செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்ட மாவன் செய்மதி
23 September, 2014, Tue 7:50 GMT+1 | views: 1104
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியுள்ள செய்மதி, கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
மாவன் என்ற குறித்த செய்மதி 10 மாதப் பயணத்தின் பின்னர் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பிற்குள் பிரவேசித்துள்ளது.
செவ்வாய் கிரத்தின் உயர் மட்ட வளிமண்டலத்தை ஆராய்வதற்கென இந்த செய்மதி அனுப்பப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தின் நவீன மாதிரி மற்றும் கடந்த கால காலநிலை நிலைமைகளை கணிப்பிடுவதற்கு குறித்த செய்மதியின் தரவுகள் உதவும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.