Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்குங்கள் தமிழக அமைச்சரவையில் தீர்மானம்
10 September, 2018, Mon 4:21 GMT+1  |  views: 251

தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்து முடிந்த நிலையில், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திராவிடர் இயக்கத்தின் முன்னோடி தலைவரும், சமுதாய முன்னேற்றத்துக்காக பாடுபட்டவரும், ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்ற வகையில் வாழ்நாள் முழுவதும் ஏழை மக்களுக்காக உழைத்தவருமான முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது அளிப்பதற்கு மத்திய அரசுக்கு பரிந்துரைக்க இன்றைக்கு அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

உலக முழுவதும் வாழ்கிற 10 கோடி தமிழ் மக்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிற சமூக நீதி காத்த வீராங்கனை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க அமைச்சரவை ஒப்புதலுடன் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பரில் பரிந்துரை செய்தது. அந்த கோரிக்கையை மீண்டும் மத்திய அரசுக்கு வலியுறுத்தவும் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டு மக்களையும், தமிழ் மொழியையும் தன் உயிரினும் மேலாக நேசித்தவரும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக எண்ணில்லா திட்டங்களையும் தந்தவருமான, சரித்திரம் புகழும் திட்டமான சத்துணவு திட்டம் தந்தவருமான மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை மத்திய ரெயில்வே நிலையத்துக்கு (சென்டிரல்) அவருடைய பெயரை சூட்ட மத்திய அரசுக்கு பரிந்துரைக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக, உலக எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக எம்.ஜி.ஆர். பேரவை மாநாட்டில், நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, தமிழக அமைச்சரவை கூட்டத்தில், சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைச்சர்களுக்கும் எங்களது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கோடிக்கணக்கான எம்.ஜி.ஆர். தொண்டர்களின் 30 ஆண்டுகால கோரிக்கை இப்போது நிறைவேறியுள்ளது. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா முடிந்த இந்த ஆண்டில், அவரது புகழுக்கு மகுடம் சேர்க்கும் வகையில் மேலும் பல அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதுபோல, அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஏனைய 3 தீர்மானங்களையும் வரவேற்கிறேன்” என்று கூறியுள்ளார்.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* தபால்தலையை (Stamp) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு

  மலேசியா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
23 September, 2018, Sun 7:30 | views: 515 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?- கைதான கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி
பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக 307-வது சட்டப்பிரிவின் கீழ் கொலை முயற்சி கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? என கைது
23 September, 2018, Sun 7:29 | views: 230 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார் எம்.எல்.ஏ. கருணாஸ்
சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் போலீசாரால் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத்
23 September, 2018, Sun 7:27 | views: 175 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாகர்கோவில் மாநகராட்சி ஆகிறது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
23 September, 2018, Sun 7:25 | views: 132 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தயே புயல்: சத்தீஷ்கர் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
தயே புயலால் சத்தீஷ்கர் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
22 September, 2018, Sat 8:04 | views: 325 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS