Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தீர்வுகளிற்காகக் கூடிய மக்ரோனும் அமைச்சர்களும் தொழிற்சங்கங்களும் - எந்தத் தீர்வும் எட்டவில்லை - காணொளி!
France Tamilnews
பரசின் மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் போராளிகளுடன் ஹொலிவூட் நடிகர்கள்!!
France Tamilnews
காவற்துறையினரின் மோசமான வன்முறை - நாம் எதிர்பார்க்கவில்லை - காயப்பட்டவர்கள் வைத்தியசாலையில் வாக்குமூலம் - காணொளி
France Tamilnews
பிரதமர் - உள்துறைஅமைச்சர் - இணைந்த அறிக்கை - அதிகரித்துச் செல்லும் காயங்களும் கைதுகளும்!!
France Tamilnews
பரிசை உலுக்கிய இன்றைய கலவரம் - இடங்கள் குறிக்கப்பட்ட ஒரு படத்தொகுப்பு!!
France Tamilnews
உடல் எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள்
7 December, 2018, Fri 10:18 GMT+1  |  views: 684

 ‘ஏன் என்றே தெரியவில்லை. நான் எடை கூடிக்கொண்டே செல்கிறேன்’ என்று சிலர் சொல்வதுண்டு. சிலர் ஏதேனும் விபத்து காரணமாக சில காலம் நடமாட முடியாமல் படுக்கையில் இருக்கும் பொழுது எடை கூடுவது இயற்கைதான். இவர்களைக்கூட எடை கூடாத சத்துணவு எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவம் அறிவுறுத்தும். சிலர் அதிக மன உளைச்சல் காரணமாக முறையற்ற உணவினை உட்கொண்டு எடை கூடுவர். இதனையும் முறையான கவனம் செலுத்தி மன நலம் மூலமாக உடல் நலம் பெற வேண்டும்.

 
சில மருந்துகள் மற்றும் மருத்துவ காரணங்களாலும் எடை கூடலாம். காரணம் எதுவாயினும் அதிக எடை என்பது கீழ்கண்ட நோய்களின் அடித்தளம் ஆகிவிடும்.
 
 
• இதய நோய்கள்    • சர்க்கரை நோய் பிரிவு 2
• மூட்டு பிரச்சினை    • எலும்பு பிரச்சினை
• உயர் ரத்த அழுத்தம்    • சில வகை புற்று நோய்கள்
• மன உளைச்சல்    • பக்க வாதம்
 
• அதிக கொழுப்பு ஆகியவை அனைத்துமே பாதிப்பு ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு என்பதால்தான் உடல் கூடுதல் எடைக்கு செல்லாமல் இருக்க மிக அதிக கவனம் கொடுக்க வேண்டி உள்ளது.
 
• சரியாக தைராய்டு சுரப்பி வேலை செய்யாது தைராய்டு குறைபாடு இருப்பின் திடீரென அதிக எடை கூடலாம்.
 
• மிக அதிகமான கலோரிகளை உட்கொள்வது, அதாவது மிக அதிகமாக சாப்பிடுவது எடை கூடுதலை ஏற்படுத்தும்.
 
• பலர் தாகம் எடுக்கும் பொழுது அதனை பசி என நினைத்து உணவு உட்கொள்வர். ஆக உடலுக்கு தேவையான  அளவு நீர் கிடைக்காத பொழுது உடல் நீரினை தக்க வைத்துக் கொள்ள கடும் முயற்சி செய்யும். இதனால் நீர் தேங்கி உப்பிசம் ஏற்படும். எனவே முறையாக அளவாக நீர் குடிக்கும் வழக்கத்தினை பின்பற்றுங்கள்.
 
• நான் சரியாக உண்கிறேன். தேவையான அளவு தூங்குகிறேன். நன்கு உடற்பயிற்சி செய்கிறேன். இருப்பினும் அதிக எடை கூடுகின்றது என்பவர்களும் உண்டு. இவர்களுக்கு அதிக மன அழுத்தம், மன உளைச்சல் இருக்கலாம். இந்த பாதிப்பு உடையவர்களுக்கு கார்டிஸால் ஹார்மோன் அதிகம் சுரந்து அதன் மூலம் இன்சுலின் அளவு கூடி ரத்தத்தில் சர்க்கரை அளவினைக் குறைக்கலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் பொழுது பிஸ்கட், ஐஸ்கிரீம் என உண்ணத் தொடங்குவார்கள். இதனால் கண்டிப்பாய் எடை கூடும். இத்தகையோருக்கு மூச்சுப் பயிற்சி செய்வது, கிரீன் டீ எடுத்துக் கொள்வது போன்றவை பேருதவியாய் இருக்கும்.
 
 
 
• சிலருக்கு எதிலும் அதிக உப்பு தேவையாய் இருக்கும். சிலர் சிப்ஸ், ஊறுகாய் போன்ற அதிக உப்பு உள்ள உணவுகளை விடாது உண்பர். அதிக உப்பு, அதிக நீர் தேக்கத்தினை உடலில் உண்டாக்கும். இதன் விளைவு உடல் எடை கூடி இருக்கும். அதிக உப்பினை குறைத்தால் போதும். உப்பே இல்லாமல் இருப்பதும் பெரும் தவறு. ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். இங்கு குறிப்பிடப்படுவது சிப்ஸ், ஊறுகாய், அப்பளம் மற்றும் சாதத்தில் உப்பு போட்டு சமைப்பது இவற்றினைத் தவிருங்கள் என்பதுதான்.
 
• கருத்தடை மாத்திரைகளை தொடர்ந்து சில காலம் பயன்படுத்துவது எடை கூடுதலை ஏற்படுத்தும். இந்த மாத்திரைகள் ஹார்மோன் சம்பந்தப்பட்டவை என்பதால் அதிக பசியினைத் தூண்டும். நீரினை உடலில் தேக்கும். இதனால் உடல் எடை கூடும். குறைந்த ஹார்மோன் கொண்ட கருத்தடை மாத்திரைக்கும் மருத்துவத்தில் உள்ளன. கருத்தடை மாத்திரைகளை பெண்கள் மருத்துவ ஆலோசனை பெற்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.
 
* அதிக புரதம் கூடாது என்றாலும் அநேகர் தேவையான அளவு புரதமே எடுத்துக்கொள்வதில்லை என ஆய்வுகள் கூறுகின்றன. புரதம் உடலுக்கு இன்றியமையாத ஒரு சத்து. புரதம் இன்மை உடலின் செயல்திறனை குறைத்து விடும். உடல் உப்பியதுபோல் இருக்கும்.
 
* மனச்சோர்வு, கவலை இவை ஒருவரை செயல் இன்றி முடக்கிவிடும். இவர்கள் இவர்களை அறியாமலே அதிக உணவு உட்கொள்வர். இதனால் எடை கூடுதல் வெகு எளிதில் ஏற்படும். மனநலனை யோகா, மூச்சுப்பயிற்சி, நடைபயிற்சி  இவற்றின் மூலம் சரி செய்துகொள்ள வேண்டும். 
 
* ஆரோக்கியமான உணவினை உண்ணாமல் கொழுப்பு உணவு, ஆரோக்கியமற்ற கலோரி சத்து மிகுந்த உணவு போன்றவை எடையினை கூட்டிக்கொண்டே போகும். இவைகளை தவிர்த்து விகிதாசார ஆரோக்கிய உணவினை உண்பது உங்கள் எடையினைக் குறைக்கும்.
 
* மிக அதிக உடற்பயிற்சி செய்யாதீர்கள். அதுவும் உங்களை மிக அதிகமாக சாப்பிடத் தூண்டும். எதிலும் நிதான அளவுகோலே சிறந்தது.
 
* தேவையான அளவு அதாவது 8 மணிநேர ஆழ்ந்த தூக்கம் உடலை எடை கூடாமல் இருக்கச்செய்யும்.
 
மேற்கூறியவைகளை கடைபிடித்தால் உடல் எடை கூடாது இருப்பதோடு சிறந்த ஆரோக்கியத்துடன் இருக்கும். இருப்பினும் மருத்துவ காரணங்கள் ஏதேனும் இருக்கின்றதா என மருத்துவ ஆலோசனையும் பெற வேண்டும்.
 
அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே நதிகளே இல்லாத நாடு எது?
   சவுதிஅரேபியா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அத்திப்பழத்தை சருமத்திற்கு எப்படி பயன்படுத்தலாம்
பல பழங்களை நாம் சாப்பிட்டாலும், அத்தி பழத்தை சாப்பிடுவது போன்ற ஆரோக்கியம் எதிலும் கிடைக்காது. ஏனெனில், இதில் அந்த அளவிற்கு ஊட்டச்
6 December, 2018, Thu 9:33 | views: 306 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சருமம் வறட்சியை தடுக்கும் தேங்காய் எண்ணெய்
பனிக்காலம் தலைக்காட்ட ஆரம்பித்துவிட்டது. ஃபிரெஷ்ஷாக வெளியில் கிளம்பினாலும், கைகளிலும் கால்களிலும் வெள்ளைத்திட்டுக்கள் தெரியும். வ
5 December, 2018, Wed 13:28 | views: 413 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தேங்காய் பால் சருமத்திற்கு தரும் அழகு
முகத்தின் அழகை பல மடங்காக மாற்ற ஒரு எளிய வழி இருக்கிறது. அதுதான் தேங்காய் பால் அழகியல் குறிப்புகள். இனி இந்த பதிவில் எப்படி தேங்க
3 December, 2018, Mon 20:45 | views: 373 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும் தக்காளி சாறு
தயிர் மற்றும் தக்காளி சாறு இரண்டையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்து கழுவ, தழும்புகள் மறைந்து சருமம் பிரகாசமாக
2 December, 2018, Sun 6:13 | views: 374 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உங்கள் அழகை எடுத்துக்காட்டும் புருவம்
பெண்களின் முகத்திற்கு அழகு தருவதில் புருவங்களுக்கும் முக்கிய பங்குண்டு. சில பெண்களின் புருவங்கள் மிக அடர்த்தியாக இருக்கும். சிலரு
28 November, 2018, Wed 11:21 | views: 596 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
  Annonce
கடை BAIL விற்பனைக்கு
à négocier  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS