Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
சென்னையில் நடந்த புகழ் வணக்க கூட்டத்தில் கருணாநிதிக்கு தேசிய தலைவர்கள் புகழாரம்
31 August, 2018, Fri 4:17 GMT+1  |  views: 274

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி செலுத்தும் வகையில் ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ என்ற தலைப்பில் சென்னையில் நேற்று புகழ் வணக்க கூட்டம் நடைபெற்றது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இந்தக்கூட்டத்திற்கு, தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்கினார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.

கூட்டம் தொடங்கியதும், மேடையில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவேகவுடா, மத்திய மந்திரி நிதின் கட்காரி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், புதுச்சேரி மாநில முதல்- அமைச்சர் வி.நாராயணசாமி, தேசிய மாநாடு கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரபுல் படேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், தெலுங்குதேச கட்சி எம்.பி. ஓய்.எஸ்.சவுத்ரி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. டெரிக் ஓ பிரையன், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சோம்நாத் பாரதி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. டி.ராஜா ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தொடர்ந்து, கூட்டத்திற்கு வந்த தலைவர்களை வரவேற்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பேசினார்.

கூட்டத்தில், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா பேசியதாவது:-

இந்திய அரசியலில் மிகப்பெரிய தலைவராக விளங்கியவர் கருணாநிதி. இந்த நாடு மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவரை இழந்துவிட்டது. பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் மண்டல் கமிஷனை அமல்படுத்தியதில் முக்கிய பங்கு ஆற்றியவர்.

1996-ம் ஆண்டு என்னை பிரதமராக்கியதில் முக்கிய பங்கு ஆற்றியவர். மத்தியில் கூட்டணி அரசை நிலைதன்மை உடையதாக திகழச் செய்வதில் கருணாநிதிக்கு முக்கிய பங்கு உண்டு. தமிழக மக்களின் வளர்ச்சிக்காக உள்ளார்ந்த மனதோடு பாடுபட்டவர் கருணாநிதி. வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக பாடுபட்ட கருணாநிதியின் வழியில், கருணாநிதி விட்டு சென்ற பொறுப்புகளை நீங்கள் (மு.க. ஸ்டாலின்) தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய மந்திரி நிதின் கட்காரி பேசியதாவது:-

நெருக்கடி நிலையின்போது, ஜனநாயகத்தை காப்பதில் இந்திய அளவில் தனது பெரிய பங்களிப்பை வழங்கியவர் கருணாநிதி. அவசர நிலை பிரகடனத்தை முதல் முதலில் எதிர்த்தது கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு தான். அவசர நிலை பிரகடனத்தின் போது பாரதீய ஜன சங்கத்துடன் அவர் இணைந்து செயல்பட்டார். மத்தியில் கூட்டணி அரசை உருவாக்குவதில் முன்னோடியாக கருணாநிதி திகழ்ந்தார். 1999-ம் ஆண்டு அமைந்த வாஜ்பாய் தலைமையிலான மத்திய ஆட்சியில் சிறந்த தோழமை கட்சி தலைவராக கருணாநிதி விளங்கினார். வாஜ்பாயுடன் நல்ல நட்புறவுடன் இருந்தார்.

பாரம்பரியத்தை பாதுகாப்பது உள்பட பல்வேறு வகையில் திராவிட கொள்கைகளுக்கும், பா.ஜ.க. கொள்கைகளுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. உலக பொதுமறை கொடுத்த திருவள்ளுவருக்கு சிலை அமைத்து, திருக்குறளை அழிவு இல்லாத செல்வமாக மாற்றியவர் கருணாநிதி. திருவள்ளுவரை தி.மு.க.வும் கொண்டாடுகிறது, பா.ஜ.க. வும் கொண்டாடுகிறது. மனிதர்களின் சிறப்புகளை அவர்களின் கடின உழைப்பை வைத்துத்தான் அளவிட முடியும் (இவ்வாறு குறிப்பிட்ட நிதின் கட்காரி, வெள்ளத்தனைய மலர் நீட்டம் என்ற திருக்குறளை படித்தார்). இந்தியா, சீனா பிரச்சினையின்போது மத்திய அரசுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கியவர்.

இவ்வாறு அவர் பேசினார்.

பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் பேசியதாவது:-

கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த சமயத்தில் அவர் கொண்டுவந்த திட்டங்கள் மக்களுக்கான வரப்பிரசாதமாக அமைந்தன. நல்ல ஆரோக்கியமான அரசாங்கம், அவரது தலைமையிலான ஆட்சியில் தமிழகம் கண்டது. தகவல் தொழில்நுட்பம், கட்டமைப்பு, வேலைவாய்ப்பு, போக்குவரத்துத்துறை போன்றவற்றில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக கொண்டுவந்தார். தமிழக மக்களுக்காகவே உழைத்து மடிந்த கருணாநிதி புகழ் என்றைக்கும் குறையாது. அவரது உடலுக்கு அழிவு இருக்கலாம், அவரது சாதனைகளுக்கு, புகழுக்கு என்றும் அழிவில்லை. தி.மு.க. தலைவராக பொறுப்பேற்றிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு பல பொறுப்புகள் உண்டு. கருணாநிதியின் எண்ணற்ற லட்சிய கனவுகளை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

உலக தமிழர்களுக்காக உரத்த குரல் எழுப்பிய தமிழின தலைவர் கருணாநிதி. பெரியார், அண்ணா வழியில் சமூகநீதி காக்க போராடிய ஒப்பற்ற தலைவர். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சிக்காக குரல் கொடுத்தவர். புதுச்சேரியில் கவர்னர் கிரண்பெடி எங்கள் அரசுக்கு தினமும் தொல்லை தருகிறார். அதைபார்க்கும்போது மாநில சுயாட்சி எனும் கோட்பாட்டை முன்வைத்த கருணாநிதி சிந்தனை எவ்வளவு ஆணித்தரமான உண்மை என்பது தெரியவருகிறது. புதுச்சேரி-காரைக்காலில் உள்ள தெருக்களுக்கு கருணாநிதி பெயர் சூட்டப்பட்டு உள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அவருக்கென தனி இருக்கை வைத்துள்ளோம். எங்களை பார்த்தாலாவது பிறர் கருணாநிதியை எப்படி மதிப்பது? என்று தெரிந்து கொள்ளட்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரபுல் படேல் பேசியதாவது:-

தமிழகத்தின் தலைவராக, ஒரு நல்ல மக்கள் தலைவராக திகழ்ந்த கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது நிச்சயம் வழங்கப்பட வேண்டும். அது அவருக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்குமே மிகப்பெரிய பெருமை ஆகும். அவர் மறைவை தொடர்ந்து தி.மு.க. தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் மு.க.ஸ்டாலின், அவரது சாதனை பாதையையும், மக்கள் நல பணியையும் தொடரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி பேசியதாவது:-

கூட்டாட்சி கொள்கை மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பில் உறுதியுடன் செயல்பட்ட கருணாநிதியின் புகழ் என்றைக்கும் மங்காது. அவரது புகழ் என்றைக்கும் மக்கள் மனதில் நிலை கொண்டிருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் பேசியதாவது:-

கருணாநிதி தொட்ட துறைகளில் எல்லாம் சிகரத்தை தொட்டவர். சிகரத்தை தொட்ட தனிப்பெரும் தலைவராக கருணாநிதி திகழ்ந்தார். சரித்திர நாயகனாக இருந்த கருணாநிதிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும். கருணாநிதி பாரத ரத்னா பெறுவதற்கு மட்டும் உரியவர் அல்ல. நோபல் பரிசுக்கும் மேலான ஒன்றை பெற தகுதி பெற்றவர்.

தி.மு.க.வை தமிழகத்தில் மட்டும் அல்ல நாடு முழுவதும் எடுத்துச்செல்லும் ஆற்றல் மு.க.ஸ்டாலினுக்கு இருக் கிறது. அதற்கு ஆதரவாக இருக்கவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

தெலுங்குதேச கட்சியின் எம்.பி. ஒய்.எஸ்.சவுத்ரி பேசியதாவது:-

இந்திய அரசியல் தலைவர்களில் மிக முக்கியமான தலைவர் கருணாநிதி. தமிழுக்காக அரும்பணியாற்றியவர். தெலுங்கு தேச மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். என்.டி.ராமராவ் மீது தனிப்பட்ட பாசம் கொண்டவராக விளங்கினார். அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. டெரிக் ஓ பிரையன் பேசியதாவது:-

கருணாநிதியின் சிந்தனைகளும், கொள்கைகளும் போற்றப்பட வேண்டும். கூட்டாட்சி தத்துவத்தை மதிக்கும் கட்சிகள் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து, பா.ஜ.க.வின் ஆட்சிக்கு முடிவுகட்டி, டெல்லி பாராளுமன்றத்தை கைப்பற்ற வேண்டும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் தீவிரமாக உழைக்கவேண்டும். தி.மு.க. தலைமையிலான கூட்டணி, இங்கிருக்கும் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்று சாதனை படைக்கவேண்டும். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக மேடையில் இருப்பவர்கள் அனைவரும் கூட்டணி அமைக்க வேண்டும். பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சோம்நாத் பாரதி பேசியதாவது:-

முழுநேரம் மக்களுக்காக வாழ்ந்த கருணாநிதியின் மறைவு தமிழர்களுக்கும், தமிழகத்துக்கும் மிகப்பெரிய இழப்பு என்பது உண்மை. ஆனால் இக்கட்டான இச்சூழ்நிலையில் அவரது புகழை தொடரச்செய்யும் பொறுப்பு மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. கருணாநிதி வழியில் மு.க.ஸ்டாலினும் செயல்பட்டு தமிழக மக்களுக்கு உழைத்திட வேண்டும் என்று ஆம் ஆத்மி வாழ்த்துகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் பேசியதாவது:-

கருணாநிதி பன்முக கொண்டவராக விளங்கியவர். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு பிரச்சினை என்றால், நான் காங்கிரஸ் தலைவர்களிடம் செல்ல மாட்டேன். கருணாநிதியிடம் செல்வேன். உடனே தீர்வு கிடைத்து விடும். வேலைவாய்ப்பில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு கொடுத்த தென் இந்தியாவின் முதல்-அமைச்சர் அவர்தான். அவரை தொடர்ந்து தான் கேரளா, ஆந்திரா அரசுகள் கொடுத்தன.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தின் நிறைவாக, சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மா.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

கலந்துகொண்டவர்கள்

கூட்டத்தில், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. தேசிய செயலாளர் முரளிதரராவ், பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், துணைத் தலைவர் எச்.வசந்தகுமார், முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி துணை தலைவர் டாக்டர் ஈ.எஸ்.எஸ்.ராமன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், தயாநிதிமாறன், பேராயர் எஸ்றா சற்குணம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பிளானிமீட்டர் (Planimeter)

பரப்பை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சர்வதேச அளவில் மாநாட்டு அரங்கம்: பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்
டெல்லியில், சர்வதேச அளவிலான மாநாடுகள், கண்காட்சிகள் உள்ளிட்டவற்றை நடத்தும் வகையிலான அரங்கம் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டவுள்ளார்.
20 September, 2018, Thu 3:55 | views: 209 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அணைகளை பாதுகாக்க ரூ.3,466 கோடியில் திட்டம் தமிழகத்துக்கு ரூ.543 கோடி; மத்திய மந்திரிசபை ஒப்புதல்
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், மத்திய பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 198 அணைகளை பாதுகாத்து பராம
20 September, 2018, Thu 3:54 | views: 143 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமைச்சர் தங்கமணி பதவி விலக வேண்டும் : மு.க.ஸ்டாலின் அறிக்கை
காற்றாலை மின்சார ஊழல் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு வழிவிடும் வகையில் மின்துறை அமைச்சர் தங்கமணி பதவி விலக வேண்டும்
20 September, 2018, Thu 3:53 | views: 133 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயமா?
இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயமா? என்பது குறித்து சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.
20 September, 2018, Thu 3:52 | views: 128 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது பெறப்பட்ட அறிக்கைகள் என்னென்ன?
ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது பெறப்பட்ட அறிக்கைகள், கடித விவரங்களை தெரிவிக்க கவர்னர் மாளிகைக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டு
20 September, 2018, Thu 3:50 | views: 124 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS