விளம்பரத் தொடர்புக்கு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

ANNE ABI AUTO

வேலை வாய்ப்பு

கணித, விஞ்ஞான, ஆங்கில வகுப்புகள்

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

T RÉNOVATION

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வீடு வாடகைக்கு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வீடு விற்பனைக்கு

வீடு வாடகைக்கு

வேலை வாய்ப்பு

VBOX சலுகை விலை

பொதிகை சேவை

இணைய சேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
Numerology
Rasi palan
Paristamil thirumana porutham

இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போர் தொடுக்கும் பிரான்ஸ்!!! (தாக்குதல் காணொளி)

14 January, 2013, Mon 3:18   |  views: 6977

நேற்று ஞாயிற்றுக் கிழமை பிரான்சின் விமானப் படையினர் முதன் முதலாக நேரடி வான் தாக்குதலை மாலியின் வடக்குப் பகுதியிலுள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகளன் நிலைகள் மேல் நடாத்தியுள்ளனர். ஜிகாதிகளின் கடடுப்பாட்டிலுள்ள  Gao மற்றும் Kidal நகரங்கள் மீது பிரெஞ்சு வான்படை தனித்துத் தாக்குதலை நடாத்தியுள்ளது. 
 
இவற்றுக்கெல்லாம் மூல காரணமாக கிட்டத்தட்ட நாற்பத்தியெட்டு மணித்தியாலங்களின் முன்னர் பிரான்ஸ் மாலியில் மற்றைய நாடுகளுடனான தீவரவாதிகளுக்கெதிரான கூட்டுப் படைத் தாக்ககுதல்களின் போது பிரான்ஸ் வான்படையின் உலங்குவானூர்தி ஓட்டி ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒரு பிரெஞ்சு இராணுவ வீரர் காணாமற் போயோ அல்லது கொல்லப்பட்டோ உள்ளார். இது இஸ்லாமியத் தீவரவாதிகளின் ஆயுதபலத்தை நிர்மூலமாக்க வேண்டிய கட்டாயத்தை பிரான்சிற்கு வழங்கியுள்ளது. 
 
 
 
"பயங்கரவாதிகள் முடக்கப்பட்டுள்ளனர். இன்று அந்தச் செயல் முழுமையடைந்துள்ளது. நாம் இனி வடக்குப் பகுதியிலுள்ள அவர்களின் பின்தளங்களையும் அழிப்போம்." என பிரான்சின் வெளிவிவகார அமைச்சர் Laurent Fabius ஞாயிற்றுக்கிழமை வான்தாக்குதலின் பின்னர் தெரிவித்துள்ளார். அவரிடம் இத்தாக்குல்கள் எவ்வளவு காலம் நீடிக்கும் என நிருபர்கள் வினவியபோது அது வெறும் சில வாரங்களில் முடித்து வைக்கப்படும் என்று தெரிவித்தார். 
 
 
 
 
 
"நான்கு Rafale போர் விமானங்கள் பமாக்கோவிலிருந்து கிட்டத்தட்ட 1200 கிலோ மீற்றர்கள் தொலைவிலுள்ள GAO விலுள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகளின் முக்கியமான பயிற்சி முகாம்களையும் அவர்களது வழங்கல் சேமிப்புக் கிடங்குகளும் முற்றாகத் தாக்கியழிக்ப்பட்டுள்ளன" என்றும் அமைச்சர் கூறியுள்ளார். 
 

 

 

 
"பிரான்ஸ் போரிலிறங்கியுள்ளது. தனது நடட்பு நாடான மாலியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பிரான்ஸ் இறங்கியுள்ளது' என்று பிரான்சின் பாதுகாப்பமைச்சர் Jean-Yves Le Drian கூறினார். மாலியிலுள்ள தொடர்பாளர் ஒருவரின் கருத்துப்படி கிட்டத்தட்ட 10 பலமான தாக்குதல் நடாத்தப்பட்டது என்றும் அதன் மூலம் GAO விலுள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தளங்கள் முற்றாக அழிக்கப்ட்டுள்ளன என்றும் கூறியுள்ளார். மேலும் "பிரான்ஸ் நல்ல வேலையைச் செய்துள்ளது. இஸ்லாமியத் தீவிரவாதிகள் GAO வை விட்டு ஓடி விட்டனர். மிகுதியானவர்கள் சிலர் வீடுகளுக்குள் பதுங்கி உள்ளனர். இரவானதும் அவர்களும் தப்பி ஓடிவிவார்கள்' என்று GAO வின் பாராளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார். 
 
 
 
 
பிரான்சின் பாதுகாப்பமைச்சர் Jean-Yves Le Drian "பிரான்சின் போர் விமானங்கள் KIDAL இலிருந்து 50 கிலோமீற்றர் தொலைவிலுள்ள Aghabo விலும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இங்கு Ansar Dine (இஸ்லாத்தின் பாதுகாவலர்கள்) எனும் இஸ்லாமியத் தீவரவாதிகளின் முக்கிய தளம் இருந்தது. அது அழிக்ப்பட்டுள்ளது. Mauritanie க்கு அருகிலுள்ள Léré தளம் தாக்கப்பட்டது. மேலும் பமாக்கோவிலிருந்து 800 கிலோமீற்றர் தூரத்திலுள்ள Douentza வில் ஜிகாதிகளின் முகாம் ஒன்று குறிவைத்துத் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. தொடர் தாக்குதல்கள் நடந்தபடி உள்ளன. இப்பொழுதும் தாக்குதல் நடக்கின்றது. நாளையும் நடக்கும் அதனைத் தொடர்ந்தும் நடாத்தப்படும்' என்று தெரிவித்துள்ளார்.
 
 
 
 
 
 
 
Gao, Kidal மற்றும் சரித்திரப் புகழ் வாய்ந்த Tombouctou ஆகிய நகரங்கள் மாலியின் வடக்குப் புறமாக உள்ள பாலைவன நகரங்கள். அது கடந்த ஒன்பது மாதங்களாக இஸ்லாமியத் தீவரவாத அமைப்புகளான Ansar Dine, அல்கைதாவின் இஸ்லாமிய மக்ரெப் பிரிவு (Al-Qaïda au Maghreb islamique - Aqmi) மற்றும் மேற்கு ஆபிரிக்கத் தனிச்சிறப்பு மற்றும் ஜிகாத் அமைப்பு (Mouvement pour l'unicité et le jihad en Afrique de l'Ouest - Mujao) ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் பெரும் துன்பங்களுக்குள் சிக்கி உள்ளது. 
 
 
 
 
 
முக்கியமாக Tombouctou வில் கடந்த சில மாதங்களாகக் கல்லடி மூலம் மரணதண்டணை விதித்தலும் அவயவங்களை வெட்டி வீசுவதுமாகத் தீவிரவாதத்தை தீவிர இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்புக்கள் மேற்கொண்டதை அடுத்து அவ்விட வாழ் மக்கள் அங்கிருந்து பயந்தோட முயற்சிப்பதாகவும் பெரும் பீதியுடன் வாழ்வதாகவும் அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் முறைப்பாடு செய்திருந்தார். 
 
 
 
 
 
"அங்குள்ள தீவிரவாதிகள் நவீன வாகனங்களுடனும் நவீன தொலைத் தொடர்பு மற்றும் பலமான ஆயுதங்களுடனும் பெரும் பலத்துடனும் நாம் நினைத்தப் பார்க்காத அளவு பலத்துடனும் இருந்கின்றார்கள்" என பிரான்சின் ஜனாதிபதி பிரான்சுவா ஒல்லோந்திற்கு நெருக்கமான பகுதிகள் தெரிவித்திருந்தன.
 
 
 
 
 "Konna நகரத்தைக் கைப்பற்றிக் கொண்டு தெற்கு நோக்கி நகருவோம் என எச்சரித்த ஜிகாத் தீவிரவாதிகளின் நடவடிக்கைளையும் போக்குவரத்தையும் பிரான்சின் வான்தாக்குதல் முறியடித்துள்ளது. பிரான்ஸ் இராணுவம் இதன் மூலம் ஜிகாத் பயங்கரவாதத்திற்கு எதிரான தனது  நடவடிக்கையில் வான் தாக்குதல் மூலம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. பிரான்சின் இந்த நடவடிக்கை மாலியின் இராணுவம் தொடர்ந்து முன்னேறி மாலியின் முழுப் பிரதேசத்தையும் மீண்டும் அரச கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வழிவகுக்கும்"  என Jean-Yves Le Drian  தெரிவித்துள்ளார். 
 
மேலும் வெளிவிவகார அமைச்சர் Laurent Fabius "தொடர்ந்த பிரெஞ்சு வான்படையினரின் போர்விமானப் பறப்புகளுக்கு அல்ஜீரியா தனது வான்பரப்பபைப் பிரான்சிற்கு வழங்கியுள்ளது. இது தாக்குதல்களை இலகுவாக்குவதுடன் ஜ.நா பொதுச் செயலாளர் பான்கிமூனின் ஆதரவும் இத் தாக்குதல்களிற்குப் பலம் சேர்க்கின்றன. மேலும் இத் தாக்குதல்களுக்குப் பிரான்சிற்குப் பிரித்தானியாவும் டென்மார்க்கும் கடல்வழிப் போக்குவரத்தை வழங்க முன்வந்துள்ளன. அமெரிக்கா தனது தகவற் தொழில்நுட்ப வளத்தை பிரான்சிற்கு வழங்க முன்வந்தள்ளது. அத்தோடு ஆபிரிக்கத் துருப்புகள் இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கு எதிராகத் தனது நடவடிக்கையைத்  தொடர்ந்தபடி வடக்கு நோக்கி நகர்வதானால் அல்ஜீரியா தனது எல்லைகளை மூடினால் தான் அந்நடவடிக்கைள் பலனளிக்கும். " எனத் தெரிவித்துள்ளார். இதன் பூர்வாங்கமாக மாலியின் பிரதமர் Diango Cissoko அல்ஜீரியாவிற்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அத்தோடு ஐ.நாவின் துணையோடு கிழக்கு ஆபிரிக்கப் படைகளைப் பலப்படுத்தி Al-Qaïda வை அங்கிருந்து ஒழிப்பதற்கான ஆயத்த வேலைகளும் ஆரப்பிக்கப்ட்டுள்ளது. 
 
 
 
 
 
இதற்கெல்லாம் வழி திறப்பதற்றகாகவே பிரான்சின் Rafale போர்விமானங்கள் தமது வேலையை ஆரம்பித்துள்ளன. Rafale போர் விமானங்கள் தமது சக்கதியை ஏற்கனவே லிபியாவில் காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 
 

 

 

 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


NOUV TAC SYSTEMS
Tel. : 01 76 66 06 62
leroyal-bondy
விற்பனைப் பதிவு உபகரணங்கள்
T RÉNOVATION
Tel. : +33 7 66 44 41 46
t-renovation-france
சகல விதமான கட்டிட வேலைக்கு
LE ROYAL BONDY
Tel. : 09 73 24 84 11
leroyal-bondy
Bondyஇல் இந்திய உணவகம்
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி