Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

சிகையலங்கார நிபுணர் தேவை

PARIS பகுதியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையத்திற்கு அனுபவமுள்ள (coiffeur) சிகையலங்கார நிபுணர் தேவை.
click to call 06 61 06 80 70
PT-01122019

ஊழியர்கள் தேவை

PARISஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.
click to call 06 95 54 11 06
PT-01122019

அழகுக்கலை நிபுனர் தேவை

CUISINIER INDIEN தேவை

Laon 02000 இல் உள்ள இந்திய உணவகத்திற்கு CUISINIER தேவை. வேலை செய்யக்கூடிய அனுமதி (Visa) தேவை..
click to call 06 51 89 02 00
PT-01122019

ஊழியர்கள் தேவை

SHANU MULTISERVICE

Entrepôt வாடகைக்கு

இணைய சேவை

ஓம் சக்தி ஜோதிட நிலையம்

நடனப் பயிற்சி பள்ளி

Anne Abi Auto பயிற்சி நிலையம்

பிரெஞ்சு/ஆங்கில வகுப்பு

புதிய வகுப்புகள்

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

Bail 3/6/9 விற்பனைக்கு

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
5
வியாழக்கிழமை
டிசம்பர்
துர்முகி 2047
திதி: திருதியை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

2021-ம் ஆண்டு தேர்தலில் அற்புதம் நிகழும் - ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

22 November, 2019, Fri 2:41   |  views: 534

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தோல்வி அடைந்தது.

கமல்ஹாசனைப் போல் அவரது நண்பரும், நடிகருமான ரஜினிகாந்தும் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளார். வருகிற 2021-ம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு அவர் புதிய கட்சியை தொடங்க திட்டமிட்டு உள்ளார். சினிமாவில் நடித்துக் கொண்டே அதற்கான ஆயத்த பணிகளை அவர் செய்து வருகிறார்.

கடந்த 8-ந் தேதி ரஜினிகாந்த் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளிக் கையில், தமிழகத்தில் சரியான ஆளுமைக்கு, தலைமைக்கு வெற்றிடம் இருப்பதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க., தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இல்லை என்று கூறியது. தி.மு.க. தரப்பிலும் ரஜினிகாந்த் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கமல்ஹாசனின் 60 ஆண்டு கால சினிமா பயணத்தை கொண்டாடும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு கமல்ஹாசனை பாராட்டி பேசிய ரஜினிகாந்த், “2 ஆண்டுகளுக்கு முன்பு முதல்-அமைச்சர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவில்கூட நினைத்திருக்க மாட்டார். 4 மாதங்களில் ஆட்சி கவிழும் என்று அனைவருமே சொன்னார்கள். ஆனால் அதிசயம் நடந்தது. நேற்றும் அதிசயம் நடந்தது. இன்றும் அதிசயம் நடக்கிறது. நாளையும் அதிசயம் நடக்கும்” என்று கூறினார்.

அவர் இவ்வாறு கூறியது பரபரப்புக்கும் விமர்சனத்துக்கும் உள்ளானது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த ரஜினிகாந்த், “தமிழக மக்கள் நலனுக்காக நானும், கமல்ஹாசனும் இணைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் இணைந்து செயல்படுவோம்” என்று கூறினார்.

அவர் இவ்வாறு கூறியது பற்றி நேற்று முன்தினம் கமல்ஹாசனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, தேவைப்பட்டால் தமிழக மக்களின் நலனுக்காக ரஜினிகாந்துடன் இணைந்து செயல்படுவேன் என்று அவர் பதில் அளித்தார்.

கமல்ஹாசன் இவ்வாறு கூறியது பற்றி மக்கள் நீதி மய்யத்தின் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளரும், நடிகையுமான ஸ்ரீபிரியா பின்னர் கருத்து தெரிவிக்கையில், ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இணைந்தாலும் எங்கள் தலைவர் கமல்ஹாசன்தான் முதல்- அமைச்சராக வரவேண்டும் என தான் விரும்புவதாகவும், சட்டசபை தேர்தல் முடிவு இதற்கான சாத்தியக்கூறை ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் கூறினார்.

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இணைந்து செயல்படுவது பற்றிய தகவல்கள் வெளியாகி வரும் சூழ்நிலையில், ஸ்ரீபிரியா இவ்வாறு கூறியது, ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கோவாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிறப்பு விருது பெற்ற ரஜினிகாந்த் அங்கிருந்து விமானம் மூலம் நேற்று சென்னை திரும்பினார்.

விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் பேசுகையில், “கோவாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் எனக்கு விருது வழங்கியதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் விருது வாங்க தமிழ் மக்கள்தான் காரணம். அந்த விருதை தமிழக மக்களுக்கே சமர்ப்பிக்கிறேன்” என்றார்.

அப்போது அவரிடம், “நீங்களும், கமல்ஹாசனும் அரசியலில் இணைந்து செயல்பட்டால் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்?” என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், “யார் முதல்-அமைச்சர் என்பது தேர்தல் நேரத்தில் அப்போதைய சூழ்நிலையில் எடுக்க வேண்டிய முடிவு. நான் கட்சி ஆரம்பித்த பின்பு, கட்சி உறுப்பினர்களுடன் பேசி எடுக்க வேண்டிய முடிவு. அப்போது நான் முடிவை சொல்கிறேன். அதுவரை அதைப்பற்றி பேச நான் விரும்பவில்லை” என்றார்.

அத்துடன், “2021-ம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை, அதிசயத்தை, நூற்றுக்கு நூறு சதவீதம் நிகழ்த்துவார்கள்” என்றும் அப்போது அவர் கூறினார்.

தற்போதை தமிழக சட்ட சபையின் பதவி காலம் வருகிற 2021-ம் ஆண்டு முடிவடைகிறது. எனவே சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள்தான் உள்ளன.

இந்த நிலையில் இணைந்து செயல்படுவது பற்றியும், தமிழக அரசியல் சூழ்நிலை குறித்தும் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அவ்வப்போது பரபரப்பான கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கிறது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


SHAMROCK EDUCATION CENTRE
Tel. : 06 08 02 68 21 / 01 45 48 82 40
shamrock-education-centre-paris14
புதிய வகுப்புகள்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
SHANU MULTISERVICE
Tel.: 07 55 00 03 63 / 07 53 28 87 64
shanu-multiservice-bondy-93140
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Recherche d'une Pâtissière

Paristamil Annonce
AUDI A4 1.8 TFSI 120CH AMBIENTE MULTITRONIC BERLINE
4 PNEUS AVEC JANTES D'HIVER OFFERT €
Paristamil Annonce
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26