Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
மனிதர்களை கொல்லும் மர்ம தீவு!: திகிலூட்டும் உண்மை
24 December, 2013, Tue 6:15 GMT+1  |  views: 6541

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல பரந்து விரிந்த ஏரி. ஆங்காங்கே மலைகள்.

பசுமையாக குட்டி குட்டியாக தீவுகள். சுற்றுலா பயணிகளை கவரும் சுவாரஸ்யம் ஏராளம் என்றாலும், அங்கு போகும் மனிதர்கள் திடீரென மாயமாகி விடுகிறார்கள்.

இந்த மர்ம தீவு பற்றிய விஷயங்கள் திகிலூட்டுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய பாலைவனக் கடல் என்று பெயர் பெற்ற “துர்கானா ஏரி” கென்யாவில் உள்ளது. ருடால்ப் ஏரி என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்த ஏரிக்கு, பல்வேறு நதிகளில் இருந்து நீர் வருகிறது. இங்கு நிலவும் கடும் வெப்பத்தால், ஒரு பகுதி ஆவியாகிறது.

மீதமுள்ள நீர், அதிக உப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. கென்யாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடங்களில் ஒன்றாக இந்த பாலைவனக் கடல் திகழ்கிறது.

குட்டி குட்டி தீவுகளும், பழமை மாறாத பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையும் கவர்ந்திழுக்கிறது. இந்த அட்ராக்ஷனோடு நம்மை உறைய வைக்கும் அதிர்ச்சிகளும் உள்ளன.

இங்குள்ள குட்டி தீவுகளில் ஒன்று “என்வைட்டினெட்”. இங்கு வாழும் பழங்குடியின மக்கள் பேசும் மொழி சொல். இதன் அர்த்தம் “திரும்ப வராது” என்பதாகும். என்வைட்டினெட் தீவுக்குள் செல்பவர்கள் யாரும் திரும்பி வருவது கிடையாதாம்.

அறிவியல் ஆராய்ச்சிகளுக்கே சவால் விடும் வகையில் இந்த தீவு உள்ளது.

முன்பொரு காலத்தில் இதில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர் என்றும் மீன் பிடிப்பது, வேட்டையாடுவது அவர்களின் தொழிலாக இருந்தது என்றும் பக்கத்து தீவுகளை சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள்.

வியாபாரத்துக்காக பக்கத்து தீவுகளுக்கு வருவார்களாம். ஆனால் ஒரு காலத்துக்கு பிறகு தீவில் இருந்து வெளியே வரும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் யாரும் வராமல் போனதால் பக்கத்து தீவுகளில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து அந்த தீவுக்கு சென்றுள்ளனர்.

ஆனால் அப்படி சென்றவர்களும் திரும்பாமல் போகவே மர்ம தீவாக மாறியது என்வைட்டினெட்.
கடந்த 1935ம் ஆண்டு ஆங்கிலேய விஞ்ஞானி விவியன் பஸ் என்பவர் தன் குழுவினரோடு இந்த தீவு பற்றி ஆய்வுகள் மேற்கொண்டார்.

என்வைட்டினெட் குட்டித் தீவுக்கு இளம் விஞ்ஞானிகள் மார்டின் ஷெப்லிஸ், பில் டேசன் ஆகியோரை அனுப்பி வைத்தார் விவியன். நாட்கள்தான் போனதே தவிர விஞ்ஞானிகள் திரும்பியபாடில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்தஆராய்ச்சியாளர்கள் தூரத்தில் இருந்தே ஆய்வுகளை செய்தனர். ஹெலிகாப்டரில் பறந்தபடியே வேவு பார்த்தனர்.

எந்த தடயமும் கிடைக்கவில்லை. பழங்குடியினர் குடிசைகள் அப்படியே இருந்தன. அழுகிய மீன்கள் சிதறிக் கிடந்தன. மனித நடமாட்டம் மட்டும் இல்லவே இல்லை.

இதையடுத்து பக்கத்து தீவுகளில் வசித்தவர்களிடம்தகவல்கள் சேகரித்தார். ‘அந்த தீவில் பிரமாண்ட ஒளி ஒன்று வரும். அப்போது இடத்தில் யார் இருந்தாலும் காணாமல் போய் விடுவார்கள். அப்படித்தான் அங்கிருந்தவர்கள் காணாமல் போயிருப்பார்கள்’ என்று பக்கத்து தீவுவாசிகள் கூறினர்.
பிரமாண்ட ஒளி வெள்ளம் எப்படி வருகிறது, அது மனிதர்களை எரித்து விடுகிறதா, அப்படி என்றால் எலும்புகளாவது மிஞ்சி இருக்க வேண்டுமே என்ற கேள்விகளுக்கு விவியனுக்கு விடை கிடைக்கவில்லை.

இந்த தீவுக்கும், வேற்றுக் கிரகவாசிகளுக்கும் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் ஆராய்ச்சிகள் சூடு பிடித்துள்ளது.

இங்குள்ள மக்களை வேற்று கிரகவாசிகள் கடத்தி செல்கின்றனர் என்றும், கண்ணுக்குத் தெரியாத சக்கரம் ஒன்று சுழல்கிறது என்றும், மக்கள் காற்றில் கரைகின்றனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் மர்ம முடிச்சுகள் எதுவும் இன்னும் அவிழவில்லை.
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

எலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)

மின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வாரத்திற்கு 40 மணி நேரம் பணி புரிந்தால் ஆயுள் குறையும் – அதிர்ச்சியூட்டும் ஆய்வுகள்
நீங்கள் வாரத்திற்கு 39 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்கிறீர்களா? என்றால், ஆம் என்று தான் பதில் சொல்வோம்.
16 September, 2018, Sun 13:18 | views: 650 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
‘தண்ணிப்பால்’ பால் என்றால் என்ன?
கடந்த சில வாரங்களில் UHT பால், Condensed பால் (கெட்டிப் பால்) ஆகியவை பற்றி தெரிந்துகொண்டோம்.
9 September, 2018, Sun 14:55 | views: 532 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆகாயத்தில் வெள்ளைக் கோட்டின் அர்த்தம் என்ன?
பரந்துகிடக்கும் நீல வானில் சிதறிக்கிடக்கும் பஞ்சுமிட்டாய் போன்ற வெள்ளை மேகங்கள்... உற்றுகவனிக்கும்போது சில
2 September, 2018, Sun 14:25 | views: 531 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குடும்பத்தின் 32 பேரின் பசியை போக்கும் இரும்பு பாட்டி...!!
மோசுல் நகரை விட்டு ஐ.எஸ். அமைப்பு வெளியேற்றப்பட்டு ஓராண்டு ஆகிவிட்டது. ஐ.எஸ் ஆக்கிரமிப்பின் போது
26 August, 2018, Sun 16:07 | views: 731 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கல்யாண வீட்டில் நடனமாடி அசத்திய அதிபர் புட்டின்...!!
ரஷ்ய அதிபர் புட்டின் ஆஸ்டிரிய வெளியுறவு அமைச்சர் திருமணத்தில் நடனமாடி அசத்தியுள்ளார்.
19 August, 2018, Sun 16:53 | views: 663 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS