ஏழாவது பிரீமியர் லிக் தொடர் - இலங்கையில் நடத்த வாய்ப்பு
3 January, 2014, Fri 11:16 GMT+1 | views: 1410
ஏழாவது இந்தியன் பிரீமியர் லீக் 20க்கு20 போட்டித் தொடரை இரண்டு கட்டங்களாக நடத்த இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி தொடரின் முதல் பாதி போட்டிகளை இந்தியாவிலும் ஏனைய போட்டிகளை வேறு நாடுகளிலும் நடத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டு இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கிரிக்கட் போட்டிகளுக்கும் தேர்தல் அட்டவணைக்கும் குழப்பங்கள் ஏற்படாத வகையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கிடையில் இந்த போட்டித் தொடரின் மறுபாதியை அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளால் பாகிஸ்தானிலோ பங்களாதேசிலோ நடத்த முடியாத நிலை காணப்படுகிறது.
இந்த நிலையில் ஆசியாவை தாண்டி வேறொரு நாட்டை இதற்காக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தெரிவு செய்யாத பட்சத்தில் பெரும்பாலும் இந்த போட்டிகள் இலங்கையிலேயே நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.