Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சனிக்கிழமை பரிசை முற்றுகையிடக் கோரிக்கை - மஞ்சள் ஆடைப் பேராளிகள்!!
France Tamilnews
லாச்சப்பல் - ஓரினச் சோடிகள் மீது தொடர் தாக்குதல் - அவமதிப்புகள்!!
France Tamilnews
மஞ்சள் ஆடையுடன் பாராளுமன்ற உறுப்பினர்- பாராளுமன்றத்தில் பெரும் சலசலப்பு -காணொளி
France Tamilnews
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
கூட்டுக் குடும்பத்தில் வசிப்பதால் கிடைக்கும் தீமைகள்!!!
26 December, 2013, Thu 11:19 GMT+1  |  views: 4095

 ஒரு மனிதனின் வாழ்க்கையில் குடும்பம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். குடும்பம் என்று வண்டு விட்டால் இந்த உலகத்தை தனக்கு காட்டிய தன் அன்னையிலிருந்து, உடன்பிறந்தவர்கள், மனைவி மற்றும் குழந்தைகள் என அனைவருமே ஒரு மனிதனுக்கு முக்கியமானவைகள். நம் வாழ்க்கையில் இன்பத்திலும் துன்பத்திலும் நம்முடன் முதலில் கை கொடுத்து நிற்பது நம் குடும்பத்தாரே. 

 
அனைவரின் வாழ்க்கையிலும் இது பொருந்தும். இன்றைய காலகட்டத்தில் குடும்ப அமைப்பு மாறி கொண்டே வருகிறது. முன்பெல்லாம் குடும்பம் என்றால் அது பெரிய கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள். ஆனால் அது இப்போது அடியோடு மாறி விட்டது. இப்போதுள்ள குடும்பங்கள் எல்லாம் சிறிய எண்ணிக்கையில் சின்ன சின்னதாக மாறி விட்டது. இவ்வகை பெரிய மாற்றங்கள் ஏற்பட என்ன காரணம் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? இன்றைய கால கட்டத்தில் கூட்டு குடும்பம் என்பது பல பேருக்கு பெரிய சுமையாகவும் பிரச்சனையாகவும் மாறி விட்டது. பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் போது அது ஏன் அவ்வகை மாற்றங்களை அடைந்துள்ளது என்பதை கவனிக்க வேண்டும். 
 
கூட்டு குடும்பத்தில் வாழ்வதில் சில ஆதாயங்கள் இருக்கிறது. ஆனாலும் அதில் பல குறைகளும் இருக்கத் தான் செய்கிறது. கூட்டு குடும்பத்தால் ஏற்படும் பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்பட்டவர் என்றால் அவைகளை பற்றி உங்களுக்கு நன்றாகவே புரிந்து கொள்ள முடியும். கூட்டு குடும்பத்தில் வாழ்வதால் ஏற்படும் சில பிரச்சனைகளையும் அதனால் ஏன் குடும்பம் பிரிகிறது என்பதையும் இப்போது பார்க்கலாமா? 
 
பழமை விரும்பியான குடும்பத் தலைவர் 
 
கூட்டு குடும்பம் என்று வந்து விட்டால் வீட்டின் மூத்தவரே அந்த குடும்பத்தின் தலைவராக இருப்பார். அவர் வயதானவராகவும் கண்டிப்பு தன்மையுடனும் விளங்குவார். இவ்வகை குடும்ப அமைப்பில் தான் ஆச்சாரமும் பழமையான கலாச்சாரங்களும் கடைப்பிடிக்க படுகின்றன. இது அங்கு வாழும் பலருக்கும் எதிர்மறையான மனநிலையை உண்டாக்கி விடும். கூட்டு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்றாக இது விளங்குகிறது. எப்போதுமே குடும்ப உறுப்பினர்கள் தான் குடும்ப தலைவருக்காக விட்டு கொடுத்து வாழ வேண்டியிருக்கும். கூட்டு குடும்பத்தில் வாழ்வதற்கான முக்கியமான டிப்ஸாகவும் இது கூறப்படுகிறது.

முயற்சி எடுப்பதில் தடைபாடு 
 
கூட்டு குடும்பத்தில் உள்ள மற்றொரு முக்கிய பிரச்சனையானது தொடக்க முயற்சி இல்லாதது. கூட்டு குடும்பத்தில் முயற்சி எடுக்க பல கைகள் உள்ளதால் யாருமே தொடக்க முயற்சி எடுக்க சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை. இப்படி பொறுப்பை சுமக்க யாரும் முன்வராததால் இவ்வகை அமைப்பில் வாழ பலருக்கு பிடிப்பதில்லை. கூட்டு குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் ஒரு சில உறவுகள் சார்ந்த டிப்ஸை பின்பற்றியாக வேண்டும்.

சோக நிலை 
 
கூட்டு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் பெரும்பாலும் பாதிப்படைவது அங்குள்ள பெண்களே. அந்த குடும்ப அமைப்பில் பொதுவாக பெண்கள் எல்லாம் அடுப்பங்கறையில் அடைபட்டு கிடப்பதால் அவர்களின் திறமைகள் எல்லாம் வீணாய் போகும். இப்படிபட்ட பிரச்சனைகளை அவர்கள் சந்திப்பதால் பொதுவாக கூட்டு குடும்பத்தில் வசிக்கும் பெண்கள் அந்த சூழலை விட்டு வெளியேற விரும்புவதுண்டு. மேலும் கூட்டு குடும்ப சூழலோடு ஒத்துப் போய் வாழ்வதிலும் பெண்கள் சிரமப்படுவார்கள். அதனால் உறவுகள் சார்ந்த டிப்ஸ் இருந்தால் மட்டும் பத்தாது; சற்று கவனமாக கையாள வேண்டும்.
 
தனிமை 
 
இள வயது தம்பதிகளுக்கு கூட்டு குடும்பத்தில் உள்ள பெரிய பிரச்சனையே அவர்களுக்கு போதிய தனிமை கிடைப்பதில்லை. உங்களுக்கு உங்கள் மனைவி அல்லது குழந்தைகளுடன் தனிமையில் நேரத்தை போக்கிட வாய்ப்புகள் கிடைப்பதில்லை. கூட்டு குடும்பத்தில் எப்போதுமே பல பேருடன் சேர்ந்த இருப்பதால் அன்பு என்பது எப்போதுமே வெளிப்படுத்த முடியாத ஒன்றாகும். கூட்டு குடும்பத்தில் இருந்தாலும் கூட உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கொஞ்ச நேரமாவது செலவிட தவற விடாதீர்கள்.
 
பொருளாதார சூழ்நிலை 
 
கூட்டு குடும்பத்தில் குடும்பத்தின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதில் அனைவருக்குமே பொறுப்பு உள்ளது. ஆனால் இப்படி பகிரும் நிலை இருப்பதால் ஒரு சிலர் ஒழுங்காக கை கொடுக்காமல் சும்மா இருப்பார்கள். இதனால் குடும்பத்தின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும். அவரவர் கடமை மற்றும் பொறுப்புகளை ஒழுங்காக செய்யாமல் ஒவ்வொருவரும் மற்றவர்களை குறை கூறி கொண்டே இருப்பார்கள். 
 
இவை அனைத்துமே கூட்டு குடும்பத்தால் ஏற்படும் பிரச்சனைகள். அதனால் உஷாராக இருங்கள்!
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

அம்மீட்டர் (Ammeter)

மின்சாரத்தின்  அளவீட்டை கணக்கிடுவது.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொள்ளலாமா?
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தங்களைப் புரிந்து கொள்கிற சிறந்த வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள்.
13 November, 2018, Tue 10:36 | views: 614 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உரையாடல்தான் உறவுகளை வலுப்படுத்தும்...
உரையாடல்தான் உறவுகளை வலுப்படுத்தும்' என்கின்றனர் உலகளாவிய மனநல மருத்துவர்கள். பலருக்கும் தங்கள் மனம்விட்டு உரையாடாத காரணத்தால்தான
8 November, 2018, Thu 11:35 | views: 894 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காதல் கல்யாணம் எப்போது கசக்கும்?
அந்த அளவு கண்மூடித்தனமான காதலில் மிதக்கும் காதலர்கள் திருமணத்திற்கு பின் சில ஆண்டுகளில் அன்பு கசந்து விடுகிறது. ஆசை அறுபது நாள் ம
29 September, 2018, Sat 15:26 | views: 1406 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உறவுகளை உதறி தள்ளிவிட்டு எதற்காக இந்த ஓட்டம்?
எதற்காக இந்த ஓட்டம் எல்லோரும் அதிவேகமாக ஓடுகிறார்கள். நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு தடங்கலாக இருந்த சொந்த ஊர்கள
17 September, 2018, Mon 15:42 | views: 1260 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அந்த நேரத்தில் பெண்களை வெறுப்பேற்றும் விஷயங்கள்
முன்விளையாட்டுக்கு பெண்களை அவசரப்படுத்துவது பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. முன்விளையாட்டுகள் பெண்களின் உணர்ச்சியை தூண்டுவதோடு,
4 September, 2018, Tue 11:09 | views: 2638 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS