Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Fixed
ஜெய் அனுமான் ஜோதிட நிலையம்
28022019
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
19032019
3 வேலையாள்த் தேவை
180319
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
அழகுக் கலைநிபுனர் தேவை
05032019
Domicile தேவை
02032019
ஊழியர்கள் தேவை
02032018
இயற்கை மூலிகை வைத்தியம்
24122018
2 வேலையாள்த் தேவை
210219
வேலையாள்த் தேவை
19022019
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
ஆங்கில வகுப்புக்கள்
180119
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் செயன் நதியில் மீண்டும் கடல் நீர்க்குமிழிகள்!!
France Tamilnews
மஞ்சள் மேலாடைப் போராட்டத்தில் களமிறங்கும் பயங்கரவாதத் தடைப்பிரிவு இராணுவம்!!
France Tamilnews
பரிசிற்குள் மட்டும் வீடின்றி வீதியில் வசிப்போர் தொகை 3.641
France Tamilnews
இன்று இரவுடன் பெயர் மாறும் ORLY விமான நிலையம்!
France Tamilnews
செல்பேசிக்காகக் கத்திக்குத்து - படுகொலை!!
France Tamilnews
இலங்கைக்கு எதிரான நான்காவது போட்டியிலும் தென் ஆபிரிக்கா வெற்றி!
14 March, 2019, Thu 7:13 GMT+1  |  views: 327
இலங்கைக்கு எதிரான நான்காவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தென் ஆபிரிக்கா 6 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது.
 
அதன்படி ​5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் 4 – 0 என தென் ஆபிரிக்கா முன்னிலை வகிக்கிறது.
 
போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென் ஆபிரிக்க அணித்தலைவர் பெப் டு பிலெசி களத்தடுப்பை தெரிவுசெய்தார்.
 
உபுல் தரங்க, பிரியமால் பெரேரா ஆகியோர் இலங்கை அணியில் இணைக்கப்பட்டு நிரோஷன் திக்வெல்ல, உபாதைக்குள்ளான குசல் ஜனித் பெரேரா ஆகியோர் நீக்கப்பட்டனர்.
 
இளம் வீரரான பியமால் பெரேரா சர்வதேச ஒருநாள் அறிமுகம் பெற்றார்.
 
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை எதிர்நோக்கி விக்கெட்களை இழந்தது.
 
9ஆம் விக்கெட்டுக்காக களமிறங்கிய இசுரு உதான சிறப்பாக துடுப்பெடுத்தாடி தனது முதல் அரைச்சதத்தை அடைந்தார்.
 
57 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 சிக்ஸர்கள், 7 பௌண்டரிகளுடன் 78 ஓட்டங்களைப் பெற்றார்.
 
இலங்கை அணி 39.2 ஓவர்களில் 189 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
 
பந்துவீச்சில் நோர்ட்ஜி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
 
தேசியமட்ட கிரிக்கெட் போட்டிகளில் அதிகபட்ச ஆற்றல்களை வெளிப்படுத்தி தென் ஆபிரிக்க விஜயத்தில் இணைந்த ஏஞ்சலோ பெரேராவுக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பளிக்கப்படவில்லை.
 
இரண்டு இரட்டை சதங்களை விளாசி தென் ஆபிரிக்க விஜயத்தில் இணைந்த அவருக்கு ஒருநாள் தொடரில் 4 போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்காதது வியப்புக்குறிய விடயமாகும்.
 
கிரிக்கெட் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் ஏஞ்சலோ பெரேராவின் விடயத்தில் இவ்வாறு செயற்படுவதன் மூலம் விளையாட்டுத்துறை அமைச்சர் ஏதேனும் நடவடிக்கை எடுப்பார் என நினைத்தால் அது ஒரு போதும் நடக்காது என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
 
முதல்தர கிரிக்கெட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இரட்டை சதமடித்த முதல் இலங்கையராகவும் உலகின் இரண்டாமவராகவும் சாதனை ஏட்டில் பதிவான ஏஞ்சலோ பெரேராவை 4 போட்டிகள் முடியும் வரை அதிகாரிகள் மறந்ததேன்?
 
வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 190 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய தென் ஆபிரிக்க அணி 21 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.
 
எனினும், குவின்டன் டி கொக் 51 ஓட்டங்களையும் அணித்தலைவர் பெப் டு பிலெசி 43 ஓட்டங்களையும் பெற்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
 
ஜே பி டுமினி 31 ஓட்டங்களையும் டேவிட் மிலர் 25 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொள்ள தென் ஆபிரிக்க அணி 32.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு வெற்றி அடைந்தது.
  முன்அடுத்த   
ayurveda-muligai-vaidhiya-salai
computer-class-gare-de-bondy
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக நீளமான நதி  எது?
   நைல் நதி (6695கி.மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சுப்பர் ஓவரில் போராடித் தோற்ற இலங்கை!
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதல் இருபதுக்கு இருபது போட்டியில் தென்னாபிரிக்க அணி சுப்பர் ஓவரில் 10 ஓட்டங்களினா
20 March, 2019, Wed 8:31 | views: 387 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானை புறக்கணிக்கலாம்!
உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணியைப் புறக்கணித்து 2 புள்ளிகளை இழப்பதில் தவறில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீ
19 March, 2019, Tue 4:42 | views: 287 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவுஸ்திரேலிய அணியினருடன் இணைந்த வோர்னர் - ஸ்மித்!
தென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் பந்தை சேதப்படுத்துவதற்கான முயற்சிக்காக ஒரு வருட தணடனையை அனுபவித்த அவுஸ்திரேலியாவின் டேவிட் வ
18 March, 2019, Mon 6:10 | views: 459 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடரை முழுமையாக கைப்பற்றியது தென்னாபிரிக்கா!
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், தென்னாபிரிக்க அணி 41
17 March, 2019, Sun 10:40 | views: 250 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐபிஎல் டிக்கெட் வாங்க விடிய விடிய காத்திருந்த ரசிகர்கள்!
2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மார்ச் 23 ஆம் திகதி தொடங்கவிருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் வீரர்கள் தீவி
17 March, 2019, Sun 7:20 | views: 258 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS