Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஆங்கில வகுப்புக்கள்

வீடு வாடகைக்கு

Saint-Ouen-l’Aumôneல் F1 – 15m2 வீடு வாடகைக்கு..
மாத வாடகை :490€
click to call 06 17 86 85 87

வீடு விற்பனைக்கு

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

காணி விற்பனைக்கு

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.
click to call 07 69 21 85 73

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
27
வியாழக்கிழமை
ஜூன்
துர்முகி 2047
திதி: பஞ்சமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

மருத்துவமனையின் அலட்சியம்! தந்தை மரணம்! 9 ஆண்டுகளின் பின் மகளின் அதிரடி நடவடிக்கை

13 June, 2019, Thu 12:22   |  views: 1104

ஜெசிக்கா ஆலன் என்னும் 20 வயதான மாணவி தனது தந்தையின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடி வருகின்றார்.
 
மன்செஸ்ரர், ரொச்டேல் நகரில் வசித்த ஆலன் போர்ட்டர் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 03 ஆம் திகதி பரி- பெயர் பீல்ட் மருத்துவமனையில் (Bury – Fairfield General Hospital) மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார்.
 
இதயநோய் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பினாலேயே அவர் உயிரிழந்தார் என்று மரண விசாரணையை மேற்கொண்ட மருத்துவர் காலித் அஹமட் (Dr Khalid Ahmed) தெரிவித்திருந்தார்.
 
எனினும் ஆலன் போர்ட்டருக்கு தொண்டை வலி ஏற்பட்டு உணவு எதனையும் விழுங்கமுடியாமல் இருந்ததனால் சிகிச்சை பெறவே மருத்துவனைக்குச் சென்றார். அவருக்கு பரசிற்றமோல் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
 
வீட்டுக்குச் சென்ற ஆலன் போர்ட்டர் 7 மணித்தியாலங்களின் பின்னர் சுவாசிக்கப் பெரும்சிரமப்பட்டு மயங்கி விழுந்துள்ளார். குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தபின்னர் இரவு 9.30 அளவில் அவர் உயிரிழந்து விட்டார் என்று மருத்துவர்களால் கூறப்பட்டுள்ளது.
 
உயிரிழந்தபோது ஆலன் போர்ட்டரின் வயது 32. இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவர் இரண்டாவது மனைவி மூலம் 3வது குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையிலேயே உயிரிழந்தார்.
 
இருந்தபோதிலும் ஆலன் போர்ட்டர் மாரடைப்புக் காரணமாகவே உயிரிழந்தார் என்பதனை அவரது குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை.
 
தந்தை உயிரிழந்தபோது ஜெசிக்காவின் வயது 11. ஜெசிக்காவின் தம்பியின் வயது 9.
 
தந்தையின் உயிரிழப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஜெசிக்கா தனது 18 வயதானபோது சட்டக்கல்வியைக் பட்டப்படிப்புக்காகத் தேர்ந்தெடுத்தார்.
 
இதன்பின்னர் தனது தந்தையின் மரணத்துக்கான உண்மைக்  காரணத்தைக் கண்டறிய விரும்பி தானாகவே ஒரு விசாரணையை ஆரம்பித்தார்.
 
2017 ஆம் ஆண்டு ஜெசிக்காவின் முயற்சியினால் ஆலன் போர்ட்டரின் மரணவிசாரணை மீண்டும் தொடங்கப்பட்டது.
 
2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மருத்துவர் காலித் அஹமட் மருத்துவமனையினால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
 
2019 ஆண்டு மே 31 ஆம் திகதி மரணவிசாரணை அதிகாரி ஜொவான் கியெர்ஸ்லியின் மரண விசாரணை அறிக்கை வெளியானது. அதில் இயற்கையாக ஏற்படும் தொற்றுநோய் காரணமாகவே ஆலன் போர்ட்டர் இறந்தார் என்றும் அவருக்கு சரியான மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட்டிருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
இதனைத் தொடர்ந்து உயிரிழந்த ஆலன் போர்ட்டரின் குடும்பத்தினரிடம் மருத்துவமனை நிர்வாகம் மன்னிப்புக்கோரியுள்ளது.
 
தனது தந்தை குறித்துக் கூறுகின்ற ஜெசிக்கா; அப்பா தனது பிள்ளைகள் மீது மிகுந்த அன்பு காட்டியவர். சிறுவயதில் அவரது இழப்பு தாங்கமுடியாத வலியை ஏற்படுத்தியது என்று கூறினார்.
 
மேலும் இப்போது வந்துள்ள மரணவிசாரணை அறிக்கையின் மூலம் தந்தை இல்லாத சூழலில் தனது வாழ்க்கையில் மாற்றம் ஏற்படப்போவதில்லை என்றும் எனினும் தான் மேற்கொண்ட போராட்டம் மூலம் மேலும் பலர் பாதுகாப்படுவர் என்றும் தெரிவித்தார்.
 
இதேவேளை ஆலன் போர்ட்டர் மரணம் குறித்த மரணவிசாரணை வழக்கு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
பரிஸ் ஈழநிலா
Live Music Group
Tel.: 06 20 31 24 90
உங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26