Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தீர்வுகளிற்காகக் கூடிய மக்ரோனும் அமைச்சர்களும் தொழிற்சங்கங்களும் - எந்தத் தீர்வும் எட்டவில்லை - காணொளி!
France Tamilnews
பரசின் மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் போராளிகளுடன் ஹொலிவூட் நடிகர்கள்!!
France Tamilnews
காவற்துறையினரின் மோசமான வன்முறை - நாம் எதிர்பார்க்கவில்லை - காயப்பட்டவர்கள் வைத்தியசாலையில் வாக்குமூலம் - காணொளி
France Tamilnews
பிரதமர் - உள்துறைஅமைச்சர் - இணைந்த அறிக்கை - அதிகரித்துச் செல்லும் காயங்களும் கைதுகளும்!!
France Tamilnews
பரிசை உலுக்கிய இன்றைய கலவரம் - இடங்கள் குறிக்கப்பட்ட ஒரு படத்தொகுப்பு!!
France Tamilnews
தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்ப
6 December, 2018, Thu 5:20 GMT+1  |  views: 225
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் அனேக இடங்களில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. சென்னையிலும் சில இடங்களில் நேற்று மழை பெய்தது. சென்னையை பொறுத்தமட்டில் கடந்த 2 தினங்களாக வித்தியாசமான பருவநிலை காணப்படுகிறது.
 

அதாவது காலையில் மழை பெய்வதும், பிற்பகலில் வெயில் சுட்டெரிப்பதும், இரவில் பனிப்பொழிவும் என 3 பருவ நிலைகள் நிலவுகிறது. இந்தநிலையில் இன்று (வியாழக்கிழமை) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குமரிக்கடல் முதல் தெற்கு ஆந்திர கடற்கரை வரை நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு திசை நோக்கி நகர்ந்து, தற்போது குமரிக்கடல் முதல் வடக்கு கேரளா பகுதி வரை நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் நாளை (இன்று) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். எனவே தெற்கு வங்கக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு 6-ந் தேதி மற்றும் 7-ந் தேதி மீனவர்கள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை மற்றும் அதன் புறநகரை பொறுத்தவரையில் நகரின் சில இடங்களில் ஓரிரு முறை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சோழவரத்தில் 8 செ.மீ. மழை

நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி பதிவாகிய மழை அளவு விவரம் வருமாறு:-

சோழவரத்தில் அதிகபட்சமாக 8 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது. தாமரைப்பாக்கத்தில் 5 செ.மீ., பழனியில் 4 செ.மீ., பூந்தமல்லி, பாபநாசத்தில் தலா 3 செ.மீ., போளூர், சென்னை விமான நிலையம், ஆணைக்காரன்சத்திரம், மணிமுத்தாறு, பொன்னேரி, பட்டுக்கோட்டை, கொடைக்கானல், குமாரபாளையம், செங்குன்றத்தில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

காஞ்சீபுரம், கடலூர், மாமல்லபுரம், செம்பரம்பாக்கம், தாம்பரம், வேதாரண்யம், தஞ்சாவூர், முத்துப்பேட்டை, கேளம்பாக்கம், சங்கரன்கோவில், விருதுநகர், தென்காசி, செங்கோட்டை, அம்பாசமுத்திரத்தில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.


சென்னையில் 3 பருவநிலை நிலவ காரணம் என்ன?

சென்னையில் ஒரே நாளில் மழை, வெயில் மற்றும் பனிப்பொழிவு என 3 பருவநிலை நிலவுவதற்கு காரணம் என்ன? என்பது குறித்து பாலச்சந்திரனிடம் கேட்டபோது, “தற்போது வலுவான வானிலை இல்லை. காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து செல்லும்போது அதனுடைய அழுத்தத்தால் பரவலாக மழை பெய்கிறது. எங்கெல்லாம் காற்றழுத்த தாழ்வு நிலையை எதிர்க்கும் சூழல் நிலவுகிறதோ, அங்கெல்லாம் மழை பெய்கிறது. இதில் பகல் நேரத்துக்கும், இரவு நேரத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது” என்றார்.
 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

பயோ ஜியோகிராபி (Biogeography)

பூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா என செய்தி நிறுவனம் தகவல்
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது.
10 December, 2018, Mon 14:03 | views: 188 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் - ஆர்.எஸ்.எஸ்
03அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுரேஷ்
10 December, 2018, Mon 3:18 | views: 220 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குளிர்கால கூட்டத்தொடர்: நாடாளுமன்றம் நாளை கூடுகிறது - அயோத்தி பிரச்சினை புயலைக் கிளப்பும்
குளிர்கால கூட்டத்தொடருக்காக, நாடாளுமன்றம் நாளை கூடுகிறது. இதில் அயோத்தி பிரச்சினை புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10 December, 2018, Mon 3:15 | views: 151 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சோனியாவுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு - எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இன்று பங்கேற்கிறார்
டெல்லி சென்றுள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சோனியா காந்தியை சந்தித்து பேசினார். பா.ஜனதா வுக்கு எதிராக பிரமாண்ட கூட்டணி
10 December, 2018, Mon 3:13 | views: 152 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திருவண்ணாமலையில் வயது முதிர்வால் மூக்கு பொடி சித்தர் காலமானார்
திருவண்ணாமலையில் வயது முதிர்வால் மூக்கு பொடி சித்தர் இன்று காலை காலமானார்.
9 December, 2018, Sun 8:32 | views: 845 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
  Annonce
கடை BAIL விற்பனைக்கு
à négocier  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS