Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

Bail விற்பனைக்கு

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

இந்திய அணியை வீழ்த்துவோம்! மிரட்டும் பாகிஸ்தான் அணித் தலைவர்

30 November, 1999, Tue 0:00   |  views: 934

 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் வலுவான இந்தியா அணியை திட்டமிட்டு வீழ்த்துவோம் என பாகிஸ்தான் அணியின் தலைவர் சப்ராஸ் அஹமட் தெரிவித்துள்ளார்.

 
டோன்டன் மைதானத்தில் நேற்று(புதன் கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தான் அணியும், அவுஸ்ரேலியா அணியும் மோதின.
 
இப்போட்டியில் 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. இந்த தோல்விக் குறித்து சப்ராஸ் அஹமட் கருத்து தெரிவிக்கையில்,
 
‘களத்தடுப்பில் நாங்கள் சிறப்பாக செயற்படவில்லை. அவுஸ்ரேலியா மற்றும் இந்தியா போன்ற பலமிக்க அணிகளை நாங்கள் வெற்றி கொள்ள வேண்டும் என்றால் அனைத்து பிரிவுகளிலும் நாங்கள் முன்னேற வேண்டும். நிச்சயம் களத்தடுப்பில் எமக்கு இன்னும் முன்னேற்றம் தேவை என்று நினைக்கிறேன். எமது களத்தடுப்பு மிகவும் மோசமானதாக இருந்தது. நாங்கள் மீண்டும் ஒன்றிணைந்து இந்தியாவுடனான போட்டிக்கு கடினமாக உழைக்க வேண்டும்.
 
நாங்கள் அவுஸ்ரேலியாவை விட நிறைய தவறுகளைச் செய்துவிட்டோம். முதலில் நாணய சுழற்சியில் வென்றது எமக்கு சாதகமாக இருந்தாலும், எமது பந்துவீச்சாளர்கள் முதல் 30 ஓவர்களில் சிறப்பாக பந்துவீசவில்லை. எனினும், மொஹமட் ஆமிர் சிறப்பாக பந்து வீசியிருந்தார்.
 
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய போது நாங்கள் ஓரளவு சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றுக் கொண்டாலும், 15 பந்துகளில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தமை போட்டியில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதேபோல, பாபர் அசாம் மற்றும் மொஹமட் ஹபிஸ் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடியிருந்தார்.
 
அத்துடன், இறுதி கட்டத்தில் வஹாப் ரியாஸ் மற்றும் ஹசன் அலி ஆகிய இருவரும் அணியை வெற்றிக்கு நோக்கி அழைத்துச் சென்றனர். எனினும், சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்ததால் தோல்வியைத் தழுவினோம்.
 
நாங்கள் எங்கள் தவறுகளிலிருந்து உடனடியாக வெளியே வரவேண்டும். அடுத்த போட்டியில் மிகவும் பலமான இந்தியாவை நாங்கள் சந்திக்கவுள்ளோம். இந்தியா வலுவான அணி என்பதால் நாங்கள் எங்கள் செயல்திறனை மதிப்பிடுவோம். பின்னர் நாங்கள் திட்டமிடுவோம்’ என கூறினார்.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்