Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரசின் மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் போராளிகளுடன் ஹொலிவூட் நடிகர்கள்!!
France Tamilnews
காவற்துறையினரின் மோசமான வன்முறை - நாம் எதிர்பார்க்கவில்லை - காயப்பட்டவர்கள் வைத்தியசாலையில் வாக்குமூலம் - காணொளி
France Tamilnews
பிரதமர் - உள்துறைஅமைச்சர் - இணைந்த அறிக்கை - அதிகரித்துச் செல்லும் காயங்களும் கைதுகளும்!!
France Tamilnews
பரிசை உலுக்கிய இன்றைய கலவரம் - இடங்கள் குறிக்கப்பட்ட ஒரு படத்தொகுப்பு!!
France Tamilnews
மஞ்சள் மேலாடையுடன் எமானுவல் மக்ரோன் - நகரபிதாவின் குறும்பு!!
France Tamilnews
2-ம் ஆண்டு நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்துக்கு இன்று அமைதி ஊர்வலம்
5 December, 2018, Wed 3:02 GMT+1  |  views: 409

அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழகத்தின் முதல்-அமைச்சராகவும் இருந்து வந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு இதே நாளில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டு செப்டம்பர் 22-ந் தேதி சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் டிசம்பர் 5-ந் தேதி காலமானார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.வில் உள்கட்சி குழப்பம் உருவானது. தற்போது, பிரச்சினைகள் முடிவுக்கு வந்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இருந்து வழிநடத்தி வருகின்றனர்.

அமைதி ஊர்வலம்

இதேபோல், ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் சகோதரி மகன் டி.டி.வி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கி நடத்தி வருகிறார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற கட்சியையும், சசிகலாவின் சகோதரர் திவாகரன் அண்ணா திராவிட கழகம் என்ற கட்சியையும் தொடங்கியுள்ளனர்.

ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினமான இன்று (புதன்கிழமை) அ.தி.மு.க. சார்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே இருந்து காலை 9.30 மணிக்கு அமைதி ஊர்வலம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு

இதேபோல், டி.டி.வி.தினகரனை துணைப் பொதுச்செயலாளராக கொண்டு இயங்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பிலும் அதே அண்ணா சிலை அருகே இருந்து காலை 10 மணிக்கு அமைதி ஊர்வலம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரை மணி நேர இடைவெளியில் 2 கட்சிகளின் ஊர்வலமும் ஒரே இடத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க., அ.ம.மு.க. ஆகிய 2 கட்சிகளின் ஊர்வலமும் வாலாஜா சாலை வழியாக சென்று மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை சென்றடைகிறது. அங்கு இரு கட்சிகளின் நிர்வாகிகளும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள். இதனால், ஊர்வலப் பாதையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட இருக்கிறது.

மேலும், ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஜெ.தீபாவும், திவாகரனும் அவர்களது ஆதரவாளர்களுடன் வந்து அஞ்சலி செலுத்த இருக்கின்றனர்.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* மேல் தாடையை அசைக்கும் விலங்கு

  முதலை

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா என செய்தி நிறுவனம் தகவல்
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது.
10 December, 2018, Mon 14:03 | views: 184 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் - ஆர்.எஸ்.எஸ்
03அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுரேஷ்
10 December, 2018, Mon 3:18 | views: 216 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குளிர்கால கூட்டத்தொடர்: நாடாளுமன்றம் நாளை கூடுகிறது - அயோத்தி பிரச்சினை புயலைக் கிளப்பும்
குளிர்கால கூட்டத்தொடருக்காக, நாடாளுமன்றம் நாளை கூடுகிறது. இதில் அயோத்தி பிரச்சினை புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10 December, 2018, Mon 3:15 | views: 150 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சோனியாவுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு - எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இன்று பங்கேற்கிறார்
டெல்லி சென்றுள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சோனியா காந்தியை சந்தித்து பேசினார். பா.ஜனதா வுக்கு எதிராக பிரமாண்ட கூட்டணி
10 December, 2018, Mon 3:13 | views: 152 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திருவண்ணாமலையில் வயது முதிர்வால் மூக்கு பொடி சித்தர் காலமானார்
திருவண்ணாமலையில் வயது முதிர்வால் மூக்கு பொடி சித்தர் இன்று காலை காலமானார்.
9 December, 2018, Sun 8:32 | views: 843 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
  Annonce
கடை BAIL விற்பனைக்கு
à négocier  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS