Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
மோடி அரசுக்கு பாடம் புகட்டுவோம் தி.மு.க. தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
29 August, 2018, Wed 3:51 GMT+1  |  views: 542

தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. வின் தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தி.மு.க. தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் பொதுக்குழுவில் பேசியதாவது:-

நான் தலைவர் கலைஞர் (கருணாநிதி) இல்லை, அவர் போல் பேசத் தெரியாது, பேசவும் முடியாது. அவரைப் போல் மொழியை ஆளத்தெரியாது. ஆனால், எதையும் முயன்று பார்க்கக்கூடிய துணிவைக் கொண்டவனாக உங்கள் முன்னால் நிற்கிறேன்.

“தந்தை சொல்மிக்க மந்திரமில்லை” என்று நான் வாழ்ந்ததாக கலைஞர் என்னை பாராட்டி எழுதினார். “உழைப்பு, உழைப்பு, உழைப்பு” என்று எனது பெயருக்கு விளக்கமும் சொல்லி உச்சி முகர்ந்தார். அந்த பாராட்டு வார்த்தைக்கு உதாரணமானவனாக, என் வாழ்நாள் முழுவதும் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்றுதான் நான் வாழ்வேன். “என்னை விட கழகம் பெரிது” என்றார் கலைஞர். அவருடைய வழியில் நானும் சொல்கிறேன் “என்னை விட கழகம் பெரிது”. தி.மு.க. தான் எந்த தனி மனிதனையும் விட பெரிது. உதயசூரியன் சின்னம் தான் எந்த தனி மனிதனையும் விட பெரிது. கருப்பு, சிவப்பு என்ற அந்த இருவண்ணக் கொடி தான் எந்த தனி மனிதனையும் விட பெரிது.

இந்த மேடையில் நடை பெறும் காட்சியைப் பார்க்க கலைஞர் இல்லையே என்பதுதான் எனது குறை. இருந்தாலும், கலைஞர் இடத்தில் வாழும் திராவிடத் தூணாக நம்முடைய பேராசிரியர் க.அன்பழகன் இருக்கிறார்.

“எனக்கு அக்கா உண்டு, அண்ணன் இல்லை, பேராசிரியர் தான் உடன் பிறவா அண்ணன்” என்று பலமுறை கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, எனக்கு க.அன்பழகன் பெரியப்பா. அப்பா இல்லை என்றாலும் பெரியப்பா இங்கே இருக்கிறார். அப்பாவுக்கு முன்பே என்னைத் தலைவராக முன்மொழிந்தவர் பெரியப்பா தான். அப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவது 100 மடங்கு சிரமம் என்றால், பெரியப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவது 200 மடங்கு சிரமமானது என்பது எனக்கு நன்றாக தெரியும்.

“அடுத்த தலைவர் தலைமைக்கான தகுதி மு.க.ஸ்டாலினுக்குத்தான் இருக்கிறது” என்று பேசியவர் பெரியப்பா. அந்த பேராசிரியருக்கு முன்னால் நின்று தலைவராக தேர்வு பெறுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

நம்முடைய தி.மு.க. என்பது பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம் எனும் நான்கு தூண்களால் எழுப்பிய கோட்டை. சுயமரியாதை எனும் முதுகெலும்பில்லாத மாநில அரசையும், சமத்துவத்தையும், சமூக நீதியையும், பகுத்தறிவு சிந்தனைகளையும் சிதைக்கும் மத்திய அரசையும் பார்க்கும் போது நமக்கெல்லாம் வேதனையாக இருக்கிறது.

தமிழக மக்களின் அனைத்து நலன்களையும் கூறு போட்டு பங்கிட்டு கொள்ளும் பகல் கொள்ளைகளில் அரசு என்ற பெயரால் இன்றைய மாநில அரசு நிலவிக்கொண்டிருப்பதை இதயத்தில் ரண வலியோடு கண்டு கொண்டிருக்கிறோம்.

இந்த சமூக தீமைகளை அகற்றி தமிழகத்தை திருடர்கள் கையிலிருந்து விடுவிப்பது நம்முடைய முதல் கடமையாக இருக்கவேண்டும்.

வெளியில் இருக்கும் போராட்டங்களுக்கு நாம் தயாராகும் முன் நாம் யார்? நம் கொள்கைகள் என்ன? நமக்குள் இருக்கும் குறைகள் என்ன? காலத்திற்கேற்ப நாம் மேற்கொள்ளவேண்டிய மாற்றங்கள் எவை? இந்தக் கேள்விகள் என்னை சில நாட்கள் தூங்க விடவில்லை. விழித்துக்கொண்டே ஒரு கனவு கண்டேன். ஒரு அழகான எதிர்காலத்தை நான் கனவு கண்டேன்.

இந்த நாளில் அந்த கனவின் சில துகள்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். நான் நம் கழகம், நம் தமிழினம், நம் நாடு நம் உலகம் இவை அனைத்தும் புத்தம் புதியதாய், பேரழகாய் மகிழ்ச்சியில் வாழும் கனவு அது. காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொள்ளா விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும்.

இன்று நீங்கள் பார்க்கும், கேட்கும் மு.க.ஸ்டாலின் ஆகிய நான். புதிதாய் பிறக்கிறேன். இது வேறு ஒரு நான்.

தி.மு.க.வின் மரபணுக்களோடும், நல்ல ஒரு எதிர்காலத்தை உருவாக்கும் கனவுகளோடும் இதோ உங்கள் முன்னால் பிறந்திருக்கிறேன். என்னோடு உடன் பிறந்திருக்கக்கூடிய கோடிக்கணக்கான உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள். இது புதிய நாம். அந்த அழகான எதிர்காலத்தில் நம் கழகத்தின் கொள்கைகள் என்ன?

பகுத்தறிவு என்பது அறிவெனும் விழி கொண்டு உலகை காண்பது என்பதை உரக்கச் சொல்லுதல். ஆணுக்கு பெண் இங்கு சமம் என மதித்தல். திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் சம உரிமை பெற்றுத்தருதல். தனி மனித மற்றும் ஊடகக் கருத்துச் சுதந்திரத்தை மீட்டெடுத்தல், கருத்துச் சுதந்திரத்தை போற்றிப் பாதுகாத்தல். பிறமொழிகளை அழித்து இந்தியா முழுவதுக் கும் மதச்சாயம் பூச நினைக்கும் கட்சிகளை எதிர்த்தல். இவை எல்லாம் என் நீண்ட கனவின் சில துகள்கள். இந்த எதிர்காலம் தூரத்தில் இல்லை. இதோ இந்த நொடியிலிருந்து மெய்ப்பட போகிறது.

இந்த கனவை முழுமையாக மெய்ப்பிக்க நான் துடித்துக்கொண்டிருக்கிறேன். அதை தனி மனிதனாக என்னால் செய்ய இயலாது என்பதையும் நான் அறிந்தே பேசிக் கொண்டிருக்கிறேன்.

என் உயிரினும் மேலான கலைஞரின் அன்பு உடன் பிறப்புகளே, நீயில்லாமல் என்னால் இந்த பெருங்கனவை மெய்ப்பிக்க முடியாது. இது என் கனவு மட்டுமல்ல, நம் கனவு. நம் கழகத்தின் கனவு. ஏன், இந்த தமிழகத்தின் கனவு அது தான். வா என்னோடு கை கோர்க்க வா.

வா இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வா. முதுகெலும்பில்லாத இந்த மாநில அரசை தூக்கி எறிய வா. இந்த அழகான எதிர்காலத்தை ஒன்றாக நாம் மெய்பிப்போம்.

நான் முன்னே செல்கிறேன். நீங்கள் பின்னே வாருங்கள் என்று நான் அழைக்கவில்லை. நாம் அனைவரும் சேர்ந்தே செல்வோம் என்று அழைக்கிறேன்.

தலைமைக்கு அனைவரும் ஒன்றுதான். நானும் ஒரு தொண்டன் தான். இங்கு அனைவரும் சமம். யார் பெரியவர் என்ற போட்டியில் சுயநலத்தில் கட்சியின் எதிர்காலம் குறித்தும் கவலைப்படாதவர்களாக யாரும் ஆகி விடக் கூடாது. அதற்கு தலைமைக்கு கட்டுப்பட்டவர்களாக நீங்கள் இருக்க வேண்டும்.

உங்களின் எண்ணங்களின் பிரதிபலிப்பாக தலைமை நிச்சயமாக இயங்கும், இயங்கும், இயங்கும். கட்சி தோழர்களே, இது காலத்தின் பேரழைப்பு. தலைமை ஏற்கும் கடமையும், கட்டாயமும் நம்மை அழைக்கிறது. இந்த அழைப்பு தென்றலை தீண்ட அல்ல. தீயைத் தாண்டுவதற்கு. ஓடுவோம், ஓடுவோம் வாழ்க்கை நெறி முறைகளின் ஓரத்திற்கே ஓடுவோம். நம் சொந்த நலன்களை மறந்து தமிழ்நாட்டின் தமிழ் மக்களின் நன்மைகளுக்காக உழைப்போம், உழைப்போம், வெற்றி அடையும் வரை உழைப்போம். உலகமே வியக் கும் சமூகநீதி கொள்கைகளின் தாய் வீடு நம்முடைய தி.மு.க.. தந்தை பெரியார் நமக்கு கற்றுத்தந்த சுயமரியாதை, பெற்றுத் தந்த சமத்துவம் இவற்றிலிருந்து நாம் ஒரு நாளும் பின் வாங்கப் போவதில்லை.

என்னுள் துடிக்கும் இதயம் கலைஞர் தந்தது. அவர் அண்ணாவிடம் வாங்கிய இதயம் அது. எதையும் தாங்கும் இதயம் இதைத் தாங்காதா? என் கடைசி மூச்சு உள்ளவரை, என் கடைசி இதயத் துடிப்பு இருக்கின்ற வரை, என் உயிரினும் மேலான தமிழினமே உனக்காக நான் உழைப்பேன். உனக்காக நான் போராடுவேன் என்ற உறுதிமொழியுடன் விடை பெறுகிறேன்.

உங்களையெல்லாம் நம்பித்தான் இங்கே இருக்கக்கூடிய அத்துனை பேரையும் நம்பித்தான், இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு வரமுடியாத நிலையில் இருக்கக்கூடிய இந்த இயக்கத்திலே அத்தனை தொண்டர்களுடைய உணர்வில் நம்பிக்கை வைத்துத்தான் இந்த பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டிருக்கின்றேன். இந்த தைரியத்தை, இந்த தெம்பை எனக்கு இப்படி வழங்கியிருப்பதற்கு, யார் காரணம் என்று சொன்னால், அதுவும் நம்முடைய தலைவர் கலைஞர் தான். இவ்வாறு அவர் பேசினார்.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு எது?
  சுவிட்சர்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சர்வதேச அளவில் மாநாட்டு அரங்கம்: பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்
டெல்லியில், சர்வதேச அளவிலான மாநாடுகள், கண்காட்சிகள் உள்ளிட்டவற்றை நடத்தும் வகையிலான அரங்கம் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டவுள்ளார்.
20 September, 2018, Thu 3:55 | views: 126 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அணைகளை பாதுகாக்க ரூ.3,466 கோடியில் திட்டம் தமிழகத்துக்கு ரூ.543 கோடி; மத்திய மந்திரிசபை ஒப்புதல்
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், மத்திய பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 198 அணைகளை பாதுகாத்து பராம
20 September, 2018, Thu 3:54 | views: 110 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமைச்சர் தங்கமணி பதவி விலக வேண்டும் : மு.க.ஸ்டாலின் அறிக்கை
காற்றாலை மின்சார ஊழல் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு வழிவிடும் வகையில் மின்துறை அமைச்சர் தங்கமணி பதவி விலக வேண்டும்
20 September, 2018, Thu 3:53 | views: 112 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயமா?
இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயமா? என்பது குறித்து சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.
20 September, 2018, Thu 3:52 | views: 108 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது பெறப்பட்ட அறிக்கைகள் என்னென்ன?
ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது பெறப்பட்ட அறிக்கைகள், கடித விவரங்களை தெரிவிக்க கவர்னர் மாளிகைக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டு
20 September, 2018, Thu 3:50 | views: 106 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS