27 March, 2013, Wed 12:19 | views: 7693
இலங்கை வீரர்கள் சென்னையில் ஐபிஎல் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட்டது நாடெங்கிலும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.
வட இந்திய ஊடகங்கள் தமிழர்கள் மீது பழி சொல்லும் வேலையை கச்சிதமாக செய்து வருகின்றன. NDTV , முத்தையா முரளிதரனை பேட்டி கண்டு வெளியிட்டுள்ளது.
இலங்கையில் உள்ள தமிழ் கிரிக்கெட் வீரனே அந்த நாடு சுபிட்சமாக இருக்கிறது என்று கூறுகிறானே? இங்கே மாணவர்கள் ஏன் தவறாக போராடுகிறார்கள்.... என்று திசைதிருப்ப பார்க்கும் சகுனி வேலை தான் இது.
முத்தையா முரளீதரன் அளித்துள்ள பேட்டியின் தமிழாக்கம்.
"ஒரு தமிழனாக இருபது வருடங்கள் நான் சிறிலங்காவிற்கு விளையாடினேன். எனக்கு எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. இப்பொழுது அங்கே போர் முடிந்துவிட்டது. மக்கள் மிகவும் நிம்மதியுடன் சந்தோஷமாக வாழ்கின்றனர்."
இந்த கருத்து தமிழக மாணவர்களிடையே கோபத்தை உண்டு பண்ணியுள்ளது. முத்தையா முரளிதரனின் மனைவிக்கு சொந்தமான மலர் மருத்துவமனை தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் காவல்துறை பாதுகாப்பு அங்கு பலப்படுத்தப் பட்டு உள்ளது.
இலங்கையில் எந்த அளவு மனித உரிமைகள் போற்றப் படுகிறது என்பது உலகறிந்த விஷயம். முரளிதரன் மட்டுமல்ல, எந்த தமிழராவது இலங்கை அரசை எதிர்த்து கருத்து தெரிவித்து விட்டால் ஒரு வெள்ளை வேன் வந்து அவர்கள் வீட்டு வாசலில் நிற்கும். விசாரணை என்ற பெயரில் அவர்கள் அழைத்து செல்லப்படுவார்கள். அப்புறம் அவர்கள் காணாமல் போய் விடுவார்கள்.
அப்படி காணாமல் போன தமிழர்கள் ஏராளம்.
அரசின் அக்கிரமங்களை தட்டி கேட்டார் என்பதற்காக 'சண்டே லீடர்' ஆசிரியர்/ நிறுவுனர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்த அரசல்லவா ராஜபக்சே அரசு.
இன்றும் அரசுக்கு எதிராக எழுதும் பத்திரிக்கையாளர்கள் சுடப்படுகிரார்களே ஏன்?
ஒளிபரப்பிற்கு இலங்கை அரசு இடையூறு செய்ததால் இலங்கையில் தனது தமிழ் -ஆங்கில ஒளிபரப்புகளை பி.பி.சி நிறுத்தி உள்ளதாக பி.பி.சி நிறுவனம் சற்றுமுன் அறிவித்து உள்ளது.
![]() | அடுத்த ![]() |
![]() |
![]() |
|
![]() 157 முறை தோல்வி; 158ல் வெற்றி!18 January, 2021, Mon 11:30 | views: 453
![]() ஏரியில் படர்ந்திருக்கும் அதிசய மரம்!17 January, 2021, Sun 15:14 | views: 598
![]() இல்லுமினாட்டிகளையே மிஞ்சும் QAnon!13 January, 2021, Wed 11:14 | views: 670
![]() பெண்களின் மூளை தொடர்பில் ஆய்வில் வெளிவந்த தகவல்!4 January, 2021, Mon 17:05 | views: 1199
![]() உலகின் மிகப்பெரிய பனிப்பாளத்திற்கு அருகில் எடுக்கப்பட்ட புகைப்படம்!28 December, 2020, Mon 14:21 | views: 1490
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |