Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

SHANU MULTISERVICE

Entrepôt வாடகைக்கு

காசாளர் தேவை

வேலையாள்த் தேவை

93இல் பொருட்கள் விநியோகம் செய்ய சாரதி தேவை
(Chauffeur /livreur avec permis B)
click to call 07 51 14 77 78

வேலையாள்த் தேவை

Drancyஇல் உள்ள பிரெஞ்சு உணவகத்திற்கு (plongeur polyvalent ) தேவை. பிரெஞ்சு அல்லது ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளவும்.
click to call 07 61 54 46 06

வேலையாள்த் தேவை

இணைய சேவை

அழகுக் கலை நிபுணர் தேவை

ஓம் சக்தி ஜோதிட நிலையம்

அழகுக் கலை நிபுணர் தேவை

நடனப் பயிற்சி பள்ளி

Anne Abi Auto பயிற்சி நிலையம்

பிரெஞ்சு/ஆங்கில வகுப்பு

புதிய வகுப்புகள்

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

Bail 3/6/9 விற்பனைக்கு

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
11
திங்கட்கிழமை
நவம்பர்
துர்முகி 2047
திதி: நவமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

உலகக் கிண்ணக்கிரிக்கெட் தொடருக்கு ஆபத்தாக மாறிய கிரிக்கெட்!!

12 June, 2019, Wed 11:28   |  views: 1115

சீரற்ற காலநிலையால் மோசமாக பாதிக்கப்பட்ட உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடராக நடப்புத் தொடர் பதிவாகியுள்ளது.

 
இதுவரை நடைபெற்ற 16 போட்டிகளில் மூன்று போட்டி முற்றாக மழையால் கழுவப்பட்டுள்ளது. இதனால் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் பாதிப்புக்குள்ளாகி வருவதால் சில அணிகள் நெருக்குடிக்குள்ளாகும் நிலை தோன்றியுள்ளது.
 
சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) நடத்தும் மிகவும் முக்கியமான தொடரில் மழையால் போட்டி பாதிக்கப்படுவது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.
 
மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கடந்த மாதம் 30ஆம் திகதி தொடங்கியது.
 
கடந்த 7 ஆம் திகதி பாகிஸ்தான் – இலங்கை அணிகள் பிரிஸ்டோல் மைதானத்தில் மோத வேண்டிய ஆட்டம் ஒரு பந்துகூட வீசப்படாமல் மழையால் ரத்து செய்யப்பட்டது.
 
தென்னாபிரிக்கா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் சவுத்தாம்ப்டனில் நேற்று முன்தினம் மோதிய ஆட்டம் 8 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது.
 
நேற்று பிரிஸ்டோலில் மீண்டும் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோத வேண்டிய போட்டியும், ஒரு பந்துகூட வீசப்படாமல் சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்டது.
 
மழையால் போட்டி கைவிடப்படும் போது இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படுகிறது. முன்னணி அணிகளுக்கும் இந்த நடைமுறை பாதிப்பை ஏற்படுத்தும்.
 
தென்னாபிரிக்க அணி ஏற்கனவே 3 போட்டிகளில் தோற்றுவிட்டது. இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்று 2 புள்ளியை பெறும் ஆர்வத்தில் அவ்வணி இருந்தது. ஆனால், மழையால் ஒரு புள்ளி மட்டுமே கிடைத்தது. இது அந்த அணியை பாதித்து இருந்தது.
 
இதேபோல் பலவீனமான தென்னாபிரிக்காவை வீழ்த்தி 2-வது வெற்றி பெறும் வேட்கையில் மேற்கிந்திய தீவுகள் இருந்தது. ஆனால், ஒரு புள்ளி மட்டுமே கிடைத்ததால் அந்த அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
 
இலங்கை அணியைப் பொறுத்தவரையில் இறுதி இரண்டு ஆட்டங்களும் மழையால் கைவிடப்பட்டு இரண்டு புள்ளிகள் கிடைத்துள்ளன.
 
இலங்கை அணி சந்தித்திருக்க வேண்டிய பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள், ஏறக்குறைய சமபலம் வாய்ந்தவை என்பதால், இவற்றுள் வெற்றிபெறும் அணியைக் கணிப்பது கடினம்.
 
இதனால், புள்ளிகள் சமமாக பங்கிடப்பட்டதால் ஏதோவோர் அணிக்கு இலாபமும், இன்னுமோர் அணிக்கு நட்டமும் கிடைத்திருக்கின்றது.
 
இதற்கிடையே இங்கிலாந்தில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மேலும் சில போட்டிகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
 
அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகள் இன்று சவுத்தாம்ப்டனில் மோத உள்ள போட்டியும் மழையால் பாதிக்கப்படலாம் என எதிர்வுகூறப்படுகிறது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் நாளை நொட்டிங்காமில் மோதும் போட்டியும் மழையால் பாதிக்கப்பட 70 சதவீத வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
இங்கிலாந்தின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
 
உலகக் கிண்ணத் தொடர்களைப் பொறுத்தவரை, அதிக முடிவற்ற போட்டிகள் இடம்பெற்றுள்ள முதல் சந்தர்ப்பமாக நடப்பு உலகக் கிண்ணத் தொடர் அமைந்துள்ளது. அத்துடன் நாணய சுழற்சி இன்றி அதிக போட்டிகள் கைவிடப்பட்ட சந்தர்ப்பமாகவும் இந்த உலகக் கிண்ண தொடர் அமைந்துள்ளது.
 
இதற்கு முன்னர் நடைபெற்ற 11 உலகக் கிண்ணத் தொடர்களில் 2 போட்டிகள் மாத்திரமே நாணய சுழற்சியின்றி கைவிடப்பட்டிருந்த நிலையில், இந்த உலகக் கிண்ணத்தில் இதுவரையில் மாத்திரம் இரண்டு போட்டிகள் நாணய சுழற்சியின்றி கைவிடப்பட்டுள்ளன. அதன்படி, அதிக போட்டிகள் நாணய சுழற்சியின்றி கைவிடப்பட்ட உலகக் கிண்ணமாக இந்த உலகக் கிண்ணம் பதிவாகியுள்ளது.
 
மேலும், இதற்கு முன்னர் நடைபெற்ற உலகக் கிண்ணங்களில் 1979ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி நாணய சுழற்சியின்றி கைவிடப்பட்டிருந்ததுடன், 2015ம் ஆண்டு அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி நாணய சுழற்சி இன்றி கைவிடப்பட்டிருந்தது.
 
இதேவேளை, ஒட்டுமொத்த உலகக் கிண்ணங்களை பொருத்தவரை அதிக கைவிடப்பட்ட போட்டிகளை சந்தித்த அணியாக இலங்கை அணி பதிவாகியுள்ளது. இவ்வருடத்தில் இரண்டு கைவிடப்பட்ட போட்டிகளை சந்தித்த இலங்கை அணி, 1979ம் ஆண்டு ஒரு போட்டியை சந்தித்திருந்தது.
 
இலங்கை அணி இதற்கு முன்பதாக போட்டியில் கலந்து கொள்ளாமலேயே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சந்தர்ப்பமும் உலகக் கிண்ணத் தொடரில் நடந்திருக்கின்றது.
 
1996 ஆம் ஆண்டு இலங்கை, இந்திய, பாகிஸ்தான் நாடுகளில் இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரின் போது, இலங்கையில் இடம்பெற்ற இரண்டு போட்டிகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக அவுஸ்ரேலிய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி கலந்து கொள்ளவில்லை.
 
இதனால், இலங்கை அணி அவ்விரு போட்டிகளிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும், இறுதிப்போட்டியில் அவுஸ்ரேலிய அணியைச் சந்தித்து வெற்றி பெற்ற இலங்கையணி, சம்பியனாக முடி சூடியிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


SHAMROCK EDUCATION CENTRE
Tel. : 06 08 02 68 21 / 01 45 48 82 40
shamrock-education-centre-paris14
புதிய வகுப்புகள்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
SHANU MULTISERVICE
Tel.: 07 55 00 03 63 / 07 53 28 87 64
shanu-multiservice-bondy-93140
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Urgent Cuisinier indien

Paristamil Annonce
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26