Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

இறுதி ஊர்வலமான திருமண ஊர்வலம்....

7 August, 2020, Fri 14:55   |  views: 1179

இசை, பூக்கள், கூட்டம், குடும்ப உறுப்பினர்கள் என்று திருமண ஊர்வலத்துக்கான அனைத்தும் உண்டு.

 
ஆனால் எதிலும் மகிழ்ச்சியில்லை!
 
மனத்தை உருக்கும் சோகம்! திருமண ஊர்வல ஏற்பாடுகள் இறுதி ஊர்வலத்துக்குத் தயாராயின.
 
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன் தினம் ஏற்பட்ட கொடூர வெடிப்பில் பலியான மணப்பெண்ணின் இறுதி ஊர்வலம் அது.
 
முத்தமிட்டு மணப்பெண்ணை அழுகையுடன் வழியனுப்பினார் மாப்பிள்ளை!
 
“நீ கேட்ட அனைத்தும் உண்டு..உனது வெள்ளை நிறத் திருமண உடையை விடுத்து”
 
என்ற அவரது சமூக ஊடகப் பதிவு முகம்தெரியாப் பல இணையவாசிகளை அழ வைத்தது.
 
The New York Times நாளேடு அதன் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
பெய்ரூட் வெடிப்பில் மாண்ட 150 பேரில் 24 வயது ஃபேர்ஸும் (Fares) ஒருவர்.
 
சம்பவத்தில் சுமார் 5,000 பேர் காயமுற்றனர்.
 
பல்லாயிரம் சோகக் கதைகளை உருவாக்கியது லெபனான் வெடிப்பு. ஆனால் ஃபேர்ஸின் இறுதி ஊர்வலம் சமூக ஊடகங்களில் பரவி வெடிப்பின் தாக்கத்தை முழுமையாக உணர வைத்தது.
 
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஃபேர்ஸ், ஆணாதிக்கம் மிகுந்த பெய்ரூட் தீயணைப்புப் படையில் பிடிவாதமாக இடம் பிடித்தவர்.
 
துறைமுகத்துக்கு அருகில் இருந்த கிடங்கில் மூண்ட தீயை அணைக்கச் சென்ற ஃபேர்ஸ், வெடிப்புக்குச் சில நிமிடங்கள் முன்னர் வரை, தாம் மணம் புரியவிருந்த கரானுடன் தொடர்பில் இருந்தார்.
 
கரான் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லும்படி கெஞ்சியும் ஃபேர்ஸ் கேட்கவில்லை.
 
ஆனால் வெடிப்பை உணர்ந்து பின்னர் ஓடத்தொடங்கியபோது, காலம் கடந்துவிட்டது.
 
உன்னைக் காதலித்தேன். காதலிக்கிறேன். என்றும் காதலிப்பேன்
 
என்ற கரானின் பதிவை இணையவாசிகள் பல்லாயிரம் பேர் பகிர்ந்தனர்.
 
இப்படிச் சோகக்கதைகள் நிரம்பிய வாழ்க்கை வாழும் லெபனான் மக்கள், ஒழுங்கற்ற நிர்வாகம், அரசாங்கம் ஆகியவற்றின் மீதான அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.  
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்