Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அந்தமான் கடல்பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு
10 November, 2018, Sat 3:10 GMT+1  |  views: 164

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 1-ந்தேதி தொடங்கி பெய்து வருகிறது. தென் தமிழகத்தில் தான் அனேக இடங்களில் மழை பெய்கிறது.

இந்த நிலையில் குமரிக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் இன்றும் (சனிக்கிழமை) மழை பெய்யும் என்றும், அந்தமான் கடல்பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தாய்லாந்து, வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள மலேசியா தீபகற்ப பகுதியில் நேற்று முன்தினம் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மத்திய அந்தமான் கடல் பகுதியில் நிலவி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்து வரும் 3 தினங்களில் மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வலுப்பெறுகிறது.

வலுப்பெறும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இருக்கிறது. புயல் மாற்றம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வருகிற 12-ந்தேதி சரியாக கணித்து சொல்ல முடியும். இது புயலாக மாறும் பட்சத்தில் தமிழகத்தில் ஓரளவுக்கு நல்ல மழை இருக்கும். கண்டிப்பாக மழை இருக்க வாய்ப்பு அதிகளவில் உள்ளது.

புயலாக மாற வாய்ப்பு உள்ளதால், 10-ந்தேதி (இன்று) அந்தமான், தென்கிழக்கு கடல் பகுதிக்கும், 11-ந்தேதி (நாளை) வங்கக்கடல், வட அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கும், 12-ந்தேதி (நாளை மறுநாள்) மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு, மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும், 13-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம்.

மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல், இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் (நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூரில்) கனமழை பெய்யும்.

சென்னையை பொறுத்த வரையில் மழைக்கு வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் முக்கியமான இடங்களில் பெய்த மழை அளவு வருமாறு:-

சீர்காழியில் 7 செ.மீ., நன்னிலத்தில் 5 செ.மீ., குடவாசலில் 4 செ.மீ., நீடாமங்கலம், மயிலாடுதுறை, சேத்தியாதோப்பு, சூரங்குடி, மரக் காணம், ராமேசுவரம், நாகப்பட்டினம், வலங்கைமான், சிதம்பரம், பரங்கிப்பேட்டையில் தலா 3 செ.மீ., காரைக்கால், திருவாரூர், பாபநாசம், தரங்கம்பாடி, பாம்பன், வேதாரண்யம், மணமேல்குடி, ஒட்டப்பிடாரம், ஸ்ரீமுஷ்ணம், நெய்வேலி, தொண்டி, திருத்துறைப்பூண்டி, திருவிடை மருதூர், ஸ்ரீவைகுண்டத்தில் தலா 2 செ.மீ. உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சிஸ்மோலொஜி (Seismology)

பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் திருட்டு நடந்ததை மோடி ஒப்புக் கொண்டுள்ளார் : ராகுல்காந்தி சொல்கிறார்
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் திருட்டு நடந்திருப்பதை மோடி சுப்ரீம் கோர்ட்டில் மோடி ஒப்புக் கொண்டு இருக்கிறார் என்று காங்கிரஸ்
14 November, 2018, Wed 2:48 | views: 236 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பா.ஜ.க. எதிர்க்கட்சிகளுக்கு ஆபத்தான கட்சி ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி
ராஜீவ்காந்தி கொலையாளிகள் 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்றும், பா.ஜ.க. எதிர்க்கட்சிகளுக்கு ஆபத்தான
14 November, 2018, Wed 2:45 | views: 232 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தமிழகத்தை நெருங்குகிறது கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்ய வாய்ப்பு
கஜா புயல் தமிழகத்தை நெருங்குகிறது. இதன் காரணமாக இன்று இரவு முதல் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.
14 November, 2018, Wed 2:42 | views: 267 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சபரிமலை வழக்கில் திடீர் திருப்பம் : சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணை
அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கடும் எதிர்ப்பு எதிரொலி. சபரிமலை வழக்கில் திடீர் திருப்பம். சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும்
14 November, 2018, Wed 2:38 | views: 205 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால்தான் சோனியா-ராகுல் இருவரும் ஜாமீன் கேட்கும் நிலை ஏற்பட்டது - பிரதமர் மோடி பேச்சு
பணமதிப்பு நீக்க நடவடிக்கையை ஆதரித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த நடவடிக்கையால்தான் சோனியா-ராகுல் இருவரும் ஜாமீன் கேட்கும்
13 November, 2018, Tue 3:26 | views: 278 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS