Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
22
திங்கட்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: பௌர்ணமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

இந்தியா ஒதுங்குகிறதா பதுங்குகிறதா?

3 August, 2014, Sun 20:03   |  views: 6526

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதுடில்லிக்கான பயணம் எப்போது சாத்தியமாகும் என்ற கேள்வி பல வாரங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஏனென்றால், இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீண்டகாலமாகவே முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கிறது.

குறிப்­பாக, வடக்கு மாகா­ண­சபை நிறு­வப்­பட்ட பின்னர், ஏற்­பட்­டுள்ள சூழல் குறித்தும், நிலை­யான அர­சியல் தீர்வு காண்­பது குறித்தும், வடக்­கி­லுள்ள நிலை­மைகள் குறித்தும் இந்­தி­யா­வுடன் பேசு­வ­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆர்வம் கொண்­டி­ருக்­கி­றது.

முன்­னைய காங்­கிரஸ் கட்சி தலை­மை­யி­லான அர­சாங்கம் பத­வியில் இருந்த போது, இந்­தியப் பிர­தமர் மன்­மோ­கன்­ சிங்கைச் சந்­தித்துப் பேச்சு நடத்­து­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. ஆனால், அது சாத்­தி­ய­மா­வ­தற்குள், அந்த அரசின் ஆயுள் முடிந்து போனது.

இந்­திய நாடா­ளு­மன்றத் தேர்தல் நடந்து கொண்­டி­ருந்த போதே, புதிய அரசு அமைந்­த­வுடன், புது­டில்­லி­யுடன் பேச்சு நடத்­துவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் தெரி­வித்­தி­ருந்­தனர்.

இந்­தியப் பிர­த­ம­ராக நரேந்­திர மோடி தெரிவு செய்­யப்­பட்­டதும், அவ­ருக்கு வாழ்த்துத் தெரி­வித்து, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் இரா. சம்­பந்­தனும், வடக்கு மாகா­ண­ச­பையின் சார்பில் முத­ல­மைச்சர் சீ.வி.விக்­னேஸ்­வ­ரனும் கடி­தங்­களை அனுப்­பி­யி­ருந்­தனர்.

அந்தக் கடி­தங்­களில், பிர­தமர் நரேந்­திர மோடியைச் சந்­தித்துப் பேசு­வ­தற்கு விருப்பம் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது.

அதே­வேளை, நரேந்­திர மோடியின் பத­வி­யேற்பு விழா­வுக்குச் சென்ற போது, ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச, தன்­னுடன் துணைக்கு வரு­மாறு வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கு அழைப்பு விடுத்­தி­ருந்தார். ஆனால், அதனை அவர் நிரா­க­ரித்­து­விட்டார்.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்­தது போலவே, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் பத­வி­யேற்பு விழா­வுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்ற கோரிக்­கைகள் தமிழ்­நாட்டில் எழுந்த போதும், அதனை இந்­திய அர­சாங்கம் நிரா­க­ரித்து விட்­டது.

சார்க் தலை­வர்­க­ளுக்கு மட்டும் விடுக்­கப்­பட்ட அழைப்பே அது­வாகும். வெளி­நா­டு­களில் இருந்து வேறு எவரும் அழைக்­கப்­ப­ட­வில்லை.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, அந்த நிகழ்­வுக்குத் தம்மை அழைக்க வேண்டும் என்று எதிர்­பார்த்­த­தாகத் தெரி­ய­வில்லை. அவ்­வாறு எதிர்­பார்த்­தி­ருந்தால், அது அவர்­களின் முட்­டாள்­தனம்.

எனினும், கூடிய விரைவில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி அழைத்துப் பேசுவார் என்று ஊகங்கள் தெரி­விக்­கப்­பட்­டன.

ஆனால், கடந்த மே மாத இறு­தியில் தான் பத­வி­யேற்ற நரேந்­திர மோடியின் தலை­மை­யி­லான புதிய அர­சாங்கம் நிலை­மை­களை அவ­தா­னித்து, தமது வழக்­க­மான பணி­களை ஆரம்­பிக்க எப்­ப­டியும், ஜூலை மாத­மாகி விடும் என்று அப்­போதே தக­வல்கள் கசிந்­தி­ருந்­தன.

இப்­போது, ஜூலை முடிந்து ஓகஸ்ட் மாதமும் வந்து விட்­டது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்­கான அழைப்பு மட்டும் இன்­னமும் இந்­திய அர­சாங்­கத்­திடம் இருந்து வர­வில்லை.

இதற்­கி­டையில், ஜூலை நடுப்­ப­கு­தியில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன், முத­ல­மைச்சர் சீ.வி.விக்­னேஸ்­வரன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மாவை சேனா­தி­ராசா, சுரேஷ் பிரே­மச்சந்­திரன், செல்வம் அடைக்­க­ல­நாதன் ஆகி­யோரைக் கொண்ட குழு, புது­டில்லி செல்­ல­வுள்­ள­தாக முதலில் தக­வல்கள் வெளி­யா­கின.

அப்­போது, புது­ டில்­லி­யி­லி­ருந்து, தமது கோரிக்­கைக்கு சாத­க­மான பதில் கிடைத்­துள்­ள­தா­கவும்,  எனினும், இந்­தியப் பிர­த­மரைச் சந்­திப்­ப­தற்­கான நாள் குறித்து, இன்­னமும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை என்றும், நாடா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்­தி­ருந்தார்.

இந்­த­நி­லையில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நரேந்­திர மோடியைச் சந்­திக்க இம்­மாத தொடக்­கத்தில் புது­டில்லி செல்­ல­வுள்­ள­தாக மீண்டும் கடந்­த­வாரம் ஊட­கங்­களில் தக­வல்கள் வெளி­யா­கின.

ஆனால், புது­டில்­லியில் இருந்து அழைப்பு ஏதும் வர­வில்லை என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மாவை சேனா­தி­ரா­சாவும், செல்வம் அடைக்­க­ல­நா­தனும் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

ஆக, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பிர­தி­நி­தி­களை புது­டில்­லிக்கு அழைக்க இந்­திய அர­சாங்கம் இன்­னமும் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என்­பது உறு­தி­யா­கி­யி­ருக்­கி­றது.

எதற்­காக இந்த தாமதம் - ஏன் இந்­திய அர­சாங்கம் இழுத்­த­டிக்­கி­றது என்ற கேள்­விகள் இப்­போது மெல்ல மெல்ல எழும்பத் தொடங்­கி­யுள்­ளன.

ஏனென்றால், பா.ஜ.க. அர­சாங்­கத்தின் வெளி­வி­வ­காரக் கொள்கை தொடர்­பாக – இலங்கை விவ­கா­ரத்தில் அதன் நிலைப்­பாடு தொடர்­பாக வெளி­யாகும் தக­வல்கள், சில சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­தவே செய்­கி­றது.

குறிப்­பாக, பா.ஜ.கவின் வெளி­வி­வ­காரக் கொள்கைப் பிரிவைச் சேர்ந்த கலா­நிதி சேஷாத்ரி ராமா­னுஜன் சாரி, வெளி­யிட்­டுள்ள கருத்து இங்கு முக்­கி­ய­மா­னது.

தமிழர் பிரச்­சினை என்­பது இலங்­கையின் உள்­நாட்டு விவ­காரம் என்றும், அது சர்­வ­தேச மயப்­ப­டுத்­தப்­படக் கூடாது என்­பதே பா.ஜ.க. அரசின் நிலைப்­பாடு என்றும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.

அந்த வகையில் பார்க்­கும்­ போது, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை புது­டில்­லிக்கு அழைத்துப் பேசு­வது, பாஜ­கவின் வெளி­வி­வ­காரக் கொள்­கைக்கு முர­ணா­னது.

அதற்­காகத் தான், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு அழைப்பு விடுக்­காமல் புது­டில்லி காலம் தாழ்த்தி வரு­கி­றதா என்ற சந்­தே­கங்கள் ஏற்­படத் தான் செய்­கின்­றன.

அதே­வேளை, புது­டில்­லியில் புதிய அர­சாங்கம் அமைந்து, இப்­போது தான், இரண்டு மாதங்கள் நிறை­வ­டைந்­துள்­ளன என்­ப­தையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

இந்த இரண்டு மாதங்­க­ளிலும், இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியும், இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சும் இறுக்­க­மான நிகழ்ச்சி நிர­லுடன் ஓடிக் கொண்­டி­ருப்­ப­தையும் உணர வேண்டும்.

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி, உள்­நாட்டுப் பிரச்­சி­னை­களைச் சமா­ளிப்­ப­தற்­கான உத்­தி­களை வகுக்க வேண்­டிய நிலையில் இருந்­த­துடன், இந்தக் கால இடை­வெ­ளிக்குள், இரண்டு வெளி­நாட்டுப் பய­ணங்­க­ளையும் முடித்துக் கொண்டு திரும்­பி­யி­ருக்­கிறார்.

பூட்­டா­னுக்கும், பிரே­சி­லுக்கும் அவர் பய­ணங்­களை மேற்­கொண்­டுள்­ள­துடன், நேபாளம், ஜப்பான், அமெ­ரிக்கா உள்­ளிட்ட அடுத்­த­டுத்த வெளி­நாட்டுப் பய­ணங்­க­ளையும் எதிர்­நோக்­கி­யி­ருக்­கிறார்.

அது­போ­லவே, இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், பத­வி­யேற்ற பின்னர், தொடர்ச்­சி­யான வெளி­நாட்டுப் பய­ணங்கள், சிக்­கல்கள், சந்­திப்­பு­க­ளுக்குள் சிக்­கி­யி­ருக்­கிறார் என்­ப­தையும் குறிப்­பிட்­டே­யாக வேண்டும்.

அவர், முதலில் பங்­க­ளா­தே­ஷுக்கும், பின்னர், பூட்டான், நேபாளம் ஆகிய நாடு­க­ளுக்கும் பய­ணங்­களை மேற்­கொண்­ட­துடன் அடுத்து மியான்­மா­ருக்குச் செல்­லவும் திட்­ட­மிட்­டுள்ளார்.

இதற்­கி­டையில், இலங்கை வெளி­வி­வ­கார அமைச்சர் ஜி.ல்.பீரிஸ், அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செயலர் ஜோன் கெரி, பிரதிச் செயலர் வில்­லியம் பேர்ன், பிரித்­தா­னிய வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக இருந்த வில்­லியம் ஹேக் மற்றும் சீனா, உகண்டா, பிரான்ஸ், சிங்­கப்பூர், ஓமான், மியான்மார், கட்டார் உள்­ளிட்ட பல நாடு­களின் வெளி­வி­கார அமைச்­சர்­க­ளையும், இந்த இரண்டு மாதங்­க­ளிலும் சுஸ்மா சுவ­ராஜை சந்­தித்­துள்­ளனர்.

இவை தவிர, ஈராக்கில் சிக்­கி­யுள்ள இந்­தி­யர்­களை மீட்கும் விவ­காரம், உள்­ளிட்ட சிக்­கல்­க­ளையும் சந்­திக்க நேரிட்­டது.

ஆக, புது­டில்­லியில் அமைந்த புதிய அர­சாங்கம், இந்த இரண்டு மாதங்­க­ளிலும், தன்னைச் சுற்றி நடக்கும் தீவி­ர­மான விவ­கா­ரங்கள் குறித்தே கவனம் செலுத்த வேண்­டிய நிலை இருந்­தது என்­பதை மறுக்க முடி­யாது.

இந்தச் சிக்­க­லுக்குள், தமி­ழர்­களின் பிரச்­சினை குறித்து ஆலோ­சிக்­கவோ, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு அழைப்பு விடுப்­ப­தற்கோ, புதிய அர­சுக்கு நேரம் கிடைத்­தி­ருக்கும் என்று கருத முடி­ய­வில்லை.

அதை­விட, இந்­தியா மட்­டு­மல்ல, எந்­த­வொரு நாடுமே, தமது தேவைகள், நலன்­க­ளுக்கே முக்­கி­யத்­து­வமும் முன்­னு­ரி­மையும் கொடுக்கும்.

இப்­போ­தைய நிலையில், இலங்கை அர­சாங்­கத்­துடன் உறவைப் பலப்­ப­டுத்திக் கொள்­வதன் மூலம் அடையக் கூடிய நன்­மையை விட, தமிழர் தரப்­புடன் உறவைப் பலப்­ப­டுத்திக் கொள்­வதன் மூலம், கூடுதல் நலன்­களை இந்­தி­யா­வினால் பெற்று விட முடியும் என்று கூற முடி­யாது.

எனவே, சந்­தர்ப்பம் வரும்­போது பின்னர் ஒரு­முறை பார்த்துக் கொள்­ளலாம் என்ற அலட்­சியம் கூட புது­டில்­லி­யிடம் இருக்­கலாம். அதற்­கான வாய்ப்­பு­க­ளையும் நிரா­க­ரிக்க முடி­யாது.

எவ்­வா­றா­யினும், தமிழர் பிரச்­சினை இலங்­கையின் உள்­நாட்டு விவ­காரம் என்று, ஒதுக்கி வைத்து விட்டு இந்­தி­யா­வினால் முழு­மை­யாக ஒதுங்கி நின்­று­விட முடி­யாது.

அதற்­காக, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு அழைப்பு விடு­வது தாம­திக்­கப்­ப­டு­கி­றது என்று கரு­தவும் முடி­யாது.

பொது­வா­கவே, இலங்­கை­யு­ட­னான உறவு விட­யத்தில், இலங்கைப் பிரச்­சினை விவ­கா­ரத்தில், புதிய அர­சாங்கம் நிதானப் போக்­கையே வெளிப்­ப­டுத்­து­கி­றது.

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம் கொழும்புக்கானதாக இருக்கும் என்று முதலில் இலங்கை அரசாங்கம் நம்பியது.

ஆனால், அவர் பூட்டானுக்கும் பிரேஸிலுக்கும் சென்று வந்துவிட்டார் -அடுத்து, நேபாளத்துக்குச் செல்லப் போகிறார்.

எனினும் இலங்கைப் பயணம் பற்றிய எந்த தகவலும் இல்லை.

அதுபோலவே சுஸ்மா சுவராஜ், முதலில் இலங்கை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் என்று சென்று வந்துவிட்ட அவர் அடுத்து மியான்மார் செல்லவுள்ள போதும், இலங்கையைக் கண்டுகொள்ளவில்லை.

நரேந்திர மோடியின் அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மட்டுமன்றி, இலங்கை அரசாங்கத்தையும் கூட சற்று எட்டி வைத்தே கண்காணிக்கிறது.

இது, இந்த விவகாரத்தில் இருந்து தான் ஒதுங்கி நிற்பதாக காட்டிக் கொள்வதற்காகவோ அல்லது சற்று ஒதுங்கி நின்று அவதானித்து விட்டு, ஒரு பெரும் பாய்ச்சலை நடத்துவதற்காகவா? – பொறுத்திருந்து பார்க்கலாம்.

 ஹரி­கரன்

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26