அமெரிக்க கொண்டுள்ள எதிர்ப்பும், பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் உள்ள  எண்ணை வளத்தில் அமெரிக்கா கொண்டுள்ள மோகமும். இஸ்லாம் மதத்தில் உள்ள  உட்பிரிவுகளுக்குள் இடையிலான மோதல்களை பயன்படுத்தி தீவிரவாத எதிர்ப்பு எனும் போர்வையில்  போர் நடத்துகின்றனர். இதில் புனிதப் போர் என்ற பெயரில் ஒரு சில இஸ்லாமிய குழுக்கழும்  பல நாடுகளில் மீது தாக்குதல் நடத்துவதும் உலகிற்கு இஸ்லாமியர்கள் கொடுமையான தீவிர வாதிகள்  போல் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாம் மதம் உலகில் 1.57 பில்லியன் மக்களால் பின்பற்றப்பட்டு வருவதுடன் அதி வேகமாக வளர்ந்து வரும் மதமாகவுள்ளது. இஸ்லாத்தில் உள்ள பல உட்பிரிவுகள் உலகில் உள்ள பிரபலங்களை அவர்களின் உட்பிரிவு இஸ்லாத்திற்கு மாற்றி அவர்களின் உட் பிரிவுகளை பரப்பி வருகின்றனர்.இஸ்லாம் மதம் பற்றிய மேலோட்டமான பார்வையும் இவர்களுக்குள் உள்ள உட் பிரிவுகளையும்  இஸ்லமிய தீவிர வாத அமைப்புக்கள் பற்றி ஒரு பார்வையும்...


அல்லாஹ் = கடவுள்

“கடவுள் ஒருவனே. அவனே அல்லாஹ். அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை” என்பது இசுலாமின்  அடிப்படை நம்பிக்கை ஆகும். அல்லாஹ் என்பது கடவுள் என்ற பொருள் கொண்ட பால்வேறுபாடு  காட்டாத ஒரு படர்க்கைச் சொல். இது அரேபிய நாடோடிக் குழுக்கள், தங்கள் தெய்வத்தை குறிக்க  பயன்படுத்திய சொல் ஆகும்.
அல்லாஹ் ஒருவனே இருக்கிறான். படைத்துப் பரிபாலிக்கும் ஆற்றல் அவனுக்குரியது. அவனுக்கு  நிகராகவோ, துணையாகவோ யாரும் இல்லை. வணக்கத்துக்குத் தகுதியானவன் அவன் ஒருவன்  தான். அவனுக்குச் சொந்தமான திருநாமங்கள் பண்பாடுகள் உள்ளன (என்ற இறைநம்பிக்கை) எனும்  பிரதான நுழைவாயில் ஊடாக இஸ்லாத்தின்பால் பிரவேசிக்க வேண்டும். அவனைப் பற்றி அல்குர்ஆன்  பல இடங்களில் மிகச்சிறந்த அறிமுகம் தருகின்றது.

 

இஸ்லாம்

இஸ்லாம் என்பது ஒரிறைக் கொள்கையை கொண்ட ஒரு ஆபிரகாமிய மதமாகும். உலகம் முழுவதும்  1.57 பில்லியன் மக்கள் இம்மதத்தை பின்பற்றுகிறார்கள். இது உலகின் மொத்த மக்கள்தொகையில் 23  சதவீதமாகும். இசுலாம், கிறித்தவத்துக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரிய மற்றும் அதி  வேகமாக வளர்ந்து வரும் மதங்களில் ஒன்றாகும். இது இறைவனால் முகம்மது நபிக்கு  சொல்லப்பட்ட செய்திகளின் தொகுப்பான குர் ஆன் எனப்படும் வேதத்தின் அடிப்படையில்  இயங்குகின்றது. இறப்பிற்கு பிறகான மறுமை வாழ்வை இது குறிக்கோளாக கொண்டது. இறைவனை  நம்புவது, அவனது கட்டளைப்படி நடப்பது என்பதன் மூலம் முடிவற்ற மறுமை வாழ்வின் சுகங்களை  பெற முடியும் என்பது இசுலாமின் நம்பிக்கை. இறை நம்பிக்கை, இறை வணக்கம், நோன்பு, கட்டாய  பொருள்தானம், மெக்காவை நோக்கிய புனிதப்பயணம் ஆகிய ஐந்தும் இசுலாமின் கட்டாயக்  கடமைகளாகும்.

இஸ்லாம் இரண்டு அடிப்படை மூலாதாரங்களை மட்டும் கொண்டு அமைந்தது.
1. அல்லாஹ்வின் வேதம். (குர் ஆன்)
2. அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் மார்க்கம் என்ற  ரீதியில் அமுல்படுத்தியவைகள். (ஹதீஸ்)
ஏழாம் நூற்றாண்டில் முகம்மது நபி இந்த மார்க்கத்தை மெக்கா நகரில் பரப்பத் தொடங்கினார். இவர்  இறைவனின் தூதர் என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை. இசுலாமின் மூலமான குர்ஆன் இவரை  முதல் மனிதர் ஆதாம் முதல் அனுப்பப்பட்டு வந்த இறை தூதர்களில் இறுதியானவராக  அடையாளப்படுத்துகிறது.
ஆதம் (அலை), நூஹ் (அலை) (நோவா), இப்ராகிம் (அலை) (ஆபிரகாம்), இஸ்மாயில் (அலை), தாவூத்  (அலை), மூசா (அலை) (மோசே) மற்றும் ஈசா (அலை) போன்ற முன் சென்ற நபிமார்களுக்கும்  இறைவனின் கட்டளைகள் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் முகம்மது (ஸல்) அவர்களுக்கு வழங்கிய திருமறை அல் குர்ஆன் இஸ்லாத்திற்க்கு ஒரு முழு  வடிவம் தருவதாகவும் இதற்கு முன் சென்ற நபிமார்களின் வாழ்க்கையை உறுதி செய்வதாகவும்  இருக்கிறது.

இஸ்லாம் : இஸ்லாம் என்ற சொல்லின் மூலம் குர்ஆன் ஆகும். இது ஸ்-ல்-ம் என்ற மூன்று அரபி  வேரெழுத்துகளிலிருந்து உருவான ஒரு வினைப்பெயர் சொல். ஏற்றுக்கொள்ளுதல், ஒப்படைத்தல் ,  கீழ்படிதல் ஆகிய பொருள்களில் இது ஒலிக்கும். இதன் அர்த்தம் கடவுளை ஏற்றுக் கொண்டு, தம்மை  அவனிடம் ஒப்படைத்து, அவனை வழிபடுவது என்பதாகும்.

இஸ்லாமியப் பிரிவுகள்

இஸ்லாமியர்கள் பொதுவாக சுன்னி மற்றும் ஷியா என்ற இரண்டு பெரும் பிரிவினராக உள்ளார்கள்.  இதை தவிர சூபிசம், அகமதியா போன்ற சில பிரிவுகளும் உள்ளன.

 

1. சுன்னி இஸ்லாம்

சுன்னி இஸ்லாம் என்பது இஸ்லாமிய பிரிவுகளில் ஒரு முக்கியமான உட்பிரிவாகும். இதுவே மிகப்  பெரிய பிரிவும் ஆகும். சுன்னி என்ற வார்த்தை சுன்னா என்ற அரபு வார்த்தையில் இருந்து வந்ததாகும்.  இதற்கு முகம்மது நபியின் வழிமுறை என்பது அர்த்தமாகும்.
இசுலாம் மதத்தை மக்களிடையே பரப்பிய முகம்மது நபி, அதன் பொருட்டு இன்றைய சவூதி  அரேபியாவில் உள்ள மதீனா நகரை தலைநகராக கொண்டு ஒரு இஸ்லாமிய பேரரசை நிறுவினார்.  அந்த பேரரசை மிக திறம்பட ஆட்சி செய்த அவர்கள் 632-ம் ஆண்டு காலமானார். அதன் பிறகு அந்த  அரசை யார் நிர்வகிப்பது என்ற கேள்வி எழுந்தது. அப்போது அபூபக்கர் என்பவர், மற்ற  முஸ்லிம்களால் முழுமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முகம்மது நபிக்கு மிகவும் பிரியமான  நண்பரும், பெண் கொடுத்த மாமனாரும் ஆவார். மேலும் முகம்மது நபியின் வாழ்நாளிலேயே,  அனைத்து இடங்களிலும் அவருக்கு அடுத்த அதிகாரத்தில் இருந்தது இவரே ஆகும். இவரே  முஸ்லிம்களின் முதல் கலீபா ஆவார். இவருக்கு பிறகு மற்றொரு மாமனாரான உமர் என்பவர்  இரண்டாவது கலீபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
634-ம் ஆண்டு கலீபாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட உமர் அவர்கள், ஒன்பது ஆண்டுகள் மட்டுமே ஆட்சி  செய்த நிலையில் 644-ம் ஆண்டு ஆபு லுலுவா என்ற பாரசீகனால் கொல்லப்பட்டார். இதற்கு  இடைப்பட்ட அவரது ஆட்சி காலத்தில், அவர் கடைப்பிடித்த கடுமையான சட்டங்களால் அதிருப்தி  அடைந்த ஒரு கூட்டத்தினர் இவருக்கு பிறகு முகம்மது நபியின் மருமகன்களில் ஒருவரான அலீ  என்பவர் ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்பினர். இவர்கள் ஷீஆ அல்-அலி கூட்டத்தார் என  அழைக்கப்படுகின்றனர். ஆனால் அலியை விட மூத்தவரான முகம்மது நபியின் மற்றொரு மருமகன்  உதுமான் என்பவர் அடுத்த கலீபாவாக வரவேண்டும் என்று பெரும்பான்மையான முஸ்லிம்கள்  விரும்பினர். இதன் பேரில் சிலர் கூடி அலியின் சம்மதத்தோடு உதுமானை மூன்றாவது கலிபாவாக  தேர்ந்தெடுத்தனர். பின்பு கடைசியாக உதுமானின் மறைவுக்கு பிறகு அலி நான்காவது கலீபாவாக  தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரது ஆட்சி காலத்தில் இவருக்கு எதிராக மிகப்பெரிய அதிருப்திக் கூட்டம் ஒன்று உருவாகியது.  இவர்கள் காரிஜிய்யா கூட்டத்தார் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் உதுமான், முகம்மது நபி  அவர்களுக்கு எதிரானவர் என்ற தோற்றத்தை மக்களிடையே பரப்பினார். மேலும் முகம்மது நபி  மிகவும் அதிகமாக உயர்த்தி இறைவனுக்கு சமமானவர் என்றும் கூறத்தொடங்கினர். இதனால்  அதிருப்தி அடைந்த ஷீஆ அல்-அலி கூட்டத்தார் பதிலுக்கு அலியை மிகவும் அதிகமாக உயர்த்தி  இறைவனுக்கு சமமானவர் என்றும் கூறத்தொடங்கினர். மேலும் முகம்மது நபியினை திட்டவும்  தொடங்கினர். இதனால் கோபமுற்ற மற்ற, காரிஜிய்யா கூட்டத்தார் அல்லாதவர்களும் ஷீஆ அல்-அலி  கூட்டத்ததாரை வெறுக்க தொடங்கினர். இவர்கள் தங்களை காரிஜிய்யா மற்றும் ஷீஆ அல்-அலி  கூட்டத்தாரிடம் இருந்து வேறுபடுத்தி உதாரண நபிவழி கூட்டம் என பொருள்படும்படி சுன்னி முஸ்லிம்  என அழைத்துக்கொண்டனர். இவ்வாறே சுனி இஸ்லாம் பிரிவு தொடங்கியது.


நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகள்.

சுனி முஸ்லிம்கள் திருமறை மற்றும் முகம்மது நபியின் வழியை மட்டும் பின்பற்றுகின்றனர்.  திருமறையில் அல்லா கூறிய வாழ்க்கை, வழிபாட்டு, சட்ட முறைகள் மற்றும் முகம்மது நபியின்  வழிகாட்டுதல் ஆகியவற்றை மற்றும் தங்கள் வாழ்க்கையில் மேற்கொள்கின்றனர். இவர்களின்  நம்பிக்கைப் படி முகம்மதே நபி. அலி ஒரு ஸஹாபி (நபி தோழர்) மட்டுமே அன்றி வேறு எந்த தெய்வ  சக்தியும் கொண்டவர் அல்லர். மேலும் முகம்மது நபி குடும்பத்தாருக்கும் தெய்வ சக்தி கிடையாது.


2. ஷியா இஸ்லாம்

இஸ்லாம் மதத்தின் முக்கியமான உட்பிரிவு. இது இஸ்லாமிய மதப்பிரிவுகளுள் சன்னி இஸ்லாமிற்கு  அடுத்தபடியாக அதிகமானோர் பின்பற்றும் பிரிவாகும். ஷியா என்ற சொல் “அலியை பின்பற்றுவோர்”  என்ற பொருள் படும் அரபு மொழி சொல்லில் இருந்து தோன்றியது. ஷியாக்கள் முகமது நபியின்  மருமகன்களில் ஒருவரான அலியே அவரின் உண்மையான வாரிசு என்று நம்புகிறார்கள்.
இந்திய முஸ்லிம்களில் 35 சதவீதம் பேர் சன்னி முஸ்லிம்கள். பத்து சதவீதத்தினர் ஷியா முஸ்லிம்கள்  ஆவர். ஷியா முசுலிம்கள் உலக முசுலிம் மக்கள்தொகையில் 10-20% உள்ளனர், மத்திய கிழக்கு  நாடுகளின் மக்கள் தொகையில் இவர்கள் 38% ஆகும். ஷியா பிரிவினர் அதிகம் வாழும் முஸ்லிம் நாடு  ஈரான் ஆகும். சன்னி, ஷியாக்களுக்கு இடையே பல நூறாண்டுகள் சண்டையும் சச்சரவும் இருந்து  வந்துள்ளன. ஷியாக்களின் ஆட்சி நடைபெறும் நாடுகள் ஈராக் மற்றும் ஈரான். ஈரானுக்கு  அடுத்தபடியாக, இராக், லெபனான், பாகிஸ்தான் என பல நாடுகளில் ஷியாக்கள் உள்ளனர்.
அல்லாஹ் ஒருவனே ஏக இறைவன், அவனால் அருளப்பட்டது குர்ஆன், அவனது இறுதித் தூதர்  முஹம்மது நபி என்ற இஸ்லாத்தின் அடிப்படையை எல்லா பிரிவுகளும் ஏற்றுக் கொள்கின்றன.  சன்னிகளும் ஷியாக்களும் அல்லாஹ் ஒருவனே; குர்ஆனும் ஒன்றே; இறுதித் தூதரும் ஒருவரே  மக்கா இறையில்லமும் (கஅபா) ஒன்றே.
முஹம்மது நபிகளாருக்குப் பிறகு, இஸ்லாமிய ஆட்சியாளராக (கலீபா) யாரை ஏற்பது என்பதில்தான்  வேறுபாடு ஏற்பட்டது. முஹம்மது நபிகளாரின் நெருங்கிய தோழரும் மாமனாருமான அபுபக்கரை,  முதல் கலீபாவாக சன்னிகள் ஏற்கின்றனர். ஷியா பிரிவினரோ, முஹம்மது நபிகளின் மற்றொரு  தோழரும் மருமகன்களில் ஒருவரான அலியே நபிகளாரின் வாரிசு என்கின்றனர். இதில் தொடங்கிய  சர்ச்சை பல நூற்றாண்டுகளுக்கு நீடித்தது.
தொழுகைக்கான அழைப்பில் (பாங்கு) சிறிய வித்தியாசம். "அல்லாஹு அக்பர்' என்று தொடங்கும்  பாங்கின் பொருள், "இறைவன் மிகப் பெரியவன்! வணக்கத்துக்குரியவன் இறைவனைத் தவிர  வேறெவரும் இல்லை. முஹம்மது இறைவனின் தூதர். தொழ வாருங்கள். வெற்றி பெற வாருங்கள்'  என்பது. இதில், ஷியாக்கள் மேலும் ஒரு வரியைச் சேர்த்துக் கொள்கிறார்கள். "முஹம்மது நபி  அல்லாஹ்வின் இறுதித் தூதர்; அவரது வாரிசு அலி' என்பதே அவ்வாசகம்.
தொழுகையில் கொஞ்சம் வித்தியாசம். ஐந்து வேளைத் தொழுகையை, மூன்று வேளைகளில்  (இரண்டை ஒரே வேளையில்) தொழுது விடுகின்றனர் ஷியாக்கள். தொழுகையில், ஸஜ்தா எனும் சிரம்  பணியும் நிலையில், "காகே ஷிபா' எனப்படும் புனித கர்பலாவின் மண்ணால் செய்யப்பட்ட "சில்' (ஓடு)  ஒன்றை வைக்கிறார்கள். சன்னிகள் இவ்வாறு செய்வதில்லை.


3. சூபித்துவம் இஸ்லாம்

சூபித்துவம் அல்லது தஸவ்வுப் என்பது இஸ்லாம் மார்க்கத்தின் ஒரு கிளையாகும். இது சுன்னி  இஸ்லாத்தின் வரலாற்றிலிருந்து பெறப்பட்டுள்ளது. இறைவனை அடையும் வழியைக் கூறும்  இஸ்லாத்தின் உள்ளார்ந்த பரிமாணம் எனச் சொல்லப்படுகிறது. இந்த மரபைப் பின்பற்றுபவர்கள்  சூபிகள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வேறுபட்ட சூபி கட்டளைகளுக்கு அல்லது  தரீக்காக்களுக்கு சொந்தக்காரர்களாவர், தரீக்காக்கள் ஒரு ஆத்மீக தலைவரைக் கொண்டு  உருவாக்கப்பட்ட சபையாகும். சூபிகள் ஆத்மீக அமர்வுகளுக்காக கூடும் இடங்கள் ஸாவியா மற்றும்  தக்கியா என அழைக்கப்படுகின்றது. சூபி தரீக்காக்கள் அல்லது கட்டளைகள் என்பவற்றின் மூல  கோட்பாடுகள் பெரும்பாலும் இஸ்லாத்தின் நபிகள் நாயகத்தின் மைத்துனர் மற்றும் மருமகனான அலி  அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி தோன்றியிருக்கலாம். நக்சபந்தி சூபி கட்டளை இதற்கு  குறிப்பிடத்தக்க விதிவிலக்காக, முதலாவது கலீபா அபூபக்கர் அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி  தோற்றம் பெற்றுள்ளது. பிரபலமான சூபி கட்டளைகளாக காதிரிய்யா, பாஅலவிய்யா, சிஸ்திய்யா,  ரிபாயி, கல்வதி, மெவ்ளவி, நக்சபந்தி, நியுமதுல்லாயி, காதிரய்யா புத்சிசிய்யா, உவைஸி, ஷாதுலிய்யா,  கலந்தரிய்யா, ஸுவாரி காதிரி மற்றும் சுஹரவர்திய்யா என்பன காணப்படுகின்றன.
சூபிகள், தாங்கள் இஹ்ஸானை (முழுமையான வணக்கம்) பயிற்சி செய்வதாக நம்புகின்றனர். இது  வானவர் ஜிப்ரீலால் முஹம்மது நபிக்கு வெளிப்படுத்தப்பட்டது: அல்லாஹ்வை வணக்கும் போது  அவனை பார்ப்பது போன்ற எண்ணத்துடன் வணங்கவேண்டும். அப்படியில்லை எனில், அவன்  உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்துடன் வணங்கவேண்டும்". சூபி அறிஞர்கள்  சூபிசத்துக்கான வரைவிலக்கணத்தைக் கூறியுள்ளனர்."இறைவனின் எண்ணத்தைத் தவிர மற்ற  எல்லாவற்றிலிருந்தும் விலகுவதற்கு மனதைத் தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு  அறிவியல் என வரையறுத்துள்ளனர்". தர்காவி சூபி ஆசிரியரான அகமது இபின் அசிபா என்பவர்,  "சூபிசம் என்பது, இறைவனை அடையும் வழியைத் தெரிந்து கொள்வதற்கும், ஒருவர் தனது  உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கும், அதனைப் போற்றத்தக்க பண்புகளால்  அழகுபடுத்துவதற்குமான ஒரு அறிவியல் என்கிறார்".
பாரம்பரிய சூபிகளை அவர்கள் திக்ர் (இறைவனின் பெயர்களை பலமுறை உச்சரிக்கும் ஒரு பயிற்சி,  பொதுவாக தொழுகையின் பின்னர் மேற்கொள்ளப்படுகின்றது), துறவறம் உடன்  தொடர்புகொண்டிருந்ததை வைத்து பண்பிட்டிட முடியும். சூபிசமானது பல முஸ்லிம்களிடையே  ஆதரவைப் பெற்றது, முக்கியமாக ஆரம்பகால உமையாக்களின் உலகப்பற்றுக்கு எதிராக  ஆதரவாளர்களை பெற்றுக்கொண்டது (கி.பி.661-750). ஓராயிரம் வருடங்களுக்கு மேலாக சூபிகள் பல  கண்டங்கள் மற்றும் கலாச்சாரங்களிடையே பரவியிருக்கின்றது. ஆரம்பத்தில் அவர்களின்  நம்பிக்கைகள் பாரசீகம், துருக்கி, இந்தியமொழி மற்றும் பல மொழிகளிடையே பரவ முன்னர்  அரபுமொழியில் தெரிவிக்கப்பட்டது.

 

4. அகமதியா இஸ்லாம்

அகமதியா என்பது 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் பிரித்தானிய இந்தியாவில் தோற்றம்  பெற்ற ஓர் இஸ்லாமிய சீர்திருத்த இயக்கம். பஞ்சாப் மாகாணத்தில் வாழ்ந்த மிர்சா குலாம் அகமது  (1835-1908) இந்த இயக்கத்தின் முன்னோடி ஆவார். முகம்மது நபிக்குப் பிறகு வந்த இறைத்தூதராகத்  தன்னை இவர் அறிவித்தார். மிர்சாவை இறைத்தூதர் என நம்புவதால் முகம்மது நபியே இறுதி  இறைத்தூதர் என்ற பெரும்பான்மை முகம்மதியர்களின் கருத்தில் இருந்து அகமதியர்கள்  மாறுபடுகின்றனர். இதனால் பல இஸ்லாமிய நாடுகளில் அகமதியர்கள் அடக்குமுறைக்கும்  ஒடுக்குமுறைக்கும் உள்ளாகின்றனர்.
பாகிஸ்தான்: உலகில் அதிக அளவிலான அகம்மதியர்கள் வாழும் நாடு பாகிஸ்தான். ஏறத்தாழ  இரண்டு முதல் ஐந்து மில்லியன் அகம்மதியர்கள் வாழ்கின்ற போதிலும் அந்நாடு அவர்களை  இசுலாமியர் என ஏற்றுக்கொள்வதில்லை. அகம்மதியர்களை இசுலாமியர் அல்லாதோர் எனக் குறிக்க  அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. நோபெல் பரிசு பெற்ற  இயற்பியலாளர் அப்துஸ் சலாம் அகமதியர் என்பதால் அவரது கல்லறையில் இருந்து முஸ்லீம் என்ற  வார்த்தை நீக்கப்பட்டது. 28.05.2010 அன்று லாகூரில் உள்ள அகம்மதியர்களின் தொழுகையிடத்தில்  இசுலாமிய அடிப்படைவாதிகள் நடத்திய தாக்குதலில் 95 பேர் மரணமடைந்தனர்; நூற்றுக்கும்  மேற்பட்டோர் காயமுற்றனர்.
பங்களாதேசம்: வங்காள தேசத்திலும் அகமதியர்கள் முஸ்லீம்களாக கருதப்படுவதில்லை. அகமதியா  இயக்கத்தினரின் ஊடக வெளியீடுகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன. அகமதியர்கள்  இறைமறுப்பாளர்களாகவே கருதப்படுகின்றனர்.
இந்தியா: இந்தியாவில் அகமதிய இயக்கத்தினர் இந்தியச் சட்டத்தின் அடிப்படையில்  முஸ்லீம்களாகவே கருதப்படுகின்றனர். கேரள உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றும் அகமதியரை முஸ்லீம்  என உறுதி செய்துள்ளது. அகமதியர்களின் வழிபாட்டு உரிமைக்கு எந்தவிதத் தடையும் இந்தியாவில்  இல்லை.

ஜீகாத்

ஜீகாத் - அரபு ழொழியில் தொடர்ந்து முயற்சி செய்தல், போராட்டம் என பொருள்படும்  இஸ்லாமியர்களின் கடமையாகும்.
சுன்னி இஸ்லாமில் அதிகாரபட்சமாக இடமில்லாதப் போதும் சில வேலைகளில் ஜிகாத் இசுலாமின்  ஆறாவது தூணாகவும் அழைக்கப்படுவதுண்டு.
ஷியா இஸ்லாமில் ஜிகாத் (புனிதப் போராட்டம்) 10 முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.
ஏழாம் நூற்றாண்டு முதல் 21 ஆம் நூற்றாண்டு வரை இஸ்லாமிய மதத்தின் எழுச்சியானது  இஸ்லாமியர்களால் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மீது ஜிகாத் எனும் பெயரால் நடத்தப்படும்  வன்முறையின் மூலமாகவே பெறப்படுகிறது. இஸ்லாமிய மதம் அடிப்படையில் அமைதி வழி  மார்க்கம் அல்லது வன்முறை வழி மார்க்கம் அல்லது இரண்டும் கலந்த வழிமுறைகளைக் கொண்ட  மார்க்கம் என விவாதிக்கப்படுகிறது. இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் சில வசனங்கள்  ஜிகாத்தை இஸ்லாமியர்களின் முக்கியக் கடமை என்று குறிப்பிடுகிறது. இத்தகைய வசனங்களை  அடிப்படைவாதிகள் செயல்படுத்துவதன் மூலமாக தீவிரவாதத்தை நியாயப்படுத்துகின்றனர்.

சில அமைப்புக்களும் அதுபற்றிய தகவல்களும்


ISIS

தலைவர்: அபூ பக்கர் அல்-பக்தாதி
தொடக்கம்: 2013
இசுலாமியப் பிரிவு: சுன்னி


இசிஸ் எனும் தீவிரவாத அமைப்பு 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் தியதி அபூ பக்கர்  அல்-பக்தாதியால் உருவாக்கப்பட்டது. இது முதலில் அல்-காயிதா அமைப்பின் ஈராக்கியப் பிரிவாகச்  செயற்பட்டது.
இராக்கிலும் சாமிலும் இஸ்லாமிய அரசு Islamic State in Iraq and the Levant சுருக்கமாக ISIL அல்லது  இசிஸ் (ISIS) என்று அழைக்கப்படுகிறது. இசிஸ் இயக்கம் ஓர் ஆயுதம் தாங்கிய தீவிரவாதக் குழு  ஆகும். இது சிரியா மற்றும் ஈராக்கில் இயங்குகிறது. இசிஸ் இயக்கத்தின் நோக்கம் ஈரான் மற்றும்  சிரியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய ஓர் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க வேண்டும்  என்பதாகும். இக்குழுவானது ஈராக் போரின் போது உருவாக்கப்பட்டது. பின்னர் 2004 ஆம் ஆண்டில்  இசிஸ் இயக்கம் அல் காயிதாவுடன் இணைந்து செயல்பட்டது. இது சுணி இஸ்லாமியர்கள் அதிகம்  உள்ள ஈராக் பகுதிகளில் கலீபா ஆட்சியை நிறுவி பின்னர் அவ்வாட்சியை சிரியாவுக்கும் விரிவுபடுத்த  வேண்டும் என்ற நோக்கத்தோடு செயற்பட்டு வருகின்றது. 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அல்  காயிதா இசிஸ் உடனான தனது தொடர்பை முறித்துக் கொண்டது. இக்குழுவானது அல் காயிதாவை  விடவும் அபாயகரமான குழு என நிபுணர்கள் கருதுகின்றனர்.


ஈராக்கியப் போரின் உச்சத்தின் போது இக்குழுவானது ஈராக்கின் அல் அன்பார் (Al Anbar), நைனவா  (Ninawa), கிர்குக் (Kirkuk) மற்றும் சலாஹுத்தீன் (Salah ad Din) பகுதியில் பெரும்பான்மையையும் மேலும்  பாபில் (Babil), தியாலா (Diyala), பக்தாதின் பெரும்பான்மையான பகுதிகள் என்பவற்றிலும் தாக்குதலில்  ஈடுபட்டது. இது பகுபாவைத் தனது தலைநகராக அறிவித்துக் கொண்டது. சிரிய மக்கள் போர்  தொடக்க காலத்தில் இக்குழுவானது சிரியாவின் அர்-ரக்கா (Ar-Raqqa), அலெப்போ (Aleppo) ஆகிய  பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. அரசு இராணுவ வீரர்களைக் கொன்றது மட்டுமல்லாமல்  ஆயிரக்கணக்கான பொது மக்களைக் கொன்றதாகவும் இசிஸ் குழு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.  அமெரிக்கக் கூட்டுப் படைகள் இப்பகுதியில் இருந்த காலகட்டதில் இக்குழுவானது பின்னடைவைச்  சந்தித்தது. 2012 ஆம் ஆண்டின் பிறபகுதியில் இக்குழு தனது உறுப்பினர்களின் எண்ணிகையை 2,500  என இரட்டிப்பாக்கியது. சிரியாவின் வட பகுதியில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை இக்குழு  பெற்றுள்ளது.
இந்த அமைப்பினர் ஷியா இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும், கிறிஸ்தவத்திற்கு மாறும்  இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்களை நடாத்துவதுண்டு.


அல் காயிதா

 தலைவர்: அய்மன் அல் ழவாகிரி
தொடக்கம்: 1988
இசுலாமியப் பிரிவு: சுன்னி


ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிசுத்தான், சோமாலியா, ஏமன் மற்றும் உலகமுழுவதும்
அல்-காய்தா ஜிகாத் கொள்கையுடைய பன்னாட்டு சுணி முஸ்லிம் ஆயுதக்குழுக்களின் ஒன்றியமாகும்.  இவ்வியக்கம் 1989 ஆம் ஆண்டில் அப்கானிதானில் இருந்து சோவியத் படைகள் வாபஸ் பெற்ற  காலத்தில் ஒசாமா பின் லாடன் மற்றும் சிலரால் பாகிஸ்தானின் பெஷாவரில் 1988 ஆகஸ்ட்-க்கும் 1989  ன் வருடக்கடைசிக்கும் இடையில் தொடக்கப்பட்டதாகும். முஸ்லிம் நாடுகள் மீதான வெளிநாட்டு  பாதிப்புகளைக் இல்லாதொழித்து முகமது நபியின் காலத்தை ஒத்த ஒரு தலைவருக்குக் கீழான  இசுலாமிய இராச்சியத்தை உருவாகுதல் அல்-காய்தாவின் முக்கியக் கொள்கைகளில் ஒன்றகும்.  உலகின் பல்வேறு நாடுகளில் மக்களின் மீதும் ராணுவத்தின் மீதும் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது.
அல்-காய்தா பல உலக நாடுகளிலும் பன்னாடு நிறுவனங்களாலும் பயங்கரவாத அமைப்பாகத்  தடைசெய்யப்பட்டுள்ளது. இவற்றுள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை, நேட்டோ, ஐரோப்பிய  ஒன்றியம், ஐக்கிய அமெரிக்க நாடுகள், அவுஸ்திரேலியா, கனடா, இசுரேல், யப்பான், நெதர்லாந்து,  ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, சுவீடன், சுவிட்சர்லாந்து என்பவை முக்கியமானவையாகும். அல்-காய்தா  உறுப்பினர்கள் உலகின் பல நாடுகளிலும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இவற்றுள்  செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் முக்கியமானவையாகும். செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிறகு  ஐக்கிய அமெரிக்க அரசு அல் கைடாவுக்கு எதிராக பாரிய புலனாய்வு மற்றும் இராணுவ  நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.ஒசாமா பின் லேடன் அல் கைதாவைத் தோற்றுவித்தவர்


தாலிபான்

தலைவர்: முல்லா முகமது ஓமார்
இசுலாமியப் பிரிவு: சுன்னி


தலிபான் எனப்படுவோர் ஆப்கானிஸ்தானை 1996 முதல் 2001 வரை ஆட்சி செய்த சுன்னி இஸ்லாமிய  தேசியவாத அமைப்பாகும். 2001 இல் ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, மற்றும் ஐக்கிய  இராச்சியம் ஆகிய நாடுகளின் உதவியுடன் இவ்வமைப்பின் தலைவர்கள் பதவியில் இருந்து  அகற்றப்பட்டனர். அடிப்படைவாத தீவிரவாத அமைப்பாகக் கருதப்படும் "தலிபான்" பாகிஸ்தானின்  பழங்குடியினரின் பகுதிகளில் தோற்றம் பெற்றது. தற்போது ஆப்கானிஸ்தானின் அரசுக்கெதிராகவும்  நேட்டோ படைகளுக்கெதிராகவும் கெரில்லா முறையில் போரிட்டு வருகிறது.
தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா முகமது ஓமார் ஆவார். தலிபானின் படைகளில்  பெரும்பாலானோர் தெற்கு ஆப்கானிஸ்தானிலும் மேற்கு பாகிஸ்தானிலும் உள்ள பாஷ்டன் மக்கள்  ஆவார். இவர்களைவிட சிறிய அளவில் ஐரோப்பா மற்றும் சீனாவைச் சேர்ந்த தீவிரவாதிகளும்  இவ்வமைப்பில் உள்ளனர். தலிபான் பாகிஸ்தான் அரசிடம் இருந்து இராணுவப் பயிற்சிகளையும்  பெருமளவு இராணுவத் தளவாடங்களையும் பெற்றனர்.

மேல் சொன்ன அமைப்புக்களை விடவும் பல அமைப்புக்கள் பல நாடுகளில் இஸ்லாமிய பிரிவுகளுக்கு எதிராகவும் மற்ற  மதத்தவர்களிற்கு எதிராகவும் வன்முறைகளும் போராட்டங்களும் செய்து வருகின்றது. இவர்களின்  வன்முறை போராட்டத்திற்கு பின்னணியில் உலக வர்த்தகம் துணை நிற்பதை மறைப்பதற்கு  இஸ்லாமிய தீவிரவாதம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

ayurveda-muligai-vaidhiya-salai
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


auto-ecole-de-bondy
87 Rue Roger SALENGRO, 93140 Bondy
M" : Gare de Bondy RER E

Tel : 0175471856 / 0752111355
agaram-translation-services
57, Rue Louis Blanc, 75010 Paris
M" : La Chapelle

Tel: 09 86 14 03 61
Port : 07 60 26 80 89
EXACT EXCHANGE SARL
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
exact-exchange-sarl
123, Bld de Magenta, 75010 Paris
M" : Gare du Nord

Tel: 01 48 78 35 33
பரிஸ் ஈழநிலா
Live Music Group
S.S.தில்லைச்சிவம்
Tel: 06 20 31 24 90
உங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்
வெத்தலை மை ஜோதிட நிலையம்
ஜோதிடர் பீமராஜ்
Tel:07 73 42 42 63
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
59, Avenue de Valenton
94190 Villeneuve-Saint-George
(RER D)
HIK VISION
Tel: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel: 06 12 65 73 53 / 06 51 79 74 32
29, Avenure Louis de Brogline
95 500 Le Thillay
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்

Tél.: 09 83 06 14 13

தமிழில் தொடர்பு கொள்ள:

Madame. பார்த்தீபன் றஜனி
07 68 55 17 26