Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
உடல் எடையில் நல்ல மாற்றம் தரும் பழச்சாறுகள்
28 October, 2013, Mon 6:00 GMT+1  |  views: 1725

 உலகில் ஒருவருக்கு ஏற்படும் பிரச்சினைகளிலேயே மிகவும் தொல்லை தரும் பிரச்சினை என்றால் அது உடல் பருமன் தான். உடல் எடை அதிகம் இருந்தால், எந்த ஒரு வேலை யையும் சரியாகவும், நிம்ம தியாகவும் செய்ய முடியாது. எதை செய்தாலும் சிறிது நேரத்திலேயே மூச்சு வாங்கி, உடல் சோர்ந்துவிடும். 

 
எனவே பலர் இந்த உடல் எடையை சீக்கிரம் குறைக்க வேண்டுமென்று, தினமும் ஜிம் செல்வது, டயட் மேற்கொள்வது என்று இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, தற்போது உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் பழச்சாறுகள் மூலம் எடையைக் குறைப்பது. 
 
அது எப்படி பழச்சாறு குடிப்பதன் மூலம் குறைக்க முடியும் என்று கேட்பீர்கள். உண்மையிலேயே பழச்சாறுகளை குடித்தால், பழச்சாறுகள் அடிக்கடி பசி ஏற்படுவதைக் குறைத்து, நீண்ட நேரம் வயிற்றினை நிறைத்து வைத்திருக்கும். இதனால் கண்ட கண்ட உணவுப் பொருட்களை சாப்பிடமாட்டோம். 
 
குறிப்பாக உடல் எடை குறைய வேண்டு மானால், முதலில் அனைவரும் உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் செயலின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இதனால் நிச்சயம் விரைவில் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காண முடியும். அதிலும் ஒரு வாரத்தில் உடல் எடையில் ஒரு குறிப்பிட்ட அளவில் மாற்றத்தைக் காணலாம். சரி, இப்போது உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள் சிலவற்றைப் பார்ப்போமா!!! 
 
தர்பூசணி பழச்சாறு
 
உடல் எடை குறைப்பில் தர்பூசணி பழச்சாறு முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் இதனை தினமும் உணவு உண்பதற்கு முன் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். 
 
அன்னாசி பழச்சாறு
 
அன்னாசியை மட்டும் அரைத்தால், அது கெட்டியான பழச்சாறு போன்று இருக்கும். ஆகவே அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, பசியாக இருக்கும் நேரத்தில் குடித்தால், பசியானது உடனே அடங்கும். 
 
அவகேடோ சாறு
 
நிறைய பேர் உடல் எடையை குறைக்க நினைக்கும் போது அவகேடோ சாப்பிடக்கூடாது என்று தவறான கருத்தைக் கொண்டுள்ளார்கள். ஆனால் உண்மையில் இது மிகவும் நல்லது. அதிலும் அவகேடோவை அரைத்து சாறு போட்டு, தேன் சேர்த்து குடித்து வந்தால், தொப்பை குறைந்து விடும். 
 
மேலும் இதில் நல்ல கொழுப்புக்கள் இருப்பதால், இது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் சீராக இயங்க செய்வதோடு ரத்த சுத்திகரிப்பையும் சிறப்பாக மேற்கொள்கிறது. உடலுக்கு கூடுதல் சக்தியையும் வழங்குகிறது. 
 
தக்காளி  பழச்சாறு
 
ஏழே நாட்களில் எடையில் நல்ல மாற்றம் வேண்டுமெனில், 3 தக்காளியை வேக வைத்து, அதனை அரைத்து, அதில் வெல்லம் சேர்த்து, தினமும் மூன்று வேளை குடித்து வர வேண்டும். 
 
எலுமிச்சை பழச்சாறு
 
பொதுவாக எலுமிச்சை உடல் எடைக் குறைப்பில் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதிலும் ஏழே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய, எலுமிச்சை ஜுஸில் 1 சிட்டிகை உப்பு மற்றும் தேன் சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்துவிடும். 
 
கிரேப் பழச்சாறு
 
கிரேப் புரூட்டில் வைட்டமின்கள் மற்றும் நல்ல கொழுப்புக்கள் இருப்பதால், இதனைக் கொண்டு சாறு போட்டு குடித்து வந்தால், உடல் எடை குறைவதோடு, சருமமும் நன்கு பொலிவோடு இருக்கும். 
 
ஆரஞ்சு பழச்சாறு
 
ஆரஞ்சு பழச்சாறு குடித்தாலும், எடையில் மாற்றம் தெரியும். அதிலும் ஆரஞ்சுப் பழ ஜுஸில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். குறிப்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் ஜுஸ் போட்டு குடிக்க வேண்டும். 
 
திராட்சை பழச்சாறு
 
தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன்னர், ஒரு டம்ளர் திராட்சை பழச்சாறு குடித்து வந்தால், திராட்சை உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளி யேற்றி, விரைவில் உடல் எடையைக் குறைக்கும். 
 
கொய்யாப்பழ பழச்சாறு
 
கொய்யாவில் வைட்டமின் `சி' அதிகம் உள்ளதால், இதனை பழச்சாறு போட்டு வாரத்திற்கு இரண்டு நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து விடும். 
 
பெர்ரிப் பழச்சாறு
 
பெர்ரிப் பழங்களைக் கொண்டு ஜுஸ் போட்டு குடித்து வந்தாலும், உடல் எடை குறையும். அதிலும் உணவு உண்பதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன், இந்த ஜுஸை குடிக்க வேண்டும். இதனால் அதிகளவு உணவு உண்பதைத் தவிர்க்கலாம்.

 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது? 
  வத்திகான்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கூந்தல் வெடிப்பை தடுக்கும் வீட்டு வைத்தியம்
சிலருக்கு கூந்தலின் முனைகள் பிளவுபட்டு இருக்கும். இப்படி முடியின் முனைகளில் வெடிப்புக்கள் இருந்தால், முடியின் வளர்ச்சி தடுக்கப்பட
17 September, 2018, Mon 15:32 | views: 566 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சருமத்திற்கு பூசணி தரும் அழகு
பூசணிக்காயை சமையலுக்கு மட்டுமின்றி சரும அழகுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதிலிருக்கும் வைட்டமின் ஏ, சி மற்றும் ஆன்டி ஆக்சிடெண்ட
14 September, 2018, Fri 11:11 | views: 398 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள்
கண்ணுக்கு கீழ் ஏற்படும் கண் கருவளையத்தால் பெரும்பாலான பெண்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர். அதிலும் திருமணமாகாத பெண்களுக்கு கண் கரு
8 September, 2018, Sat 14:15 | views: 659 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவு முறைகள்
ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள் வயது முதிர்ச்சியாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வடைவதே. அதனால் மூளை சரியாக எதையும் ஞாப
6 September, 2018, Thu 11:17 | views: 1012 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அழகை பாதுகாப்பது எப்படி?
அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக இளம்பெண்கள் பலர் எடைக் குறைப்பில் ஈடுபடுகின்றனர். அதன் காரணமாக காலை உணவை தவிர்க்கின்றனர். சிலர்
4 September, 2018, Tue 11:06 | views: 606 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS