Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
நீண்ட நாள் இளமைக்கும், இதய ஆரோக்கியத்திற்குமான சிறந்த உணவுகள்
3 June, 2013, Mon 15:48 GMT+1  |  views: 1513

 நீண்ட நாள் இளமைக்கும், இதய ஆரோக்கியத்திற்கும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த ஊடச்சத்து உணவுகள் சிறந்தது.ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் என்பது ஒரு வகை கொழுப்பு. கொழுப்பு என்றதும் எப்படி இதனை சாப்பிடக்கூடும் என்று கேட்கலாம். பொதுவாக கொழுப்புக்களில் இரண்டு வகைகள் உள்ளன. அவற்றில் கெட்ட கொழுப்பு மற்றும் நல்ல கொழுப்பு.

 
கெட்ட கொழுப்பானது இதயத் தமனிகளில் தங்கிவிடும். ஆனால் நல்ல கொழுப்பானது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். அந்த வகையில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் ஒரு கொழுப்பாகும்.
 
எப்படியெனில் இவை, தமனிகளில் தங்கியிருக்கும் கெட்ட கொழுப்புக்களை கரைத்து, இதயத்திற்கு செல்லும் இரத்த குழாயை மென்மையாக எந்த ஒரு இடையூறு ஏற்படாத வகையில் பாதுகாக்கும்.
 
எனவே தான், ஆரோக்கியத்தைப் பற்றிய பல செய்திகளில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்று கூறுகின்றனர்.
 
மேலும் இந்த ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த உணவுகள் இதயத்திற்கு மட்டுமின்றி, முதுமையைத் தள்ளி போடுதல் மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
 
பெரும்பாலும், இந்த சத்து மீன்களில் மிகவும் அதிகமாக இருக்கும். இருப்பினும், சைவ உணவாளர்கள் எப்படி இதனை சாப்பிடுவார்கள் என்பதால், சைவம் மற்றும் அசைவ உணவாளர்களுக்கு ஏற்றவாறு இந்த சத்து நிறைந்த சில உணவுகளை பட்டியலிட்டுள்ளோம்.
 
மீன்
 
பொதுவாக அனைத்து வகையான மீன்களிலும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கும். ஆனால் சால்மன் மற்றும் சூரை மீனில், இந்த சத்து அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.
 
ஆளி விதை
 
சைவ உணவாளர்களுக்கு ஆளி விதை சரியான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த உணவாக இருக்கும். மேலும் இதில் இதய ஆரோக்கியத்திற்கு தேவையான EPA மற்றம் DHA என்னும் ஃபேட்டி ஆசிட்டுகளும் உள்ளன.
 
ஆலிவ் ஆயில்
 
ஆலிவ் ஆயிலில் அதிகமான அளவில் நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது. இருப்பினும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், விர்ஜின் அல்லது பதப்படுத்தபடாத ஆலிவ் ஆயிலில் தான் நல்ல அளவில் உள்ளது.
 
வால்நட்
 
வால்நட்டில் இரண்டு வகையான முக்கிய சத்துக்கள் வளமாக உள்ளன. அவை வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட். எனவே இதனை சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, சருமத்தில் விரைவில் தோன்றும் முதுமைத் தன்மையும் தள்ளிப் போகும்.
 
முட்டை
 
முட்டையிலும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது. முட்டையைப் பற்றிய ஒரு கட்டுக்கதையில் முட்டை இதயத்திற்கு ஆரோக்கியமானது அல்ல என்று சொல்லப்படுகிறது. ஆனால், பெரும்பாலான நல்ல கொலஸ்ட்ரால் முட்டையில் உள்ளது. எனவே இது இதயத்திற்கு நல்ல ஒரு உணவே.
 
ஆட்டு இறைச்சி
 
புற்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. எனவே புற்களை அதிகம் சாப்பிடும் ஆட்டு இறைச்சியை சாப்பிட்டால், அதன் மூலம் உடலுக்கு வேண்டிய ஃபேட்டி ஆசிட்டுகளை பெறலாம்.
 
கனோலா ஆயில்
 
ரேப்சீடு எண்ணெயை பதப்படுத்தப்பட்டு கிடைப்பது தான் கனோலா ஆயில். இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் எண்ணெய்களில் முக்கியமானது. ஏனெனில் இதில் நல்ல கொலஸ்ட்ரால் வளமாக உள்ளது.
 
கடல் உணவுகள்
 
கடல் உணவுகளான இறால், நண்டு, கடல் சிப்பி போன்றவற்றிலும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இதனை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
 
அவகேடோ
 
அவகேடோவில் நிறைய உடல்நல நன்மைகள் நிறைந்துள்ளன. ஆகவே இதனை சாப்பிட்டால், இதன் ஒரு பழத்தில் மட்டும் 250 மில்லிகிராம் நல்ல கொலஸ்ட்ராலை பெறலாம்.
 
பூசணிக்காய் விதைகள்
 
ஆளி விதைக்கு அடுத்தப்படியாக நல்ல அளவில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருப்பது, பூசணிக்காய விதைகளில் தான். 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ரெக்டிஃபையர் (Rectifier)

ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சர்க்கரை நோயை வென்றிடுவோம்...
சர்க்கரை நோயினால் பாதிக்கப்படும் நோயாளிகள் அதிகரித்து வருவதால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உலக நீரழிவு கூட்டமைப்பும், உலக
14 November, 2018, Wed 4:18 | views: 479 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய இயற்கை வழிமுறைகள்
வெயிலின் தாக்கம் காரணமாகச் முகச்சருமம் அதிகளவு பாதிக்கப்படும் இதனால், எப்போதும் களைப்பான தோற்றமாக இருக்கும். இதற்கு காரணம் சருமத்
13 November, 2018, Tue 8:18 | views: 353 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முகப்பரு என்றால் என்ன? ஏன் ஏற்படுகிறது?
தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக ஏற்படும் கொப்பளங்கள் மற்றும் தோல் முடிச்சுகள் முகப்பரு எனப்படுகிறது.
8 November, 2018, Thu 11:30 | views: 466 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கூந்தல் உதிர்வுக்கான காரணமும் - செய்யக்கூடாதவையும்
தலைமுடிதான் ஒரு மனிதனின் ஆளுமைத் தீர்மானிக்கிறது. ஆனால், முடி கொட்டி அதுவே பலரை தாழ்வு மனப்பான்மையில் தள்ளி விடுகிறது. முடி வளர்ச
2 November, 2018, Fri 10:00 | views: 947 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எண்ணெய் வழியும் சருமத்திற்கு...
* எண்ணெய்த் தன்மையான சருமத்தை உடையவர்கள் முகத்தில் மோரை பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவி வந்தால் எண்ணெய் தன்மை குறையும். * சோ
30 October, 2018, Tue 11:02 | views: 507 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS