Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
வேதனையை வெல்வதற்கு உன் வேர்களைத் தேடு, அவலங்களை நிறுத்த புது அத்திபாரம் போடு
18 May, 2014, Sun 8:10 GMT+1  |  views: 6662

குந்தியிருந்த நிலமும்
குடி புகுந்த வீடும்
உருக்குலைந்ததனால்,
வாடிய உடலோடு வனாந்தரங்கள் தாண்டி
நந்திகடலே தஞ்சமென வந்த போது
கூடிநிற்கச் சொல்லிவிட்டு
கொத்துக் கொத்தாய் கொன்றழித்தவன்,
நினைவிற்காய் கொழுத்திய தீபத்தையும்
உதைத்ததணைத்த போதும் – நீ
ஊமையாய் இருந்தால்
ஊனம் உன் உடலில்லல்ல
மனதில்.

கண்ணீரில் மூழ்கி
குருதியில் குளித்த மண்ணுக்கு
காணிக்கையென்னவெனில்
சொல்லப் போகும் பதிலென்ன?

இனத்தையே அழித்தவன்
எதுவுமே நடக்கவில்லையென
இருட்டடிப்பு செய்கையில்,
இனத்தை இழப்பவனே
நீதிக்காய் நீயென்ன செய்கின்றாய்?

முள்ளிவாய்க்கால் மண்ணில்
புதைக்கப்பட்டது
வெற்றுடலங்கள் மட்டுமல்ல.
எழுவதற்கான விதையும் தான்.

நிலையான வாழ்வு வரும் வரை
நிற்கக்கூடாது சுதந்திரத்திற்கான சுவாசம்.

திசையற்று போவதற்கு
எம் போராட்டமொன்றும்
நீர்க்குமிழியோ தீச்சுவாலையோ அல்ல.

திடமிருந்தாலே முளைப்பாய் நிமிர்வாய்
இல்லையேல்
முடமாகவே முடியப்போவது
உன் வாழ்க்கை மட்டுமல்ல
ஒரு வம்சத்தின் வரலாறும் கூடவே.

போரொன்றின் தோல்வி
போராட்டமொன்றின் அஸ்தமனமல்ல.
வேதனையை வெல்வதற்கு
உன் வேர்களைத் தேடு
அவலங்களை நிறுத்த
புது அத்திபாரம் போடு.

நாங்கள் படுகொலையால் பதறி நிற்க,
காந்திகளாய் காட்டிக் கொண்டோர்
பழிவாங்க பதினெட்டு வருடங்கள்
காத்திருந்தோம் என்றார்.
பதிலுக்கு எங்களிடம்
அன்று
சாபமும் நிசப்தமும் மட்டுமே
நிறைந்திருந்தது.
இன்று, கண்ணகி எரித்த தேசத்தில்
கட்டுப்பணத்தைகூட காப்பாற்ற வழியின்றி
காணமல் போயினர் எம் கண்முன்னே.

வங்கக் கடல் தாண்டி
வரும் கப்பலென பார்த்திருந்தவர்
சாபம் பலித்தது.
ஏனெனில், தர்மத்துக்கான போரில்
சாபங்களும் சபதங்களும் ஆயுதங்களே.

பூகோள அரசியலில் ஓயாத அலையாகு
நிலையான வாழ்வுக்காய்
சிலையானவர் நினைவோடு போராடு.

பலமாகு
விளக்கேற்ற மறுத்தவனை
மின்சாரக் கதிரையில் ஏற்ற.
பலமாகு
நிலம் மீட்க குறுக்கே நிற்பவனை வீழ்த்த.

பாலமாகு
பிரிக்கப்பட்ட மாகாணங்களை இணைப்பதற்காய்
பாலமாகு
உறவுகளை இழந்த சிறார்களை அணைப்பதற்காய்

அநீதிக்கு நீதி கிடைக்கும் வரை
அடங்கிப் போகதே.
இறமையை மீட்கும் போரில்
இறங்கிப் போகதே.
உரிமையை அடையும் வரை
தடைகளை உடைக்க தயங்காதே.
விடைகள் தெரியும் வரை
விட்டுக்கொடுக்காதே.
படைகள் அகலும் வரை
ஆக்கிரமிப்பை எதிர்.
தலைகள் உயரும் வரை
தளர்ந்து போகதே.

இத்தனையும் இனியும் இழந்துபோனவருக்கல்ல.
குரலற்றவரின் குரலென்று கூவிடும்
புலம்பெயர் உறவுக்கே.
கூடிழந்த குருவிகள் வீடு திரும்பும் வரை
நாடற்று வாழும் நாம்
பாரிடம் கேட்போம் நீதி.
பதிலில்லையெனில்
மீதிப் பயணம்
எம் மண்ணில் நம் தலைகள்
நிமிரும் வரை
நகரட்டும்.

- ச.பா.நிர்மானுசன்

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகப் பெரிய நாடு எது?
  ரஷ்யா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பட்டதாரி இளைஞன்...!!
கதிரவன் உதித்த நேரம் - சென்றேன் கல்லூரி சாலை ஒரம், வழியெல்லாம் பூக்கள் - நினைவில்
16 September, 2018, Sun 15:03 | views: 286 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பலம் காட்டும் மகிந்த...!!
கடந்த புதன்கிழமை கொழும்பில் தலைநகரின் இதயமான பகுதியில் மகிந்த மீண்டும் தனது பலத்தைக் காட்ட
9 September, 2018, Sun 17:32 | views: 429 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாலையோர ஓவியன்...!!
அழகிய விழி ஓரம் மை இட்டு! தடித்து சற்று வளைந்த செவ்விதழில் சாயம் இட்டு இடை மேல நழுவி
9 September, 2018, Sun 16:26 | views: 356 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காணாமலாக்கப்பட்டோர் கதையிது
ஆக்காட்டி ஆக்காட்டி என் ஊரின் ஆக்காட்டி மண்ணைக் கிளறி கூழாங்கற்கள் நிரவி வைத்து
2 September, 2018, Sun 11:55 | views: 405 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நீயே தாயுமானவள்....!!
உனை நன்றியோடு மட்டுமே தொட்டிருக்கிறேன்.. உனை உடலால் நான் தொட்டதேயில்லை
26 August, 2018, Sun 13:55 | views: 473 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS